Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி

Get the most accurate TN Board Solutions for Class 9 Tamil Chapter 06.5 புணர்ச்சி here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 9 Tamil. Our expert-created answers for Class 9 Tamil are available for free download in PDF format.

Detailed Chapter 06.5 புணர்ச்சி TN Board Solutions for Class 9 Tamil

For Class 9 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 9 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 06.5 புணர்ச்சி solutions will improve your exam performance.

Class 9 Tamil Chapter 06.5 புணர்ச்சி TN Board Solutions PDF

கற்பவை கற்றபின்

 

Question 1. எழுத்து வகை அறிந்து பொருத்துக.
1. இயல் - அ) உயிர் (முதல் உயிரீறு)
2. ஆணி - இ) மெய்ம்முதல் மெய்யீறு
3. வரம் - ஈ) மெய்ம் முதல் உயிரீறு
Answer:
1) அ
2) இ
3) ஈ
In simple words: This question asks you to match Tamil words with their grammatical categories related to how sounds combine. You need to identify if a word starts or ends with a vowel or a consonant.

🎯 Exam Tip: To correctly match these, focus on the first and last letters of each word to determine if they are vowels (உயிர்) or consonants (மெய்).

 

Question 2. புணர்ச்சிகளை "முதல், ஈற்றுச்" சொல் வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் - அ) மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை - ஆ) மெய்யீறு + உயிர் முதல்
3. கோல் + ஆட்டம் - இ) உயீரிறு + உயிர் முதல்
4. மண் + சரிந்தது - ஈ) உயிரீறு + மெய்ம் முதல்
Answer:
1) ஆ
2) இ
3) ஈ
4) அ
In simple words: This involves pairing combined words with the type of ending and beginning sounds they have. For example, some words end with a consonant and start with a vowel.

🎯 Exam Tip: Practice identifying the last letter of the first word (நிலைமொழி) and the first letter of the second word (வருமொழி) to classify the type of sound combination.

 

Question 3. சேர்த்து எழுதுக:
அ) தமிழ் + பேசு =
ஆ) தமிழ் + பேச்சு =
இ) கை + கள் =
ஈ) பூ + கள் =
Answer:
அ) தமிழ் + பேசு - தமிழ் பேசு
ஆ) தமிழ் + பேச்சு - தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் = கைகள்
ஈ) பூ + கள் = பூக்கள்
In simple words: This task requires you to join two separate Tamil words together. When words combine, their sounds can sometimes change or blend, creating a new form.

🎯 Exam Tip: Pay attention to the sound changes that occur when words combine, especially when a consonant or vowel is added or changed at the joining point.

 

Question 4. யுடன் இணைக்க.
அ) பூ + இனம் =
ஆ) இசை + இனிக்கிறது =
இ) திரு + அருட்பா =
ஈ) சே + அடி =
Answer:
அ) பூ + இனம் – பூவினம் (வகர உடம்படு மெய்)
ஆ) இசை + இனிக்கிறது - இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
இ) திரு + அருட்பா - திருவருட்பா (வகர உடம்படு மெய்)
ஈ) சே + அடி - சேவடி(வகர உடம்படுமெய்)
In simple words: You need to combine these word pairs. When a vowel-ending word meets a vowel-starting word, a "connecting consonant" (உடம்படு மெய்) like 'ய' or 'வ' is often added between them.

🎯 Exam Tip: Remember that 'ய' is used when the first word ends in 'இ, ஈ, ஐ' and 'வ' is used when it ends in 'அ, ஆ, உ, ஊ, ஓ' or 'ஏ'.

சிந்தனை கிளர் வினாக்கள்:

 

அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.
Answer:
• குற்றியலுகரத்தில் வரும் "உ" கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும். இந்த சுருக்க ஒலிப்புதான் அதன் சிறப்பு.
• முற்றியலுகரத்தில் வரும் "உ" கரமானது தன் ஒரு மாத்திரை அளவில் குறையாது ஒலிக்கும். இதன் ஒலிப்பு வழக்கமான முழு அளவில் இருக்கும்.
In simple words: குற்றியலுகரம் is when the 'உ' sound becomes half a beat shorter, but in முற்றியலுகரம், the 'உ' sound keeps its full one-beat length.

🎯 Exam Tip: Distinguish between these by focusing on the 'உ' sound's duration; shorter for குற்றியலுகரம் and full for முற்றியலுகரம்.

 

ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதுவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.
Answer: ஒரு சொல்லைப் பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி - எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும் போது ஏற்படும் ஒலி நிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும். வல்லினம், மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொற்சேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாததாகும். அவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத மிகவும் உதவும்.
In simple words: Learning 'புணர்ச்சி இலக்கணம்' (grammar of word combination) helps us write prose correctly. It teaches how words join and change sounds, which is important for proper word usage in sentences.

🎯 Exam Tip: Highlight that understanding how words combine ensures correct pronunciation, spelling, and flow in written prose, making it clear and grammatically sound.

 

இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக. தமிழின் 'தொன்மை + ஆன' இலக்கண 'நூல் + ஆகிய' 'தொல்காப்பியம் + இல்' 'சிற்பம் + கலை' பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். 'அ + கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். 'தமிழக + சிற்பம் + கலை' யின் தோற்றத்திற்கான சான்றாக 'இதனை + கொள்ளலாம்'. சிலப்பதிகாரத்தில் 'கண்ணகிக்கு + சிலை' வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல 'சுதை + சிற்பங்கள்' இருந்ததை மணிமேகலை மூலம் அறிய + முடிகிறது'.
Answer:
1. தொன்மை + ஆன = தொன்மையான
2. நூல் + ஆகிய = நூலாகிய
3. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
4. சிற்பம் + கலை = சிற்பக்கலை
5. அ + கல்லில் = அக்கல்லில்
6. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
7. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
8. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
9. சுதை + சிற்பங்கள் = சுதை சிற்பங்கள்
10. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது
In simple words: This involves taking pairs of words from the given passage and combining them into single words. This shows how words merge in Tamil, sometimes changing their form.

🎯 Exam Tip: Read the passage carefully to identify all the word pairs indicated by a '+' sign and apply the appropriate rules for combining them into a single word.

 

ஈ) படக்காட்சியிலிருந்து இரு சொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக.
Answer:
அ) நிறைகுடம் = நிறை + குடம்
நிறைகுடம் – இயல்புப் புணர்ச்சி
ஆ) உழவுத் தொழில் = உழவு + தொழில்
உழவுத் தொழில் – தோன்றல் விகாரப் புணர்ச்சி
In simple words: You need to look at the picture (from the source, not included here), form two-word phrases based on it, and then identify the type of 'புணர்ச்சி' (word combination) for each. This helps connect visuals to grammar.

🎯 Exam Tip: When analyzing the picture, choose descriptive phrases that clearly demonstrate either 'இயல்புப் புணர்ச்சி' (natural combination) or 'விகாரப் புணர்ச்சி' (combination with changes).

மொழியை ஆள்வோம்.

படித்துச் சுவைக்க.

வான் தந்த பாடம்
எத்தனை பெரிய வானம்!
இத்தரை, கொய்யாப் பிஞ்சு,
நீ அதில் சிற்றெறும்பே,
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித்தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள் தாம் பேசல் என்னே!
- பாவேந்தர் பாரதிதாசன்

Answer:
The Lesson the sky Teaches
How Vast is the sky!
Think you of yourself;
The earth is a tiny
Guava fruit; you. like all
Others are a tiny ant
In it? is that not so?
Why talk madly of
The high and the low?
Pavendar Bharatidasan
(translated by P. Parameswaran)
In simple words: This poem, translated from Tamil, teaches us humility. It compares the vastness of the sky and the smallness of the earth to show how tiny humans are, urging us not to boast or distinguish between high and low.

🎯 Exam Tip: When appreciating poetry, understand both the literal translation and the deeper message or moral the poet intends to convey.

மொழி பெயர்க்க:

 

Question 1. Strengthen the body. :
Question 2. Love your food :
Question 3. Thinking is great :
Question 4. Walk like a bull. :
Question 5. Union is strength :
Question 6. Practice what you have learnt :
Answer:
1. Strengthen the body. : உடலை உறுதி செய்
2. Love your food : உணவை விரும்பு
3. Thinking is great : சிந்தனை சிறப்பு
4. Walk like a bull. : காளை போல நட
5. Union is strength: ஒற்றுமை வலிமையாம்
6. Practice what you have learnt : கற்றது ஒழுகு
இவை அனைத்தும் "பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி"
In simple words: This section is about translating simple English phrases into Tamil. These phrases often come from moral teachings like Bharathiyar's new Aathichoodi, focusing on good habits and values.

🎯 Exam Tip: Focus on understanding the core meaning of each English phrase and finding the most accurate and commonly used Tamil equivalent for a clear translation.

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க:

 

எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.
Answer:
எ.கா: எட்டாக்கனி : முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி எட்டாக்கனி இல்லை.
உடும்புப்பிடி: என் தம்பிக்கு பிடிவாத குணமாதலால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.
கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! (அல்லது) கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே.
ஆகாயத்தாமரை : ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.
எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடாதே.
மேளதாளத்துடன் : எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.
In simple words: You need to create sentences using the given traditional Tamil phrases. Each phrase has a specific meaning, and your sentence should clearly show that you understand it.

🎯 Exam Tip: First, understand the literal and figurative meaning of each idiomatic phrase, then construct a sentence that naturally uses it in context, much like in everyday conversation.

 

பத்தியில் இடம் பெற்றுள்ள இயல்புப் புணர்ச்சிகளையும், விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்து எழுதுக: காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
Answer:
இயல்புப் புணர்ச்சிச் சொற்கள்
நுழைவு வாயிலின் – நுழைவு + வாயிலின்
நிற்பது போன்று – நிற்பது + போன்று

விகாரப்புணர்ச்சிச் சொற்கள்
1. தோன்றல் விகாரப் புணர்ச்சி
சுற்று + சுவர் → சுற்றுச்சுவர்
கலை + கூடம் → கலைக்கூடம்
தெய்வம் + சிற்பங்கள் → தெய்வச்சிற்பங்கள்
குடைவரை + கோயில் → குடைவரைக்கோயில்

2. கெடுதல் விகாரப் புணர்ச்சி
குறுந்தொகை + அகநானூறு → குறுந்தொகையகநானூறு

3. திரிதல் விகாரப் புணர்ச்சி
பல்லவர் காலம் + குடைவரைக் கோவில் → பல்லவர் காலக் குடைவரைக் கோவில்
In simple words: From the given passage, you need to find examples of words that combine naturally (இயல்புப் புணர்ச்சி) and words that change their form when combined (விகாரப் புணர்ச்சி). Vikaara Punarchi has three types: Thoandral (appearing), Thirthal (changing), and Keduthal (disappearing).

🎯 Exam Tip: Read the passage very carefully and break down each combined word to identify if any letters are added, changed, or removed at the joining point. This will help you categorize them correctly.

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

 

Question 1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
Answer: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
In simple words: This question asks to correct a traditional usage error. In Tamil, we say "கூரை வேய்ந்தனர்" (they thatched the roof), not "கூரை போட்டனர்" (they put a roof).

🎯 Exam Tip: Memorize common traditional phrases in Tamil, especially those related to actions like building, eating, or making sounds, to avoid usage errors.

 

Question 2. கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்
Answer: கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.
In simple words: The correct traditional way to say "making a pot" in Tamil is "பானை வனைய" (to craft a pot), not "பானை செய்ய" (to do/make a pot).

🎯 Exam Tip: Pay attention to the specific verbs used with certain nouns; using the correct verb makes your Tamil sound natural and grammatically accurate.

 

Question 3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
Answer: நேற்று தென்றல் வீசியது
In simple words: In Tamil, for a gentle breeze (தென்றல்), the traditional verb is "வீசியது" (blew gently), not "அடித்தது" (hit or blew strongly).

🎯 Exam Tip: Be mindful of the intensity of the action described; 'அடித்தது' implies force, while 'வீசியது' suggests a softer, more appropriate action for 'தென்றல்'.

 

Question 4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
Answer: தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)
In simple words: For extracting fiber (நார்) from coconut fronds (தென்னங்கீற்று), the correct action in Tamil is "கிழித்தனர்" (they tore/split), not "எடுத்தார்" (he took).

🎯 Exam Tip: Remember that certain materials or objects require specific verbs for actions performed on them. Using the precise verb demonstrates a good grasp of traditional Tamil usage.

 

Question 5. அணில் பழம் சாப்பிட்டது
Answer: அணில் பழம் தின்றது
In simple words: For animals eating, the traditional Tamil word is "தின்றது" (ate, used for animals), whereas "சாப்பிட்டது" (ate) is typically used for humans.

🎯 Exam Tip: Always use appropriate verbs based on whether the subject is a human or an animal, as Tamil distinguishes between them for actions like eating.

 

Question 6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
Answer: கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா?
In simple words: For picking flowers (மலரை), the correct traditional Tamil verb is "கொய்து வா" or "பறித்து வா" (pluck and bring), not "எடுத்து வா" (take and bring).

🎯 Exam Tip: The verb for picking flowers specifically implies detaching them from a plant, so 'கொய்து' or 'பறித்து' is more accurate than the general 'எடுத்து'.

கவிதை படைக்க.

 

மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பினவழி
Answer:
புவியைப் போற்று
புத்துலகமாய் மாற்று
சுற்றுச்சூழல் காத்திடு
சுகமாய் வாழ்ந்திடு
உயிரனைத்தும் பேணிடு
உலகையழிக்க நாணிடு

அன்பின் வழி
அன்பு எனும் ஒற்றை வழியே
இவ்வுலகினை ஆள்கிறது
அன்பு வழியும் தெய்வீக வழியும் ஒன்றே
எங்கே அன்பின் வழி உளதோ
அங்கே தெய்வம் குடி கொள்ளும்!
In simple words: This section asks you to create poems based on given themes like "Praise the Earth" and "The Path of Love." The example poems show how to use simple words to convey strong messages about protecting nature and the power of love.

🎯 Exam Tip: When writing a poem, focus on short, impactful lines that rhyme or have a rhythm. Use simple language to make your message clear and heartfelt.

மொழியோடு விளையாடு

 

விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.
Answer:

பதினெண் கீழ்க்கணக்குகஅதிருக்குறளின் அதிகாரங்கள்க௩௩சிற்றிலக்கியங்கள்௯௬
சைவத் திருமுறைகள்கஉநாயன்மார்கள்௬௩ஆழ்வார்கள்கஉ

In simple words: This activity asks you to write the answers to general knowledge questions in Tamil numerals. For example, 18 (பதினெண்) is written as 'கஅ'. This helps you learn Tamil number system.

🎯 Exam Tip: Familiarize yourself with the Tamil numeral system and practice converting numbers to their corresponding Tamil symbols for quick recall.

கண்டுபிடிக்க.

 

Question 1. எண்ணும் எழுத்தும் கண் – 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 4, 8, 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்.
அ) எழுது -
ஆ) கண்ணும் -
இ) கழுத்து -
ஈ) கத்து -
Answer:
அ) எழுது – 1, 5, 7
ஆ) கண்ணும் – 8, 2, 3, 4
இ) கழுத்து – 8, 5, 6, 7
ஈ) கத்து – 8, 6, 7
In simple words: This question is a code-breaking puzzle. Based on a given pattern of numbers representing letters, you need to apply the same pattern to decode new words into their number sequences.

🎯 Exam Tip: Carefully observe the initial number-to-letter mapping. Then, apply that exact logic consistently to each letter of the new words to find their numerical representation.

 

Question 2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் - இக் கூற்று.
அ) உண்மை
ஆ) பொய்
இ) உறுதியாகக் கூறமுடியாது
Answer: (இ) உறுதியாகக் கூறமுடியாது
காரணம் : அனைவரும் என்று கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம். அத்தனை மாணவர்களும் புத்தகம் வைத்திருந்தால், இராமன் என் வகுப்பில் இல்லை என்று சொல்லமுடியாது.
In simple words: Even if everyone in the class had new books and Ram also had one, it does not confirm he is *in* that class. He could be from another class who also has a new book.

🎯 Exam Tip: Always look for definitive proof or direct statements. Logical deductions need to be watertight, and assumptions can lead to incorrect answers.

அகராதியில் காண்க.

 

ஏங்கல், கிடுகு, தாமம், பான்மை, பொறி
Answer:
அ) ஏங்கல் – ஓசை, மயிற்குரல், அழுதல், குழந்தைகளுக்கு வரும் ஒருவகை நோய்
ஆ) கிடுகு – கேடகம், முடைந்த ஓலைக் கீற்று, சட்டப்பலகை
இ) தாமம் – பூமாலை, வடம், புகழ், ஒளி, பரமபதம்
ஈ) பான்மை – குணம், தகுதி, முறைமை, சிறப்பு
உ) பொறி – புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி
In simple words: This task is like using a dictionary. You need to find and write down all the different meanings for each given Tamil word. Many Tamil words have multiple meanings depending on context.

🎯 Exam Tip: When providing dictionary meanings, try to list all relevant definitions as a single word can have various interpretations.

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

 

Question 1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
Answer: கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நந்தினர்.
In simple words: This asks you to change a simile (உவமைத் தொடர்) into a metaphor (உருவகத் தொடர்). Instead of saying something is 'like' something else, a metaphor directly states it 'is' that thing.

🎯 Exam Tip: To convert a simile to a metaphor, remove words like 'போல' (like) and directly state the comparison, blending the two elements together.

 

Question 2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
Answer: குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.
In simple words: Here, you transform the comparison from "grief like a sea" to directly calling it "the sea of grief." This makes the imagery stronger.

🎯 Exam Tip: When converting, identify the two things being compared (e.g., grief and sea) and then combine them into a single, direct metaphorical phrase (e.g., sea of grief).

 

Question 3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்
Answer: பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்.
In simple words: Instead of saying 'language like honey', we make it 'honey-language' to create a direct metaphor, making the description more vivid.

🎯 Exam Tip: Combine the two elements of the simile into a compound word or a direct noun phrase to form an effective metaphor.

 

Question 4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
Answer: முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.
In simple words: This converts the simile "eyebrows like a bow" into a metaphor "bow-eyebrows", making it a more poetic and direct description.

🎯 Exam Tip: For metaphors, merge the two compared nouns into a single, often hyphenated or compound, descriptive term to create a stronger image.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

 

(Image of a woman sculpting)
Answer:
என்னை நானே
செதுக்கும் சிற்பியாவேன் - ஆம்
கல்வி எனும் உளி கொண்டு
உயரிய சிந்தனை செயல் எனும்
நுட்பங்களுடன் என்னை நானே
வடித்து கொள்கிறேன் சிற்பமாக
In simple words: Based on the image of a sculptor, this poem expresses the idea of self-improvement. It suggests using education and noble thoughts as tools to shape oneself into a better person, just like a sculptor shapes stone.

🎯 Exam Tip: When writing a descriptive poem based on an image, connect the visual elements to abstract concepts or personal reflections to create a deeper meaning.

 

உங்கள் மாவட்டத்தின் கலைநயம் மிக்க இடங்களின் சிறப்புகளைப் படங்களுடன் திரட்டிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer: அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளைக் குறிக்கும் தொகுப்பேட்டை, மாணவர்களே உருவாக்குங்கள்.
In simple words: This is a project suggestion: collect pictures and information about beautiful places in your district and create a portfolio to display in school. This helps students learn about their local heritage and present it creatively.

🎯 Exam Tip: When creating a project, focus on clear presentation, accurate information, and visually appealing elements to engage your audience.

நிற்க அதற்குத்தக....

என்னை மகிழச் செய்த பணிகள்

 

(எ.கா) 1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டு பெற்றேன். 2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன். 3. வயதான என் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களைப் பாதுகாப்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அம்மா பாராட்டினாள் - மகிழ்ந்தேன். சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றேன்; மகிழ்ச்சியடைந்தேன்.
Answer:
1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டு பெற்றேன்.
2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
3. வயதான என் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களைப் பாதுகாப்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அம்மா பாராட்டினாள் - மகிழ்ந்தேன். சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றேன்; மகிழ்ச்சியடைந்தேன்.
In simple words: This section lists examples of good deeds that brought happiness. They include helping a younger sibling, cleaning the classroom, and taking an elderly grandmother to a temple. These actions show kindness and responsibility.

🎯 Exam Tip: When writing about personal achievements or good deeds, clearly state the action, the people involved, and the positive outcome or feeling it generated.

கலைச்சொல் அறிவோம்

 

குடைவரைக்கோயில் (Cave Temple)
Answer: பெரிய மலைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களைக் குறிக்கும் சொல் இது. இவை பொதுவாகப் பாறைகளில் செதுக்கப்பட்டு, கடவுள்களின் சிற்பங்களையும், கலை வேலைப்பாடுகளையும் கொண்டிருக்கும். இதன்மூலம் பழங்காலக் கட்டிடக்கலையின் சிறப்பு வெளிப்படும்.
In simple words: இது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கிறது.

🎯 Exam Tip: கலைச்சொற்கள் அவற்றின் நேரடியான பொருளையும், சில சமயம் அவை குறிக்கும் வரலாற்று அல்லது பண்பாட்டுச் சிறப்பையும் உள்ளடக்கியிருக்கும்.

 

கருவூலம் (Treasury)
Answer: ஒரு அரசின் பணம், செல்வம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்படும் இடமே கருவூலம் ஆகும். இங்கு அரிய பொக்கிஷங்களும், ஆவணங்களும் சேமித்து வைக்கப்படும். இது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
In simple words: அரசுப் பணம் மற்றும் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் இடம்.

🎯 Exam Tip: நிதி சார்ந்த சொற்கள் அரசின் நிர்வாகம் அல்லது பொருளாதார அமைப்புடன் தொடர்புபட்டு இருக்கும்.

 

மதிப்புறு முனைவர் (Honorary Doctorate)
Answer: தொழில், கலை, அரசியல் அல்லது இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்து, வாழ்நாள் முழுவதும் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவப் பட்டம் இது. இது அவர்களின் உழைப்பையும், சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டும் விதமாக வழங்கப்படும்.
In simple words: ஒரு துறையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குக் கிடைக்கும் கௌரவ விருது.

🎯 Exam Tip: கௌரவப் பட்டங்கள் ஒருவரது கல்வித் தகுதியை விட, அவரது பொதுச் சேவை அல்லது கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும்.

 

மெல்லிசை (Melody)
Answer: கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் இசை அல்லது பாடலின் ஒரு பகுதி மெல்லிசை என்று அழைக்கப்படுகிறது. இது நம் மனதை அமைதிப்படுத்தி, உள்ளத்தை மயக்கும் தன்மை கொண்டது. மெல்லிசை பொதுவாக மென்மையான, நிதானமான தாளத்துடன் இருக்கும்.
In simple words: காதுக்கு இனிமையான இசை அல்லது பாடல்.

🎯 Exam Tip: இசை தொடர்பான கலைச்சொற்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமான அல்லது அனுபவப்பூர்வமான அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.

 

ஆவணக் குறும்படம் (Document Short Film)
Answer: ஒரு சமூகத்தில் உள்ள பிரச்சினை, அதன் தீவிரத் தன்மை மற்றும் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை மக்களுக்குக் குறுகிய நேரத்தில் புரிய வைக்கும் வகையில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் ஆவணக் குறும்படம் ஆகும். இது விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
In simple words: சமூகப் பிரச்சினைகளைப் பற்றி குறுகிய நேரத்தில் சொல்லும் சிறிய படம்.

🎯 Exam Tip: ஆவணப் படங்கள் பெரும்பாலும் யதார்த்தமான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை, அவற்றின் நோக்கம் சமூக மாற்றத்தை உருவாக்குவதாகும்.

 

புணர்ச்சி (Combination)
Answer: தமிழ் இலக்கணத்தில் வரும் ஒரு கருத்து இது. ஒரு சொல்லைப் பிரிக்கும்போது வரும் நிலைமொழியும், வருமொழியும் எப்படி இணைகின்றன என்பதைக் கூறும் இலக்கணப் பகுதி புணர்ச்சி எனப்படும். சொற்கள் இணையும்போது ஏற்படும் ஒலி மாற்றங்களை இது விளக்குகிறது.
In simple words: சொற்கள் சேரும்போது எப்படி மாற்றம் அடைகின்றன என்பதை விளக்கும் தமிழ் இலக்கணப் பகுதி.

🎯 Exam Tip: புணர்ச்சி விதிகள் தமிழ் மொழியின் ஒலி மாற்றங்களை விளக்க உதவுகின்றன, இது சரியான உச்சரிப்பிற்கும் எழுத்திற்கும் முக்கியம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

 

Question 1. மரவேர் என்பது .......... புணர்ச்சி
(அ) இயல்பு
(ஆ) திரிதல்
(இ) தோன்றல்
(ஈ) கெடுதல்
Answer: (ஈ) கெடுதல்
In simple words: 'மரம்' மற்றும் 'வேர்' என்ற இரண்டு சொற்கள் சேரும்போது, 'மரம்' என்பதில் உள்ள 'ம்' என்ற எழுத்து மறைந்துவிடும். இது கெடுதல் புணர்ச்சி எனப்படும்.

🎯 Exam Tip: கெடுதல் புணர்ச்சி என்பது சொற்கள் இணையும்போது ஒரு எழுத்து மறைவதைக் குறிக்கும்.

சிறுவினா

 

Question 1. அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
Answer: 'கை பிடி' என்பதற்கு 'கையைப் பிடித்துக்கொள்' என்று பொருள். இது இயல்புப் புணர்ச்சியின் கீழ் வரும். 'கைப்பிடி' என்பது ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்கும். உதாரணமாக, 'ஒரு கைப்பிடி பருப்பு' எனலாம். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி ஆகும், ஏனெனில் 'பிடி' என்ற சொல்லில் 'ப்' என்ற எழுத்து தோன்றி 'பிடி' என ஆகிறது. சொற்கள் சேரும்போது பல மாற்றங்கள் நிகழும்.
In simple words: 'கை பிடி' என்றால் கையைப் பிடிப்பது. இது இயல்பானது. 'கைப்பிடி' என்றால் ஒரு கை அளவு. இதில் ஒரு எழுத்து புதிதாக சேர்வதால் இது தோன்றல் புணர்ச்சி.

🎯 Exam Tip: 'அவற்றின்' போன்ற சுட்டுச் சொற்கள் வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் முன், கேள்வி முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

 

Question 1. எழுத்து வகையால் சொற்கள் .......... வகைப்படும்.
(அ) 2
(ஆ) 3
(இ) 4
(ஈ) 5
Answer: (இ) 4
In simple words: எழுத்துகளை வைத்து சொற்களை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

🎯 Exam Tip: எழுத்து வகைகள் பற்றிய அடிப்படை அறிவை தெளிவாக நினைவில் வைத்திருப்பது இலக்கணக் கேள்விகளுக்கு மிகவும் உதவும்.

 

Question 2. நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் ..........
(அ) யகர உடம்படுமெய்
(ஆ) வகர உடம்படுமெய்
(இ) இரண்டும் வரும்
(ஈ) இரண்டும் வராது
Answer: (அ) யகர உடம்படுமெய்
In simple words: 'இ', 'ஈ', 'ஐ' என்பவை நிலைமொழியின் முடிவில் வந்தால், 'ய்' என்ற எழுத்து வந்து சேரும்.

🎯 Exam Tip: உடம்படுமெய் என்பது சொற்கள் இணையும்போது ஏற்படும் ஒலி மாற்றத்தைச் சீராக்கப் பயன்படும் ஒரு துணை எழுத்து ஆகும்.

 

Question 3. வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?
(அ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி
(ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி
(இ) இயல்பு புணர்ச்சி
(ஈ) திசைப்பெயர் புணர்ச்சி
Answer: (ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி
In simple words: 'வட்டு' என்ற சொல் 'ஆடினான்' என்ற சொல்லுடன் சேரும்போது குற்றியலுகரப் புணர்ச்சி ஏற்படுகிறது. 'டு' மறைந்து புதிய ஒலி உருவாகிறது.

🎯 Exam Tip: குற்றியலுகரப் புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி உகரம், வருமொழியின் முதல் உயிரெழுத்துடன் சேரும்போது மறைந்துவிடும்.

 

Question 4. விகாரப் புணர்ச்சியில் இடம்பெறுபவை
(அ) தோன்றல்
(ஆ) திரிதல்
(இ) கெடுதல்
(i) முதல் மூன்றும் சரி
(ii) முதல் இரண்டும் சரி
(iii) இறுதி மூன்றும் சரி
(iv) அனைத்தும் சரி
Answer: (i) முதல் மூன்றும் சரி
In simple words: சொற்கள் சேரும்போது புதிய எழுத்து வருவது, ஒரு எழுத்து மாறுவது, ஒரு எழுத்து மறைவது ஆகிய மூன்று மாற்றங்களும் விகாரப் புணர்ச்சியில் அடங்கும்.

🎯 Exam Tip: விகாரப் புணர்ச்சியின் மூன்று பிரிவுகளையும், ஒவ்வொரு பிரிவுக்கும் எடுத்துக்காட்டுகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

Question 5. காது, பேசு - இது எவவகைக் குற்றியலுகரம்.
(அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
(இ) வன்தொடர்க் குற்றியலுகரம்
(ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்
Answer: (ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
In simple words: 'காது' மற்றும் 'பேசு' என்பவை நெடில் தொடர்க் குற்றியலுகரத்தின் வகைகள். ஏனென்றால், இவை நீண்ட ஒலி கொண்ட எழுத்துக்களால் தொடங்கும்.

🎯 Exam Tip: குற்றியலுகரம் எவ்வகைத் தொடரில் வருகிறது என்பதை அறிய, குற்றியலுகர எழுத்துக்கு முந்தைய எழுத்தைக் கவனமாகப் பாருங்கள்.

 

Question 6. பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு - வன்தொடர்க் குற்றியலுகரம்
(அ) 4, 3, 2, 1
(ஆ) 4, 2, 3, 1
(இ) 3, 2, 1, 4
(ஈ) 1, 2, 3, 4
Answer: (அ) 4, 3, 2, 1
In simple words: இந்த குற்றியலுகர வகைகளை சரியாகப் பொருத்த வேண்டும். 'முதுகு' வன், 'மார்பு' மென், 'நெஞ்சு' இடை, 'நாக்கு' உயிர் தொடர் குற்றியலுகர வகைகளைச் சேர்ந்தவை.

🎯 Exam Tip: ஒவ்வொரு குற்றியலுகர வகைக்கும் எடுத்துக்காட்டுகளுடன் அவற்றை மனப்பாடம் செய்வது பொருத்தமான கேள்விகளுக்கு விடையளிக்க உதவும்.

குறுவினா

 

Question 1. உடம்படு மெய் என்றால் என்ன? அவை யாவை?
Answer: ஒரு சொல்லின் நிலைமொழி (முதல் சொல்) உயிரெழுத்தில் முடிந்து, அடுத்த சொல்லின் வருமொழி (இரண்டாம் சொல்) உயிரெழுத்தில் தொடங்கினால், இந்த இரண்டு உயிரெழுத்துக்களையும் இணைக்க ஒரு மெய்யெழுத்து இடையில் தோன்றும். இந்த மெய்யெழுத்தே உடம்படுமெய் எனப்படும். உடம்படுமெய்கள் யகர உடம்படுமெய் ('ய்') மற்றும் வகர உடம்படுமெய் ('வ்') என இரண்டு வகைப்படும். இவை சொற்களின் ஒலியை சீராக்க உதவுகின்றன.
In simple words: இரண்டு உயிரெழுத்துச் சொற்கள் சேரும்போது, இடையில் வரும் மெய்யெழுத்து உடம்படுமெய் ஆகும். 'ய்' மற்றும் 'வ்' என இரண்டு உடம்படுமெய்கள் உள்ளன.

🎯 Exam Tip: உடம்படுமெய் என்பது தமிழ் இலக்கணத்தின் ஒரு முக்கியப் பகுதி, இது சொற்கள் இணையும்போது ஏற்படும் ஒலி மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

சிறுவினா

 

Question 1. இயல்புப் புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி – விளக்குக.
Answer:
இயல்புப் புணர்ச்சி: சொற்கள் சேரும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாக இணையும். உதாரணமாக, 'மண்' மற்றும் 'மலை' சேர்ந்து 'மண்மலை' ஆகும். இந்த புணர்ச்சி மொழியின் இயல்பான ஓட்டத்தை பிரதிபலிக்கிறது.
விகாரப் புணர்ச்சி: சொற்கள் இணையும்போது மாற்றங்கள் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். இந்த மாற்றங்கள் மூன்று வழிகளில் நிகழலாம்: ஒரு புதிய எழுத்து தோன்றுதல் (தோன்றல்), ஒரு எழுத்து வேறொன்றாக மாறுதல் (திரிதல்), அல்லது ஒரு எழுத்து மறைதல் (கெடுதல்). உதாரணமாக, 'கல்லூரி' மற்றும் 'சாலை' இணைந்து 'கல்லூரிச்சாலை' ஆகும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வது புணர்ச்சியை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.
In simple words: இயல்புப் புணர்ச்சி: சொற்கள் சேரும்போது எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பது. விகாரப் புணர்ச்சி: சொற்கள் சேரும்போது எழுத்துகள் தோன்றுவது, மாறுவது அல்லது மறைவது.

🎯 Exam Tip: இயல்புப் புணர்ச்சி மற்றும் விகாரப் புணர்ச்சி ஆகிய இரண்டிற்கும் தலா இரண்டு எடுத்துக்காட்டுகளை நினைவில் வைத்துக்கொண்டால், தேர்வில் விளக்க எளிதாக இருக்கும்.

 

Question 2. குற்றியலுகரப் புணர்ச்சியைச் சான்று தந்து விளக்குக.
Answer: குற்றியலுகரப் புணர்ச்சி என்பது, குற்றியலுகரச் சொல்லை அடுத்து உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொல் வந்தால் ஏற்படும் மாற்றமாகும். நிலைமொழியில் உள்ள குற்றியலுகரம் (உகரம்) மறைந்துவிடும்.
உதாரணமாக: 'வட்டு + ஆடினான்' என்பதைப் பார்க்கும்போது, 'வட்டு' (வட்+உ) என்ற குற்றியலுகரம் 'ஆடினான்' என்ற உயிரெழுத்துடன் சேரும்போது, 'டு'வில் உள்ள 'உ'கரம் மறைந்து, 'வட்ட்' என்று ஆகி, 'வட்டாடினான்' என இணைகிறது. இவ்வாறே, குற்றியலுகரத்திற்கு முன் உயிரெழுத்துகள் வரும்போது நிலைமொழியின் உகரம் கெட்டுவிடும். குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இந்த விதி பொருந்தும், உதாரணமாக 'உறவு + அழகு' இணைந்து 'உறவழகு' ஆகும்.
In simple words: குற்றியலுகரம் கொண்ட ஒரு சொல், உயிரெழுத்தில் தொடங்கும் இன்னொரு சொல்லுடன் சேரும்போது, குற்றியலுகரத்தில் உள்ள 'உ' என்ற ஒலி மறைந்துவிடும். 'வட்டு' மற்றும் 'ஆடினான்' சேர்ந்து 'வட்டாடினான்' ஆவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

🎯 Exam Tip: குற்றியலுகரப் புணர்ச்சியின் போது உகரம் கெடுதல் என்ற விதியை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள், இது பல எடுத்துக்காட்டுகளுக்கு பொருந்தும்.

TN Board Solutions Class 9 Tamil Chapter 06.5 புணர்ச்சி

Students can now access the TN Board Solutions for Chapter 06.5 புணர்ச்சி prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 9 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.

Detailed Explanations for Chapter 06.5 புணர்ச்சி

Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 9 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 9 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.

Benefits of using Tamil Class 9 Solved Papers

Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 9 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 06.5 புணர்ச்சி to get a complete preparation experience.

FAQs

Where can I find the latest Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி for the 2026-27 session?

The complete and updated Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி is available for free on StudiesToday.com. These solutions for Class 9 Tamil are as per latest TN Board curriculum.

Are the Tamil TN Board solutions for Class 9 updated for the new 50% competency-based exam pattern?

Yes, our experts have revised the Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.

How do these Class 9 TN Board solutions help in scoring 90% plus marks?

Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி will help students to get full marks in the theory paper.

Do you offer Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி in multiple languages like Hindi and English?

Yes, we provide bilingual support for Class 9 Tamil. You can access Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி in both English and Hindi medium.

Is it possible to download the Tamil TN Board solutions for Class 9 as a PDF?

Yes, you can download the entire Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி in printable PDF format for offline study on any device.