Get the most accurate TN Board Solutions for Class 9 Tamil Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள் here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 9 Tamil. Our expert-created answers for Class 9 Tamil are available for free download in PDF format.
Detailed Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள் TN Board Solutions for Class 9 Tamil
For Class 9 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 9 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள் solutions will improve your exam performance.
Class 9 Tamil Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள் TN Board Solutions PDF
கற்பவை கற்றபின்
Question 1. “இன்று பெரியார் இருந்திருந்தால்" என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரை ஒன்றை எழுதுக.
Answer: அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும், முதற்கண் என் அன்பான வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன். இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு "இன்று பெரியார் இருந்திருந்தால்" என்பதே ஆகும்.
பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், தெற்காசியாவின் சாக்ரடீஸ், வைக்கம் வீரர், பெண்ணினப் போர் முரசு, ஈரோட்டுச்சிங்கம், புத்துலகத் தொலை நோக்காளர் என்றெல்லாம் புகழப்பட்டவர் தந்தை பெரியார். இவர் அடிமை இருளில் மூழ்கிக்கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, பாரத தேசத்திற்கே புதிய வெளிச்சம் பாய்ச்சியவர். புதிய விடியலுக்கு தன் கொள்கையால் பூபாளம் இசைத்தவர்.
சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திய பெரியார், இன்று இருந்திருந்தால், இன்றைய சமூக பண்பாட்டுச் சீர்கேடுகள், கல்வியில் உள்ள வேறுபாடுகள், பொருளாதார சீர்கேடுகள், நாகரிகமற்ற அரசியல் செயல்பாடுகள், சாதியினால் நடைபெறும் வீண் சண்டைகள், குழப்பங்கள், ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்கள் அனைத்தையும் அந்தப் பகுத்தறிவு பகலவன் ஒளி குன்றச் செய்திருக்கும்.
கல்வியில், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, பெண்களுக்கான சொத்துரிமை, குடும்பநலத்திட்டம், கலப்புத் திருமணம், சீர்திருத்த திருமண சட்ட ஏற்பு என அவர் விதைத்த விதைகள் சில வேரூன்றி இருக்கின்றன. சில முளைக்காமலே போய்விட்டன. இந்த நிலையில் இன்று பெரியார் இருந்திருந்தால், "மீண்டும் ஒரு புரட்சி, மீண்டும் ஒரு மதுவிலக்கு, மீண்டும் ஒரு மொழிப் புரட்சி" எனப் புதிய புரட்சிகளால் புதிய விடியலை ஏற்படுத்தியிருப்பார். பெரியார் சமூக மாற்றத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார்.
ஆனால், இன்று அவர் இல்லை. அவர் கொள்கைகளை உணர்ந்த நாம், அவர் காட்டிய வழியில் புதிய உலகம் செய்வோம். வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயல்வோம். சமுதாயம் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டெழ அரும்பாடுபட்ட அவரது பிள்ளைகளாகிய நாம் அச்செயலை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்துவோம். நன்றி! வணக்கம்!
In simple words: இன்று பெரியார் இருந்திருந்தால், அவர் சமூகத்தின் மூடநம்பிக்கைகள், சாதிப் பாகுபாடுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார். கல்வியிலும், பொருளாதாரத்திலும் சமத்துவத்தை ஏற்படுத்த அவர் பாடுபட்டிருப்பார். அவரது சிந்தனைகள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
🎯 Exam Tip: இந்த மாதிரி கேள்விகளுக்கு, பெரியாரின் முக்கிய கொள்கைகளையும், இன்றைய சமூகப் பிரச்சினைகளையும் தொடர்புபடுத்தி எழுதுவது முழு மதிப்பெண்களைப் பெற உதவும்.
Question 2. பெரியாரை நேர்காணல் செய்வதாகக் கருதி வினாப்பட்டியலை உருவாக்குக!
Answer: நேர்காணலுக்கான வினாக்கள்:
- அய்யா! பகுத்தறிவு என்பதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா?
- மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? தெளிவு படுத்துங்களேன்.
- சாதியினால் மனித வாழ்விற்குப் பயன் உண்டா?
- சாதியும் மதமும் மனித சமுதாயத்தை ஒற்றுமை படுத்துகிறதா? பிரித்து வைக்கிறதா?
- கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களாகத் தாங்கள் கருதுபவை யாவை?
- எத்தகைய நூல்கள் நம் மொழியில் படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
- உங்களுக்கு மிகவும் பிடித்தமான நூல் எது?
- பெண்களை முன்னேற்ற உதவுவதற்கான வழிமுறைகள் யாவை?
- நீங்கள் சிக்கனத்திற்குச் சான்றாய் இருப்பவர். சிக்கனத்தின் அவசியம் பற்றிச் சில வார்த்தைகள் கூறுங்களேன்.
- சமுதாயம் மூட பழக்கத்தில் இருந்து மீண்டெழ இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
- இன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டை ஆள்பவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் யாவை?
- இன்றைய பத்திரிகைகள், இதழ்கள், ஊடகங்கள் பற்றி உங்கள் கருத்து யாது?
In simple words: பெரியாரைச் சந்தித்தால், அவரது பகுத்தறிவு, மதம், சாதி, கல்வி, பெண்கள் முன்னேற்றம், சிக்கனம் மற்றும் இன்றைய அரசியல் பற்றிய கருத்துக்களைக் கேட்பது நல்லது. இத்தகைய கேள்விகள் அவரது சிந்தனைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்.
🎯 Exam Tip: நேர்காணல் கேள்விகள் உருவாக்கும்போது, ஒருவரின் முக்கியக் கொள்கைகளை மையப்படுத்தி, சமகாலப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தி கேட்பது அவசியம்.
Question 3. “இன்றைய சமுதாயம் பெரியாரின் பாதையில் நடக்கிறதா? நடக்கவில்லையா? எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்துக.
Answer: கலந்துரையாடல்:
ஆசிரியர்: மாணவர்களே, இன்று பெரியாரின் சிந்தனைகள் பற்றிய உரைநடையைப் படித்தோம் அல்லவா?
முகிலன்: ஆம் ஐயா! இந்த உரைநடை மூலம் பெரியார் கூறிய கருத்துகளையும் அவர் காட்டிய பாதையையும் அறிந்து கொண்டோம்.
ஆசிரியர்: ஆம். அவர் காட்டிய பாதையில் இன்றைய சமூகம் நடக்கிறதா இல்லையா?
கமலா: இல்லை ஐயா.
ஆசிரியர்: ஏன் கமலா அப்படி சொல்கிறாய்?
கமலா: ஐயா, பெரியார் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடு பார்க்கக்கூடாது என்றார். ஆனால் இன்றும் எங்கள் கிராமத்தில் சாதியின் அடிப்படையில் தான் எல்லாம் நடைபெறுகிறது. இதிலிருந்தே பெரியார் வழியில் சமூகம் நடக்கவில்லை என்று தெரிகிறது.
முகிலன்: சரியாகச் சொன்னாய் கமலா. எங்கள் சிற்றூரில் கூட சாதியைக் காரணம் காட்டி மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.
கமலா: அதுமட்டுமில்லை முகிலா! மணக்கொடை, வரதட்சணை கூடாது என்றார். ஆனால் எங்கள் உறவினர்களில் ஒரு பெண்ணுக்கு வரதட்சணை தரமுடியாமல் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. பிறகு எப்படி சமூகம் பெரியார் வழி நடக்கிறது என்று சொல்ல முடியும்.
அகிலன்: இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் பேசலாமா?
கமலா: சொல்லு அகிலன்.....
அகிலன்: "நீங்கள் கலப்புத் திருமணம் செய்யலாம், சாதி மறுப்புத் திருமணம் செய்யலாம்" என்றார் பெரியார். ஆனால் அப்படி யாராவது செய்தால் கொல்லப்படுகிறார்கள். என்ன செய்வது....
முகிலன்: இதுமட்டுமல்ல, வேறுபாடற்ற கல்வி வேண்டும் என்றார். இன்றும் பணம் படைத்தவர்கள் நல்ல பள்ளியில் தரமான கல்வி கற்க முடிகிறது. சாதாரண ஏழை மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
அகிலன்: இப்படியே பேசிக்கொண்டே போகலாம் கமலா. நாம் பெரியாரின் கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவர முயல்வோம்.
முகிலன்: ஆம் அகிலன்! நன்கு படித்து, தொலைநோக்குடைய அவருடைய சிந்தனைகள், அவர் கற்றுத் தந்த தன்மதிப்பு, சமத்துவம் ஆகியவற்றை திறவுகோலாகக் கொண்டு புதிய சமுதாயத்தைப் படைப்போம்.
கமலா: நாம் நினைத்தால் முடியாதது இல்லை. முயல்வோம், வெல்வோம்....
ஆசிரியர்: மிக்க மகிழ்ச்சி மாணவர்களே! நான் இன்று கற்றுக்கொடுத்தது வீணாகப் போவதில்லை ....
In simple words: இந்த கலந்துரையாடலில், மாணவர்கள் பெரியார் கூறிய சமத்துவக் கருத்துகள், சாதி மறுப்புத் திருமணம், வரதட்சணை, சமச்சீர் கல்வி போன்ற கொள்கைகள் இன்றும் முழுமையாகச் செயல்படவில்லை என்று கூறுகின்றனர். எனினும், அவரது வழியில் ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்க முயற்சிப்போம் என்று முடிவு செய்கிறார்கள்.
🎯 Exam Tip: உரையாடல் பாணியிலான கேள்விகளுக்கு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையையும் தெளிவாக வெளிப்படுத்துவதுடன், இறுதியில் ஒரு பொதுவான தீர்மானத்தை வழங்குவது சிறந்தது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer: (ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
In simple words: பெரியார் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சில சீர்திருத்தங்களைச் செய்தார். இதில் 'ஐ' மற்றும் 'ஔ' ஆகிய எழுத்துகளை முறையே 'அய்' மற்றும் 'அவ்' என்று மாற்றுவதும் அடங்கும்.
🎯 Exam Tip: கூற்று-காரணம் கேள்விகளுக்கு, கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டின் சரியான தன்மையையும், அவற்றுக்கிடையேயான தொடர்பையும் கவனமாக ஆராய வேண்டும்.
குறுவினா
Question 1. "பகுத்தறிவு" என்றால் என்ன?
Answer: எந்த ஒரு செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி, 'ஏன்?', 'எதற்கு?', 'எப்படி?' என்ற கேள்விகளை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். இது எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் கேள்வி கேட்கும் தன்மையாகும்.
In simple words: பகுத்தறிவு என்பது ஒரு விஷயத்தை ஏன், எதற்கு, எப்படி என்று கேட்டு, அறிவைப் பயன்படுத்தி சரியான முடிவை எடுப்பது.
🎯 Exam Tip: பகுத்தறிவின் முக்கிய அம்சங்களான 'கேள்வி கேட்டல்', 'அறிவியல் பார்வை', 'சிந்தித்து முடிவெடுத்தல்' ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டால் முழு மதிப்பெண் பெறலாம்.
சிறுவினா
Question 1. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
Answer: பெரியார் அவர்கள், பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார். ஆனால் இன்றைய நடைமுறையில் பொருளாதாரத்தில் நிறைவு பெறவில்லை என்றாலும், பலரும் சிறு கடன் பெற்றாவது ஆடம்பரமாகவே வாழ விரும்புகின்றனர். பெரியார் கூறிய சிக்கன வாழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.
விழாக்களும் சடங்குகளும் மூடப்பழக்கம் வளர்ப்பதோடு வீண் செலவும் ஏற்படுத்துகிறது. சடங்குகள், விழாக்களைத் தவிர்த்து சிக்கனமாய் வாழச் சொன்னார். ஆனால் இன்றும் இவற்றைத் தவிர்ப்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது. எனவே பெரியார் கூறிய சிக்கனக் கொள்கைகளை இன்றைய நடைமுறை நிகழ்வுகளில் பின்பற்றுவது அநேக நேரங்களில் கடினமாகவே உள்ளது.
In simple words: பெரியார் சிக்கனத்தை வலியுறுத்தினார், ஆனால் இன்று பலர் கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ விரும்புகிறார்கள். விழாக்களிலும் சடங்குகளிலும் அதிக செலவு செய்வதையும் அவர் எதிர்த்தார். அவரது சிக்கனக் கருத்துகள் இன்றும் பின்பற்றப்படுவது சவாலாக உள்ளது.
🎯 Exam Tip: பெரியாரின் சிக்கனக் கொள்கைகளை தற்காலச் சமூகத்தின் செலவழிக்கும் பழக்கங்களுடன் ஒப்பிட்டு, பொருத்தமான உதாரணங்களுடன் எழுதினால் சிறப்பாக இருக்கும்.
நெடுவினா
Question 1. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.
Answer: முன்னுரை:
தமிழக மக்களைப் பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச் சென்றவர் பெரியார். இந்தியாவின் பழமையான மொழி தமிழ். பழமையான இலக்கியமும் தமிழிலே உள்ளன. இலக்கியத்திலும், மொழியிலும் பெரியார் செய்த சீரமைப்புகள் பற்றி அறிந்துகொள்வோம். பெரியார் மொழியையும் இலக்கியத்தையும் சமூக மாற்றத்திற்கான கருவிகளாகக் கருதினார்.
மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்து:
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும், மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார் தந்தை பெரியார்.
இலக்கிய சீர்திருத்தம்:
அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும். மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே அதிகளவில் வேண்டும். திருக்குறளில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார். இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.
மொழியில் சீர்திருத்தம்:
ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும், அவை எளிதில் கற்றுக்கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துகளைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார் பெரியார்.
மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதை 'அய்' எனவும் 'ஔ' என்பதை 'அவ்' எனவும் சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார். கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார். அவரது சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
முடிவுரை:
மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த் திகழ்ந்தது எனில் மிகையாகாது. இன்றும் அவரது சீர்திருத்தங்கள் தமிழின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
In simple words: பெரியார் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்களை விரும்பினார். அவர், இலக்கியம் மனிதர்களுக்கு பகுத்தறிவு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும் என்றார். அறிவியல் கருத்துகளைக் கொண்ட நூல்களும், அனைவருக்கும் பொதுவான அறிவை வழங்கும் நூல்களும் தேவை என்றார். எழுத்து சீர்திருத்தங்கள் மூலம் தமிழ் மொழியைக் கற்க எளிமையாக்கினார்.
🎯 Exam Tip: பெரியாரின் மொழி மற்றும் இலக்கியச் சீர்திருத்தங்களை விளக்கும்போது, அவரது பகுத்தறிவு, எளிமை, சமூகப் பயன்பாடு ஆகிய முக்கியக் கருத்துகளைத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து எழுதுவது தெளிவாக இருக்கும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1. தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) காமராசர்
இ) ராஜாஜி
ஈ) தந்தை பெரியார்
Answer: (ஈ) தந்தை பெரியார்
In simple words: தந்தை பெரியார் தனது பகுத்தறிவுச் சிந்தனைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்காக 'தெற்காசியாவின் சாக்ரடீஸ்' என்று புகழப்பட்டார்.
🎯 Exam Tip: இது ஒரு நேரடிக் கேள்வி. தந்தை பெரியாரின் பட்டப்பெயர்களை நினைவில் கொள்வது எளிதாக மதிப்பெண் பெற உதவும்.
Question 2. மன உறுதி படைத்த மக்களை உருவாக்க ............... இன்றியமையாதது.
அ) மக்கட் செல்வம்
ஆ) உறவு
இ) அன்பு
ஈ) பகுத்தறிவு
Answer: (ஈ) பகுத்தறிவு
In simple words: மன உறுதியான மக்களை உருவாக்க, சரியான முடிவுகளை எடுக்க உதவும் பகுத்தறிவு மிகவும் முக்கியம்.
🎯 Exam Tip: தந்தை பெரியாரின் முக்கியக் கொள்கைகளில் பகுத்தறிவு ஒன்றாகும், எனவே இது போன்ற கேள்விகளில் பகுத்தறிவை மையமாகக் கொண்ட பதிலைத் தேர்ந்தெடுப்பது சரியான பதிலாக அமையும்.
Question 3. மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு ............... ஆகும்.
அ) போர்க்கருவி
ஆ) வாயில்
இ) துணை
ஈ) இணை
Answer: (அ) போர்க்கருவி
In simple words: மொழி என்பது சமூகப் போராட்டங்களுக்கும் மாற்றங்களுக்கும் பயன்படும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
🎯 Exam Tip: மொழி குறித்த பெரியாரின் கருத்துகளில், மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, மாற்றத்திற்கான ஒரு கருவி என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
Question 4. ஈ.வே.ராவுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?
அ) 1938 நவம்பர் 14
ஆ) 1938 நவம்பர் 13
இ) 1939 நவம்பர் 16
ஈ) 1938 நவம்பர் 12
Answer: (ஆ) 1938 நவம்பர் 13
In simple words: ஈ.வே.ராமசாமிக்கு 'பெரியார்' என்னும் பட்டம் 1938 நவம்பர் 13 அன்று வழங்கப்பட்டது.
🎯 Exam Tip: இது ஒரு வரலாற்றுத் தகவல். முக்கிய தேதிகள் மற்றும் நிகழ்வுகளை மனப்பாடம் செய்வது இந்தப் பகுதி கேள்விகளுக்கு உதவும்.
Question 5. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று ஈ.வெ.ராவுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
அ) யுனெஸ்கோ நிறுவனம்
ஆ) காமன்வெல்த்
இ) தெற்காசிய கூட்டமைப்பு
ஈ) வெளிநாடுவாழ் இந்தியர் கூட்டமைப்பு
Answer: (அ) யுனெஸ்கோ நிறுவனம்.
In simple words: யுனெஸ்கோ நிறுவனம் ஈ.வெ.ராமசாமிக்கு 'தெற்காசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டத்தை வழங்கியது.
🎯 Exam Tip: இதுபோன்ற கேள்விகளுக்கு, ஒரு குறிப்பிட்ட பட்டத்தை வழங்கிய அமைப்பின் பெயரையும், தேதி போன்ற விவரங்களையும் தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும்.
Question 6. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பட்டம் வழங்கப்பட்ட நாள் ............... ஆகும்.
அ) 26.05.1970
ஆ) 26.07.1970
இ) 24.06.1970
ஈ) 27.06.1970
Answer: (ஈ) 27.06.1970
In simple words: ஈ.வெ.ராமசாமிக்கு 'தெற்காசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டம் 1970 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வழங்கப்பட்டது.
🎯 Exam Tip: முக்கிய நிகழ்வுகளின் சரியான தேதி மற்றும் வருடங்களை நினைவில் வைத்துக்கொள்வது போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Question 7. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1921
ஆ) 1922
இ) 1925
ஈ) 1926
Answer: (இ) 1925
In simple words: சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கப்பட்டது. இது சமூக சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டது.
🎯 Exam Tip: முக்கிய இயக்கங்கள் மற்றும் அவற்றின் தொடக்க ஆண்டுகளைத் தெளிவாக நினைவில் கொள்வது வரலாற்றுப் பகுதி கேள்விகளுக்கு உதவும்.
Question 8. தந்தை பெரியாரின் சொந்த ஊர் ...............
அ) ஈரோடு
ஆ) பொள்ளாச்சி
இ) நாமக்கல்
ஈ) சேலம்
Answer: (அ) ஈரோடு
In simple words: தந்தை பெரியாரின் சொந்த ஊர் ஈரோடு ஆகும்.
🎯 Exam Tip: ஒரு தலைவரின் சொந்த ஊர் போன்ற அடிப்படை தகவல்கள் பொது அறிவு கேள்விகளில் கேட்கப்படலாம், எனவே இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
Question 9. பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது ...............
அ) அமைதி
ஆ) பகுத்தறிவு
இ) கோபம்
ஈ) முதுமை
Answer: (ஆ) பகுத்தறிவு
In simple words: பெரியார் என்ற பெயரைச் சொன்னவுடன், அவரது முக்கியக் கொள்கையான பகுத்தறிவு உடனடியாக நினைவுக்கு வரும்.
🎯 Exam Tip: ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தனிச்சிறப்புமிக்க கொள்கை அல்லது குணம் இருக்கும். பெரியாரைப் பொறுத்தவரை அது பகுத்தறிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Question 10. பெரியார் பின்பற்றிய கொள்கை ...............
அ) தலையிடாக் கொள்கை
ஆ) வரிகொடாக் கொள்கை
இ) கடவுள் மறுப்புக் கொள்கை
ஈ) கடவுள் சார்புக் கொள்கை
Answer: (இ) கடவுள் மறுப்புக் கொள்கை
In simple words: பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றினார். இது அவரது பகுத்தறிவுச் சிந்தனையின் ஒரு பகுதியாகும்.
🎯 Exam Tip: பெரியாரின் அடிப்படைச் சிந்தனைகள் மற்றும் அவர் பின்பற்றிய கொள்கைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்க உதவும்.
Question 11. பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறியவர் ...
அ) பெரியார்
ஆ) அண்ணா
இ) காந்தி
ஈ) அம்பேத்கார்
Answer: (அ) பெரியார்
In simple words: பெரியார், பொருளாதார ரீதியாக முழுமையாக வளர்ச்சியடையாதபோது சிக்கனமாக வாழ்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.
🎯 Exam Tip: சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகள் அவரது சமூகப் பொருளாதார சீர்திருத்தச் சிந்தனைகளின் ஒரு பகுதியாகும்.
Question 12. 1938 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்கு வழங்கப்பட்ட பட்டம் ...............
அ) பெண்ணினப் போர்முரசு
ஆ) பெரியார்
இ) புத்துலகத் தொலை நோக்காளர்
ஈ) சுயமரியாதைச் சுடர்
Answer: (ஆ) பெரியார்
In simple words: 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
🎯 Exam Tip: இந்த கேள்வி முக்கியமான வரலாற்று நிகழ்வு மற்றும் ஒரு தலைவரின் பட்டப்பெயர் பற்றி கேட்கிறது. நிகழ்வின் இடம் மற்றும் வருடம் போன்ற விவரங்களை நினைவில் கொள்வது அவசியம்.
குறுவினா
Question 1. பள்ளிகளில் கற்றுத் தரக் கூடாதனவாகப் பெரியார் கூறுவன யாவை?
Answer: பெரியார் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாதனவாகக் கருதியவை:
- அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்
- மூடப்பழக்கங்கள்
In simple words: பெரியார் சொன்னது என்னவென்றால், பள்ளிக்கூடத்தில் அறிவியலுக்குப் பொருந்தாத கதைகளையும், பழைய மூடநம்பிக்கைகளையும் சொல்லிக்கொடுக்கக் கூடாது.
🎯 Exam Tip: பெரியாரின் கல்விச் சிந்தனைகளை விளக்கும்போது, பகுத்தறிவு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான கருத்துகளை அவர் எதிர்த்தார் என்பதை வலியுறுத்துங்கள்.
சிறுவினா
Question 1. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
Answer: பெரியார் அவர்கள், பொருளாதார ரீதியாக இன்னும் சுயசார்பு அடையாத நிலையில் இருக்கும் அனைவரும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிக்கனம் என்பது நிதி ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையாகும்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வசதி இல்லாதவர்களும் கூட, சிறு கடன்கள் பெற்று ஆடம்பரமாக வாழவே விரும்புகிறார்கள்.
விழாக்கள் மற்றும் சடங்குகள் போன்ற மூடநம்பிக்கைகள் வீண் செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த சடங்குகள் மற்றும் விழாக்களைத் தவிர்த்து சிக்கனமாக வாழ்வது அவசியமாகும்.
எனவே, பெரியார் வலியுறுத்திய சிக்கனக் கொள்கைகள், இன்றைய சமூகத்தில் பின்பற்ற முடியாத நிலையிலேயே பல நேரங்களில் உள்ளன.
In simple words: பெரியார் பொருளாதாரத்தில் இன்னும் பின்தங்கியிருப்பவர்கள் சிக்கனமாக வாழ வேண்டும் என்றார். ஆனால் இப்போது பலர் கடன்பட்டு ஆடம்பரமாக வாழ்கிறார்கள். சடங்குகள் போன்ற வீண் செலவுகளையும் செய்கிறார்கள். இதனால் பெரியாரின் சிக்கனக் கருத்துக்களை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை.
🎯 Exam Tip: சிக்கனம் பற்றிய பெரியாரின் பார்வையை விளக்கி, இன்றைய சமூகச் சூழலுடன் அதை எப்படி ஒப்பிடலாம் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
Question 2. சாதி என்ற கட்டமைப்புக் குறித்துப் பெரியார் கூறுவன யாவை?
Answer: சாதிப் பெருமை, ஒரு சிலர் மற்றவர்களை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இது மனிதர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.
சாதி அமைப்பு, மற்றவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. சமூகத்தில் சிலரை இழிவுபடுத்துகிறது, சமத்துவத்தை மறுக்கிறது.
ஆகவே, சாதி என்ற இந்த ஏற்றத்தாழ்வான அமைப்பை முற்றிலும் தகர்த்தெறிய வேண்டும் என்று பெரியார் கூறினார். சாதி ஒழிப்பு என்பது சமூக முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம்.
In simple words: பெரியார் சாதி என்பது மனிதர்களைப் பிரித்து, ஒருவரை மற்றொருவரை ஆதிக்கம் செய்ய தூண்டுகிறது என்றார். இது மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை இழிவுபடுத்துகிறது. அதனால் சாதி அமைப்பை உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
🎯 Exam Tip: பெரியாரின் சாதி எதிர்ப்பு கருத்துக்களையும், அதன் சமூக விளைவுகளையும் சுருக்கமாகவும், ஆழமாகவும் எழுத வேண்டும்.
Question 3. தேர்வுமுறை குறித்த பெரியாரின் சிந்தனைகளை எழுதுக.
Answer: பெரியாரின் சிந்தனைகள், வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் தேர்வு முறையையும், அதற்கு முதன்மை இடம் அளிக்கும் முறையையும் எதிர்த்தன. அவர் உண்மையான அறிவிற்கும் புரிதலுக்கும் முக்கியத்துவம் அளித்தார். கற்றல் என்பது வெறும் தேர்வுக்காக மட்டும் இருக்கக் கூடாது என்பதே அவரது கருத்தாக இருந்தது.
In simple words: பெரியார் வெறும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் தேர்வு முறையை எதிர்த்தார். அவர் உண்மையான அறிவையும் புரிதலையும் தான் முக்கியம் என்று கூறினார்.
🎯 Exam Tip: மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட கல்வி பற்றிய பெரியாரின் ஆழமான பார்வையை இந்த பதிலில் தெளிவுபடுத்துங்கள்.
Question 4. தமிழ்மொழி குறித்த பெரியாரின் சிந்தனைகளை எடுத்தியம்புக.
Answer:
இந்தியாவிலேயே தமிழ்மொழி ஒரு பழமையான மொழி ஆகும். பெரியார் தமிழ் மொழியின் தொன்மையை போற்றினார்.
இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தமிழில் புதிய நூல்கள் படைக்கப்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சிக்கு மொழி அவசியம் என்றார்.
In simple words: பெரியார் தமிழ்மொழி பழைய மொழி என்றார். இப்போதுள்ள அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற புதிய புத்தகங்கள் தமிழில் வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
🎯 Exam Tip: பெரியார் தமிழ் மொழியின் பெருமையையும், அதன் வளர்ச்சிக்கு அவர் விரும்பிய மாற்றங்களையும் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.
Question 5. திருக்குறளைப் பெரியார் ஏன் மதிப்புமிக்க நூலாகக் கருதினார்?
Answer: திருக்குறளில் அறிவியல் சார்ந்த கருத்துக்களும், ஆழமான தத்துவக் கருத்துக்களும் உள்ளன. இவை அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை ஒரு மிக மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார். குறள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ, சாதிக்கோ சொந்தமில்லாத பொதுவான நீதிகளைக் கூறுவதால், அதை அனைவரும் பின்பற்றலாம் என்றார்.
In simple words: திருக்குறளில் அறிவியல் மற்றும் தத்துவக் கருத்துகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கின்றன. அதனால் பெரியார் அதை ஒரு முக்கியமான நூலாகப் பார்த்தார்.
🎯 Exam Tip: திருக்குறளின் உலகப் பொதுவான தன்மை, அறிவியல் மற்றும் தத்துவ உள்ளடக்கம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடுங்கள்.
Question 6. பெரியார் நடத்திய இதழ்கள் யாவை?
Answer: பெரியார் அவர்கள் நடத்திய இதழ்கள்: குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (இது ஒரு ஆங்கில இதழ்). இந்த இதழ்கள் மூலம் தனது கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்.
In simple words: பெரியார் நடத்திய பத்திரிகைகள் குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் ஆகியவை.
🎯 Exam Tip: பெரியார் நடத்திய இதழ்களின் பெயர்களை சரியாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சிறுவினா
Question 1. தந்தை பெரியாரின் சிறப்புப் பெயர்களைக் கூறுக.
Answer: தந்தை பெரியாரின் சிறப்புப் பெயர்கள்:
• பகுத்தறிவுப் பகலவன்
• சுயமரியாதைச் சுடர்
• தெற்காசிய சாக்ரடீசு
• பெண்ணினப் போர் முரசு
• வைக்கம் வீரர்
• புத்துலகத் தொலைநோக்காளர்
• ஈரோட்டுச் சிங்கம்
இந்த பெயர்கள் அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும் சமூக சீர்திருத்தங்களையும் குறிக்கின்றன.
In simple words: பெரியாருக்கு பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், தெற்காசிய சாக்ரடீசு, பெண்ணினப் போர் முரசு, வைக்கம் வீரர், புத்துலகத் தொலைநோக்காளர், ஈரோட்டுச் சிங்கம் போன்ற பல சிறப்புப் பெயர்கள் உள்ளன.
🎯 Exam Tip: பெரியாரின் அனைத்து சிறப்புப் பெயர்களையும் தவறில்லாமல் பட்டியலிட வேண்டும்.
Question 2. கல்வி குறித்து பெரியாரின் சிந்தனைகள் யாவை?
Answer:
சமூக முன்னேற்றத்திற்கு கல்வியே ஒரு சிறந்த கருவி என்று பெரியார் நம்பினார். கல்விதான் மக்களை மேம்படுத்தும்.
கற்பிக்கப்படும் கல்வி, மக்களிடம் பகுத்தறிவு, சுயமரியாதை, நல்லொழுக்கம், சுய சிந்தனை ஆற்றல், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை மட்டும் கற்பிப்பதாக இருக்கக் கூடாது.
In simple words: கல்விதான் சமூக வளர்ச்சிக்கு முக்கியம் என்று பெரியார் சொன்னார். கல்வி என்பது மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களை வளர்க்க வேண்டும் என்றார்.
🎯 Exam Tip: பெரியார் வெறும் கல்வி அறிவை மட்டும் அல்ல, அதனுடன் சமூக, அறநெறி மேம்பாட்டையும் இணைத்துப் பார்த்தார் என்பதை விளக்க வேண்டும்.
Question 3. தந்தை பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தார்?
Answer: தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்த சில முக்கியமான விஷயங்கள்:
• இந்தித்திணிப்பு
• கள்ளுண்ணல்
• குலக்கல்வி திட்டம்
• குழந்தைத் திருமணம்
• சாதி அமைப்பு
• மணக்கொடை
• தேவதாசி முறை
இந்த சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடி, சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வர அவர் பாடுபட்டார்.
In simple words: பெரியார் இந்தித் திணிப்பு, கள்ளுண்ணல், குலக்கல்வி, குழந்தைத் திருமணம், சாதி, மணக்கொடை, தேவதாசி முறை போன்ற பல தீமைகளை எதிர்த்தார்.
🎯 Exam Tip: பெரியார் எதிர்த்த சமூகத் தீமைகளைத் தெளிவாகப் பட்டியலிட்டு, அவரது சீர்திருத்த நோக்கத்தை எடுத்துக்காட்ட வேண்டும்.
Question 4. பெரியார் விதைத்த விதைகள் யாவை?
Answer: பெரியார் விதைத்த முக்கியச் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் (விதைகள்) சில:
• கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குதல்.
• பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குதல்.
• குடும்ப நலத் திட்டங்களை செயல்படுத்துதல்.
• கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தல்.
• சீர்திருத்த திருமணச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
இந்தக் கருத்துக்கள் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
In simple words: பெரியார் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு, குடும்ப நலத்திட்டம், கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் போன்ற பல புதிய கருத்துக்களை சமூகத்தில் விதைத்தார்.
🎯 Exam Tip: பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களை "விதைகள்" என்ற உருவகத்துடன் இணைத்து, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை சுருக்கமாக விளக்க வேண்டும்.
Question 5. பெண்கள் நலம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள் யாவை?
Answer: பெரியாரின் பெண்கள் நலச் சிந்தனைகள்:
• நாட்டு விடுதலை என்பதை விடப் பெண் விடுதலைதான் மிகவும் முக்கியமானது. அது ஒரு சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கு அவசியம்.
• கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு இணையான உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
• வேலைவாய்ப்புகளில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்.
• பொருளாதார ரீதியாக பெண்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருக்கக் கூடாது. அவர்கள் சுயசார்புடன் இருக்க வேண்டும்.
• பெண்கள் நன்கு கல்வி கற்று, சுயமாக உழைத்து பொருளீட்ட வேண்டும்.
• தெளிவான அறிவுடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் பெண்கள் வாழ வேண்டும்.
• கைம்பெண்களுக்கு மறுமணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
• குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கு வழங்க வேண்டும். இந்த உரிமைகள் சமூகத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும்.
In simple words: பெரியார் நாட்டு விடுதலையை விடப் பெண் விடுதலைதான் முக்கியம் என்றார். பெண்களுக்கு கல்வி, வேலை, சொத்துக்களில் சம உரிமை வேண்டும் என்றும், அவர்கள் சுயமாாகச் சம்பாதித்து வாழ வேண்டும் என்றும் கூறினார். விதவைப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
🎯 Exam Tip: பெரியாரின் பெண் விடுதலை, சம உரிமை, சுயசார்பு, கல்வி, மற்றும் மறுமணம் குறித்த அனைத்து முக்கியச் சிந்தனைகளையும் விவரிக்கவும்.
Free study material for Tamil
TN Board Solutions Class 9 Tamil Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள்
Students can now access the TN Board Solutions for Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள் prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 9 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.
Detailed Explanations for Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள்
Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 9 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 9 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.
Benefits of using Tamil Class 9 Solved Papers
Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 9 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 08.1 பெரியாரின் சிந்தனைகள் to get a complete preparation experience.
FAQs
The complete and updated Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் is available for free on StudiesToday.com. These solutions for Class 9 Tamil are as per latest TN Board curriculum.
Yes, our experts have revised the Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.
Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் will help students to get full marks in the theory paper.
Yes, we provide bilingual support for Class 9 Tamil. You can access Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் in both English and Hindi medium.
Yes, you can download the entire Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் in printable PDF format for offline study on any device.