Get the most accurate TN Board Solutions for Class 9 Tamil Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள் here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 9 Tamil. Our expert-created answers for Class 9 Tamil are available for free download in PDF format.
Detailed Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள் TN Board Solutions for Class 9 Tamil
For Class 9 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 9 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள் solutions will improve your exam performance.
Class 9 Tamil Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள் TN Board Solutions PDF
Question 1. வல்லினம் வருமா?
(அ) தோழி __கூற்று
(ஆ) பெரிய __ தம்பி
(இ) சிறிய __பறவை
(ஈ) பழகுதமிழ்
(உ) இது __கேள்
(ஊ) எலி __கடிக்கும்
(எ) ஓடிய __குதிரை
(ஏ) தரும்படி சொன்னார்
(ஐ) வாழ்க __ தலைவர்
(ஒ) கார் காலம்
Answer:
| அ) தோழி_கூற்று | நிலைமொழி உயர்தினையாய் இருந்தால் வல்லினம் மிகா. |
|---|---|
| ஆ) பெரிய_தம்பி | குறிப்புப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. |
| இ) சிறிய_பறவை | குறிப்புப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. |
| ஈ) பழகுதமிழ் | வினைத்தொகையில் வல்லினம் மிகாது. |
| உ) இதுகேள் | இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது. |
| ஊ) எலி_கடிக்கும் | எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது. |
| எ) ஓடிய_குதிரை | பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. |
| ஏ) தரும்படி சொன்னார் | “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. |
| ஐ) வாழ்க_தலைவர் | வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. |
| ஒ) கார்__காலம் | காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது. |
In simple words: உயர்திணை சொற்கள், குறிப்புப் பெயரெச்சம், வினைத்தொகை, சுட்டுப் பெயர்கள், எழுவாய்த் தொடர்கள், பெயரெச்சம், 'படி' என முடியும் வினையெச்சம், வியங்கோள் வினைமுற்று, காலப் பெயர்ச்சொல் ஆகிய இடங்களில் வல்லினம் வராது. இது தமிழ் இலக்கணத்தின் ஒரு முக்கிய விதி.
🎯 Exam Tip: வல்லினம் வராத இடங்களுக்கான விதிகளைச் சரியான எடுத்துக்காட்டுகளுடன் நினைவில் கொள்ளுங்கள்.
Question 2. வல்லினம் இடலாமா?
(அ) வாழ்த்து கள்
(ஆ) எழுத்து__ கள்
(இ) திருநிறை _ செல்வன்
(ஈ) திருவளர் செல்வி
Answer:
| 1. வாழ்த்துகள் | ‘கள்’ என்னும் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் இடக்கூடாது. |
|---|---|
| 2. எழுத்துகள் | “கள்” என்னும் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் இடுதல் கூடாது. |
| 3. திருநிறை_செல்வன் | “திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் வேண்டும். |
| 4. திருவளர்_செல்வி | “வளர்செல்வி” வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது. |
In simple words: 'கள்' என்ற பன்மை விகுதி சேரும்போது வல்லினம் பயன்படுத்தக்கூடாது. ஆனால், இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் சொற்களிலும், இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும் வல்லினம் இட வேண்டும் அல்லது இடக்கூடாது என்பதற்கு விதிகள் உள்ளன.
🎯 Exam Tip: பன்மை விகுதி மற்றும் வேற்றுமை உருபுகளின் பயன்பாட்டின்போது வல்லினத்தின் விதியைச் சரியாகப் புரிந்து எழுதுவது முக்கியம்.
Question 3. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
(அ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
(ஆ) அத்தனைச் சிறிய
(இ) ஆத்திச்சூடி
(ஈ) எடுத்துக்காட்டுகள்
(உ) கீழ்பக்கம்
(ஊ) சான்றோர் பேரவை
(எ) சென்னைப் பல்கலைக்கழகம்
(ஏ) தயிர்ச்சோறு
Answer:
| சொற்றொடர் | விளக்கம் | |
|---|---|---|
| அ) | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (தவறு) அண்ணாமலை பல்கலைக் கழகம் என்பது தான் (சரி) | 'அண்ணாமலை' என்பது ஒரு பெயர். பெயரை அடுத்து வல்லினம் வராது. ஆனால், 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பதால், 'பல்கலைக்கழகம்' என்பதில் வல்லினம் இட்டு எழுதுவது சரியே. |
| ஆ) | அத்தனைச் சிறிய (தவறு) அத்தனை சிறிய (சரி) | 'அத்தனை' என்ற சொல்லின் பின் வல்லினம் வராது. |
| இ) | ஆத்திச்சூடி (சரி) | 'ஆத்தி' (அகர ஈறு) மற்றும் 'சூடி' (இகர ஈறு) சேரும்போது வல்லினம் மிகும். |
| ஈ) | எடுத்துக்காட்டுகள் (சரி) | இது வன்தொடர் குற்றியலுகரம் என்பதால் வல்லினம் இட்டு எழுத வேண்டும். |
| உ) | கீழ்பக்கம் (தவறு) கீழ்ப்பக்கம் (சரி) | 'கீழ்ப்பக்கம்' என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இங்கு வல்லினம் மிகும். |
| ஊ) | சான்றோர் பேரவை (சரி) | 'சான்றோர்' என்பது உயர்திணை சொல். நிலைமொழியில் உயர்திணை வரும்போது வல்லினம் வராது. |
| எ) | சென்னைப் பல்கலைக்கழகம் (சரி) | இது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இங்கு வல்லினம் இடுதல் வேண்டும். |
| ஏ) | தயிர்ச்சோறு (சரி) | இது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இங்கு வல்லினம் இடுதல் வேண்டும். |
In simple words: 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்', 'ஆத்திச்சூடி', 'எடுத்துக்காட்டுகள்', 'கீழ்ப்பக்கம்', 'சென்னைப் பல்கலைக்கழகம்', 'தயிர்ச்சோறு' போன்ற சொற்களில் வல்லினம் மிகும் இடங்களும், 'அத்தனை சிறிய', 'சான்றோர் பேரவை' போன்ற சொற்களில் வல்லினம் மிகா இடங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி இலக்கண விதிகள் உள்ளன.
🎯 Exam Tip: இலக்கண விதிகளை நினைவில் வைத்து, எந்த சொற்றொடரில் வல்லினம் இட வேண்டும் அல்லது இடக்கூடாது என்பதைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.
Question 4. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
(அ) வங்கி கடன்
(ஆ) பழங்களை பறிக்காதீர்கள்
(இ) திட்ட குழு
(ஈ) அரசு ஆணை பிறப்பித்தது
(உ) மருந்து கடை
(ஊ) வேலையில்லாப் பட்டதாரி
(எ) சிறப்பு பரிசு
Answer:
| சொற்றொடர் | வல்லினம் | இலக்கணம் | |
|---|---|---|---|
| அ. | வங்கிக்கடன் | மிகும் | இகர ஈற்றில் வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்). |
| ஆ. | பழங்களைப்பறிக்காதீர்கள் | மிகும் | 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர் என்பதால் வல்லினம் மிகும். |
| இ. | திட்ட குழு | மிகாது | 'திட்ட' என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. |
| ஈ. | அரசு ஆணை பிறப்பித்தது | மிகாது | 'ஆணை பிறப்பித்தது' என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. எனவே வல்லினம் மிகாது. |
| உ. | மருந்துக்கடை | மிகும் | மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும் வல்லினம் மிகும். மேலும், இது இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும் வல்லினம் மிகும். |
| ஊ. | வேலையில்லாப் பட்டதாரி | மிகும் | 'வேலையில்லா' என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இங்கு வல்லினம் மிகும். |
| எ. | சிறப்பு பரிசு | மிகும் | 'சிறப்பு' என்பது வன்தொடர் குற்றியலுகரம். இங்கு வல்லினம் மிகும். |
In simple words: இந்தத் தொடர்களில், சொற்களின் வகை, வேற்றுமை உருபுகள், பெயரெச்சங்கள், வினைத்தொகை போன்ற இலக்கணக் காரணங்களால் வல்லினம் சில இடங்களில் மிகும், சில இடங்களில் மிகாது. ஒவ்வொரு விதிக்கும் தனித்தனி விளக்கங்கள் உண்டு.
🎯 Exam Tip: வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்களுக்கான விதிகளைச் சரியான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுறப் புரிந்து கொள்ளுங்கள்.
மொழிபெயர்க்க:
Answer:
நீர் இசை
புட்டிகளை மரக்கரண்டியால் தட்டும்போது அவை அதிர்ந்து ஒலியை உருவாக்குகின்றன. புட்டி எவ்வளவு அதிர்வு கொள்கிறதோ, அந்த அளவுக்கு ஓசை உயரும். ஒரு புட்டியில் நீர் அதிகமாக இருந்தால், அதிர்வு குறைவாக இருக்கும். அதனால் நீர் குறைவாக இருந்தால், ஓசை உயரும்.
கண்ணாடிப் புட்டிகளாலான இசைக்கருவி.
கண்ணாடி புட்டிகள் மூலம் இசையை உருவாக்குதல்.
தேவையான உபகரணங்கள்:
- ஆறு கண்ணாடி புட்டிகள்
- மரத்தாலான கரண்டி ஒன்று
- உணவுப்பொருளுக்குப் பயன்படும் வண்ணப்பொடி
In simple words: புட்டிகளில் வெவ்வேறு அளவுகளில் நீர் நிரப்பி, கரண்டியால் தட்டினால் இசை வரும். நீர் குறைவாக இருந்தால் அதிக ஓசை வரும்.
🎯 Exam Tip: மொழிபெயர்க்கும்போது, மூலக் கருத்தை மாற்றாமல் எளிய தமிழில் தெளிவாக எழுதுவது முக்கியம்.
செய்முறை:
- முதல் புட்டியில் முழுவதுமாக நீரை நிரப்புங்கள். அடுத்து வரும் புட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நிரப்புங்கள்.
- உணவு நிறமிகளை நீரில் கலந்து, ஒவ்வொரு புட்டியிலும் வெவ்வேறு நீர் மட்டங்கள் இருப்பதைக் கவனியுங்கள்.
- இப்போது மரக்கரண்டியின் அடியால் புட்டிகளைத் தட்டினால், உங்களால் இசையை உருவாக்க முடியும்.
🎯 Exam Tip: செய்முறையைச் சரியாகப் புரிந்துகொண்டு, படிகளைத் தெளிவாக எழுதுவது அவசியம்.
தண்ணீர் இசையாகிறதா?
- மரக்கரண்டியால் புட்டிகளைத் தட்டும்போது ஏற்படும் அதிர்வுகளால் ஒலி உருவாகிறது.
- புட்டிகளில் நீர் அதிகமாக இருந்தால் அதிர்வுகளும் குறைவாக இருக்கும். நீர் குறைவாக இருந்தால் அதிர்வுகளும் அதிகமாக இருக்கும். ஒலியின் அளவுகள் மாறும்போழுது, அதற்கு ஏற்ப இசையும் மாறும். நீர் இசையாக மாறும் இந்த அறிவியலை நாம் காணலாம்.
In simple words: ஆம், நீர் இசையாக மாறும். நீர் மட்டங்கள் வேறுபடும்போது அதிர்வுகளின் அளவும் மாறும், அதனால் வெவ்வேறு இசைகள் உருவாகும்.
🎯 Exam Tip: ஒரு செயல்முறைக்குப் பின்னால் உள்ள அறிவியல் தத்துவத்தை விளக்கத் தயாராக இருங்கள்.
பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார சளின் சவப்பகான் நசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு - நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு - உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது - இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால்தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம். மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. (ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா)
Answer:
| சொற்கள் | தமிழாக்கம் |
|---|---|
| 1. ரொம்ப வீக்கு | நிரம்ப சபலம் |
| 2. ஆதார ருசிகள் | அடிப்படைச் சுவைகள் |
| 3. காபி | குழம்பி, கோப்பி, கொட்டை வடிநீர் |
| 4. ஸேவரி | காரசுவையுண்டி |
| 5. டேஸ்ட் | சுவை |
| 6. ருசிகள் | சுவைகள் |
| 7. சராசரி | ஏறத்தாழ |
| 8. அலட்டல் | மிகைப்படுத்திச் சொல்லுதல் |
| 9. எக்ஸ்பிரஷன் | விளைவுகள் |
| 10. வாசனை | நறுமணம் |
| 11. அல்வா | இனிப்புக்களி |
| 12. ஐஸ்க்ரீம் | பனிக்குழைவு |
| 13. ரசிக்க | களிக்க |
| 14. ஜில்லென்று | குளிர்ச்சி என்று |
| 15. கற்பூர வாசனை | சூடம் நறுமணம் |
| 16. பெப்பர்மிண்ட் வாசனை | புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள் |
| 17. மஸ்க் அரபுசேக் செண்ட் | ஆண்மானிலிருந்து எடுக்கப்பெற்ற வாசனைத் திரவியம் |
| 18. ஈத்தர் | தீப்பற்றக் கூடிய பொருள். |
| 19. பெட்ரோல் வாசனை | கல்நெய் (கன்னெய்) |
| 20. அமில வாசனை | காடிப் புளியம். |
In simple words: பல பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்வது நமது மொழி அறிவை மேம்படுத்தும்.
🎯 Exam Tip: பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்வது சொற்களஞ்சியத்தை அதிகரிக்கும்.
கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.
ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது - 'ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே'. 'ஏன்? என்னாச்சு?' என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி. 'எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.' இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்' என்றது உற்சாகமாக. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது-'உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும்.'
Answer:
உரையாடல்
(கடற்கரையோரம் அலையிலிருந்து இரண்டு சிப்பிகள் கரைக்கு வந்தன)
சிப்பி 1: ஐயோ, என்னால் இந்த வலியைத் தாங்க முடியவில்லையே! என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிப்பி 2: ஏன்? என்ன ஆயிற்று? நேற்று நன்றாகத் தானே இருந்தாய்? இன்றைக்கு என்ன நடந்தது?
சிப்பி 1: என் வயிற்றுக்குள் ஒரு பெரிய கனமான பந்து உருள்வது போல இருக்கிறது. அதனால் எனக்குத் தாங்க முடியாத வலி இருக்கிறது.
சிப்பி 2: எனக்கு எந்த வலியும் இல்லை. நல்ல வேளை, எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
(அடுத்த அலையிலிருந்து ஒரு நண்டு கரையில் வந்து நின்றது)
நண்டு: (இரண்டாவது சிப்பியிடம்) அந்த சிப்பி வலியால் துடிக்கிறது. உனக்கு எந்த வலியும் இல்லை என்று சொல்கிறாய். வலியைத் தாங்க விருப்பமில்லை, வலியைத் தாங்கத் தயாராக இல்லை என்கிறாய். அப்படியானால் நீ எப்போதும் வெறுமையாகவே கிடக்க வேண்டியதுதான். (முதல் சிப்பியிடம்) நீ வலியைத் தாங்கத் தயாராக இரு. சில நாட்களில் உன் வயிற்றிலிருந்து ஒரு அழகான முத்து வெளிவரும். அந்த முத்து எல்லோருக்கும் பெருமை தேடித்தரும்.
In simple words: வலி தாங்கும் சிப்பிக்கு ஒரு அழகான முத்து கிடைக்கும்; வலி தாங்காத சிப்பி வெறுமையாகவே இருக்கும் என்பதை இந்த உரையாடல் காட்டுகிறது. இது கடினமான முயற்சிக்குப் பின் வரும் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.
🎯 Exam Tip: ஒரு கதையை உரையாடலாக மாற்றும்போது, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், கதைப் போக்கையும் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும்.
செய்து கற்க.
Question 1. செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள ஒரு வாரத்திற்குரிய அறிவியல் செய்திகளைப் படித்துக் குறிப்பெடுக்க.
Answer:
நாள்: 14.4.18
சனிக்கிழமை
தினமணி
சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாணவர்கள் இந்த செயலிக்காக முதல்பரிசு பெற்றுள்ளனர்.
சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைப் பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு செல்வதற்கான புதிய செயலி மற்றும் இணைய முகவரியை மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
நாள்: 13.4.18
வெள்ளிக்கிழமை
தி இந்து
மம்மி பூனை
எகிப்தில் பூனை ஒரு கடவுளின் வடிவம் என்று நம்பப்பட்டது. அரச குடும்பத்தைப் போலவே பூனைகளையும் பதப்படுத்தி பாதுகாத்தனர். பிரமிடுகளில் உள்ள சுவரில் புனிதப் பூனைகள் வரையப்பட்டுள்ளன. இதுபற்றி பிரபல சூழலியல் எழுத்தாளர் சு. தியோடர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
தினமணி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். (IRNSS) செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி.41 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த இஸ்ரோ தலைவர் சிவன் இதைத் தெரிவித்தார்.
In simple words: செய்தித்தாள்களில் பல அறிவியல் செய்திகள் தினமும் வருகின்றன. மாணவர்கள் அவற்றை வாசித்து புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ளலாம்.
🎯 Exam Tip: செய்தித்தாள்களில் வரும் அறிவியல் செய்திகளைக் குறிப்பெடுக்கும்போது, தேதி, செய்தியின் தலைப்பு, மற்றும் முக்கிய தகவல்களைச் சுருக்கமாக எழுதுங்கள்.
Question 2. பொருளின் உண்மைத்தன்மையை எப்படி அறிவது?
Answer:நாம் அங்காடிக்குச் சென்று உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கும்போது, அதன் உறையிலோ அல்லது மேல் அட்டைப் பெட்டியிலோ ஒரு குறியீட்டு பட்டை (Barcode) இருக்கும். இதன் உண்மைத்தன்மையை அறிய, குறியீட்டுப் பட்டை இருக்கும் பகுதியைக் கணினியுடன் கூடிய ஒளிக் கதிர் மூலம் வருடும் போது (Scanning) அப்பொருளின்
- எடை மற்றும் விலை
- உற்பத்தி செய்த இடம்
- எந்த நாள் வரை பயன்படுத்தலாம் (முடிவு நாள்)
- அப்பொருளில் உள்ள மற்ற பொருள்களின் அளவு மற்றும் தன்மை
- உற்பத்தி உரிமம் போன்ற அனைத்து விபரங்களும் திரையில் தெரியும்.
இந்த முறையைப் பயன்படுத்தி, ஒரு பொருளை வாங்கும் முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும். இது நுகர்வோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
In simple words: கடையில் பொருள்களை வாங்கும்போது, அதன் பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், அந்தப் பொருளின் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். இது பொருளின் உண்மைத்தன்மையை அறிய உதவும்.
🎯 Exam Tip: Barcode (குறியீட்டுப் பட்டை) எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் பயன்கள் குறித்து தெளிவாக விளக்குங்கள்.
நயம் பாராட்டுக.
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!
பாரதிதாசன்.
Answer:
பாடலின் மையக்கருத்து:
பாரதிதாசன் இயற்கையை வருணித்துப் பாடுவதில் வல்லவர். இப்பாடலில், சூரியனைப் பல்வேறு வடிவங்களில் வருணித்துப் பாடுகிறார். உலகம் முழுவதும் இருளைப் போக்கி, தனது ஒளிக் கதிர்களைப் பரப்பி ஊன்றுகிறார்.
பாடலின் திரண்டகருத்து:
சூரியனே! நீ கடலுக்குள்ளிருந்து பொங்கி வருகிறாய். சிங்கம் பிடரிமயிர் சிலிர்ப்பது போல காட்சி தருகிறாய். வானத்தில் தீப்பிழம்பாய் எரிந்துகொண்டு, மாணிக்கக் குன்றாகவும், தங்கத் தட்டாகவும், வானம் என்னும் அகல் விளக்கில் பெரிய விளக்காகவும் இருக்கிறாய். கடலிலே உன் கோடிக் கதிர்களை ஊன்றுகிறாய். நெடுவானில் உன் ஒளிக் கதிர்களை நீட்டி, இடையிலுள்ள மலை, காடு, வீடு, குளம், ஆறு என அனைத்து இடங்களிலும் உன் ஒளி பரவுகிறது. சூரியனே! நீ வாழ்க!
நயம்:
பாரதிதாசன் பாட வந்த பொருளைப் பற்றி மட்டும் பாடாமல், செய்யுளுக்கே உரிய பல நயங்களையும் சேர்த்துப் பாடியிருக்கிறார்.
எதுகை நயம்:
அடிதோறும் மற்றும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை நயம் ஆகும். கவிஞர் அடிதோறும் எதுகை நயம் அமைத்துச் செய்யுளுக்குச் சொல்லழகை ஊட்டியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு:
- பொங்கி - கடலிலே
- சிங்கமே - நெடுவானிலே
- மங்காத - இடைபடு
- தங்கத்தின் - அடங்கநின்
மோனை நயம்:
அடிதோறும் மற்றும் சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். பாட்டுக்கு அழகு மோனை என்பது போல, மோனைத் தொடர்களை அமைத்துப் பாடியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு:
- பொங்கி - பொலிந்து - புதுப்பிடர்
- மங்காத - மாணிக்கக் - குன்றே
- தங்கத்தின் - தட்டு
- கடலிலே - கோடி கோடிக் - கதிர்க்கைகள்
- இடைப்படு - இல்லமோ
- அடங்க நின் - அமைந்தனை
அணி நயம்:
வனிதைக்கு மணி அழகு என்றால், செய்யுளுக்கு அணி அழகு. கவிஞர்கள் தாம் சொல்ல வந்த பொருளைக் கேட்பவர்களின் இன்பத்திற்கேற்ப பயன்படுத்துவார்கள். பாரதிதாசன் சூரியனைப் பல்வேறு உருவகங்களாகக் காட்சிப்படுத்துகிறார். எனவே இச்செய்யுளில் உருவக அணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
- மயிர்சிலிர்க்கும் - சிங்கம்
- மங்காத - தணற்பிழம்பு
- மாணிக்கக் - குன்று
- தங்கத் - தட்டு
- வானத் - தகளி, கதிர்க்கைகள்
இயைபு நயம்:
பாட்டுக்கு ஓசையின்பம் தருவது இயைபுநயம். இப்பாடலில் கவிஞர், அடிதோறும் இறுதிச் சீர் ஒன்றிணைய இயைபு நயம் அமைய இயைத்துப் பாடியிருக்கிறார். மயிர்சிலிர்க்கும், என எரிக்கும், குன்றே, பெருவிளக்கே இவ்வாறாகப் பல நயங்களை அமைத்துப் பரிதியின் சுடரை விளக்கிக் காட்டுகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மாலைக் கால வருணணை போன்று இப்பாடல் அமைந்து விளங்குகிறது.
In simple words: இந்தப் பாடல் சூரியனை சிங்கம், மாணிக்கக் குன்று, தங்கத் தட்டு என்று பலவாறு உருவகப்படுத்திப் பேசுகிறது. இது மோனை, எதுகை, இயைபு போன்ற பல அழகு அம்சங்களைக் கொண்டுள்ளது.
🎯 Exam Tip: நயம் பாராட்டும்போது, மையக்கருத்து, திரண்ட கருத்து, மற்றும் மோனை, எதுகை, இயைபு, அணி போன்ற கவிதை நயங்களை உதாரணங்களுடன் விளக்குங்கள்.
எதுகை நயம்:
அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரப் பாடுவது எதுகை நயம் ஆகும். இது செய்யுளுக்கு அழகூட்டும் ஒரு நயம்.
எடுத்துக்காட்டு:
- பொங்கி - கடலிலே
- சிங்கமே - நெடுவானிலே
- மங்காத - இடைபடு
- தங்கத்தின் - அடங்கநின்
கவிஞர் அடிதோறும் எதுகை நயம் அமைத்துச் செய்யுளுக்குச் சொல்லழகு ஊட்டியிருக்கிறார்.
மோனை நயம்:
அடிதோறும் சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். இதுவும் செய்யுளுக்கு அழகு சேர்க்கும் ஒரு நயம்.
காட்டுக்கு அழகு யானை போல, பாட்டுக்கு அழகு மோனை என்பது போல மோனைத் தொடர்களை அமைத்துப் பாடியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு:
- பொங்கி - பொலிந்து - புதுப்பிடர்
- மங்காத - மாணிக்கக் - குன்றே
- தங்கத்தின் - தட்டு
- கடலிலே - கோடி - கோடிக் - கதிர்க்கைகள்
- இடைப்படு - இல்லமோ
- அடங்க நின் - அமைந்தனை
அணி நயம்:
பெண்களுக்கு நகைகள் அழகு சேர்ப்பது போல, செய்யுளுக்கு அணி அழகு சேர்க்கும். கவிஞர்கள் தாம் சொல்ல வந்த கருத்தை வாசகர்களுக்கு இன்பம் தரும்படி வெளிப்படுத்த அணிகளைப் பயன்படுத்துவார்கள்.
பாரதிதாசன் சூரியனைப் பல்வேறு உருவங்களாகப் பார்க்கிறார். எனவே இச்செய்யுளில் உருவக அணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
- மயிர்சிலிர்க்கும் - சிங்கம்
- மங்காத - தணற்பிழம்பு
- மாணிக்கக் - குன்று
- தங்கத் - தட்டு
- வானத்தகளி - கதிர்க்கைகள்
இயைபு நயம்:
பாட்டுக்கு ஓசையின்பம் தருவது இயைபுநயம். இப்பாடலில் கவிஞர், ஒவ்வொரு அடியிலும் இறுதிச் சீர்கள் ஒன்றிணைய இயைபு நயம் அமையப் பாடியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு:
மயிர்சிலிர்க்கும், என எரிக்கும், குன்றே, பெருவிளக்கே இவ்வாறாகப் பல்வேறு நயங்களை அமைத்துப் பரிதியின் ஒளியை விளக்கிக் காட்டுகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மாலைக் கால வருணணை போன்று இப்பாடல் அமைந்துள்ளது.
பாடு விளையாடு
குழுவில் விளையாடுக.
நான்கு மாணவர்கள் கொண்ட குழுக்களாக எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரிந்து கொள்க. முதல் மாணவர் ஒரு சொல்லைத் தொடங்குக. அதனோடு தொடர்புடைய ஒரு சொல்லை இரண்டாம் மாணவர் கூறுக. இப்படியே நான்கு மாணவர்களும் கூறிய சொற்களைக் கொண்டு ஒரு தொடர் அமைக்க.
எடுத்துக்காட்டு:
மாணவர் 1 : கணினி
மாணவர் 2 : அறிவியல்
மாணவர் 3 : தமிழ்
மாணவர் 4 : மொழி
சொல்லப்பட்ட சொற்கள்: கணினி, அறிவியல், தமிழ், மொழி
தொடர்: அறிவியல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்துத் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது.
1. மாணவர் 1 : ஏவு ஊர்தி
மாணவர் 2 : பாயும்
மாணவர் 3 : விண்வெளி
மாணவர் 4 : ஏவுகணை
தொடர்: விண்வெளி மையத்தில் ஏவு ஊர்தியில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணை விண்ணில் பாயும்.
2. மாணவர் 1 : அடக்கம்
மாணவர் 2 : இரு கண்கள்
மாணவர் 3 : நமக்கு
மாணவர் 4 : பொறுமை
தொடர்: அடக்கமும், பொறுமையும் நமக்கு இரு கண்களாகத் திகழ்கிறது.
3. மாணவர் 1 : தொழில்நுட்பம்
மாணவர் 2 : நம் நாடு
மாணவர் 3 : வருகிறது
மாணவர் 4 : நாளுக்குநாள்
தொடர்: நம் நாட்டில் தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
4. மாணவர் 1 : சுவைத்தல்
மாணவர் 2 : காணல்
மாணவர் 3 : நுகர்தல்
மாணவர் 4 : தொடுதல்
தொடர்: தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல் ஆகிய நான்கு புலன்களால் அறியும் ஆற்றல் கொண்டவை நான்கறிவு உயிர்கள் எனப்படும்.
மாணவர்களே இவ்வாறாக உங்கள் நண்பர்களுடன் விளையாடும்போது மொழி அறிவு வளரும்.
Question 1. அகராதியில் காண்க. இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்
Answer:
இமிழ்தல் - இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
இசைவு - இணக்கம், சம்மதி, பொருத்து, தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
துவனம் - அக்கினி, நெருப்பு
சபலை - இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
துகலம் - பங்கு
In simple words: இந்தத் தமிழ் சொற்களுக்கு அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பல பொருட்களைக் கண்டறிந்து பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்கலாம்.
🎯 Exam Tip: அகராதிப் பொருளை எழுதும் போது, ஒரு சொல்லுக்கு உள்ள எல்லாப் பொருட்களையும் எழுதுவது அவசியம்.
Question 2. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
(அ) எண்ணெய் ஊற்றி ________ விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ________.
(ஆ) எனக்கு ________ பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் ________ ஐ வை.
(இ) கைப்பொருளைக் கடல் ________ யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி ________ கிடைக்குமா?
(ஈ) வீட்டு ________ ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து ________ உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
(உ) எழுத்தாணிகொண்டு ________ தமிழை, ஏவுகணையில் ________ எல்லாக்கோளிலும் ஏற்றுங்கள்.
Answer:
(அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்.
(ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
(இ) கைப்பொருளைக் கடல் அலை யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
(ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
(உ) எழுத்தாணிகொண்டு எழுதி தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக்கோளிலும் ஏற்றுங்கள்.
In simple words: ஒரு சில சொற்கள் பல இடங்களில் வெவ்வேறு பொருளில் வரும். இங்கு கொடுக்கப்பட்ட சொற்களை சரியான இடத்தில் பயன்படுத்தி வாக்கியங்களை முழுமைப்படுத்த வேண்டும்.
🎯 Exam Tip: ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள் தரும் (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப) என்பதை இந்த மாதிரி கேள்விகள் மூலம் கற்றுக்கொள்ளலாம். கவனம் தேவை.
Question 3. குவிந்து - குவித்து; சேர்ந்து - சேர்த்து; பணிந்து - பணித்து; பொருந்து - பொருத்து; மாறு - மாற்று. (எ.கா) விரிந்தது - விரித்தது. இந்த சொற்களின் மற்ற வடிவங்களை (அ) முதல் (ஊ) வரை உள்ள வாக்கியங்களில் எழுதுக.
(அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
(ஆ)
(ஈ)
(உ)
(ஊ)
Answer:
(அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
(ஆ) ஆற்றில் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை வீட்டுக்கு முன்பு குவித்து வைத்தோம். கையில் காசு சேர்ந்தது; சேர்ந்த காசுகளைச் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்தோம்.
(ஈ) ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்து நடந்தனர். விடுமுறையில் இன்னின்ன பாடங்களைப் படித்து வருமாறு பணித்திருக்கிறார்.
(உ) பின்வரும் சொற்களைப் பின்குறித்த பிறசொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டுக.
(ஊ) பிறருடைய தீயவழியில் இருந்து நீ மாறு; அவர்களை உன் வழிக்கு மாற்று.
In simple words: கொடுக்கப்பட்ட வாக்கியங்களை அதன் பொருள் மாறாமல், சரியான வினைச் சொல்லை பயன்படுத்தி நிரப்ப வேண்டும். இது சொற்களின் வெவ்வேறு வடிவங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் காட்டுகிறது.
🎯 Exam Tip: வினைச்சொற்களின் பல்வேறு வடிவங்களை அவற்றின் சரியான பொருள் மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப சரியாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
Question 4. காட்சியைக் கண்டு கவினுற கருத்தளிக்க.
Answer:
மனிதன் வேட்டையாடி விலங்குகளை அடிமைப்படுத்தினான். அடிமைகளிடம் முதலாளி ஆகிக் கொண்டான். அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டான். அறிவைக் கருவிக்கு அடிமையாக்கினான். கருவிகள் மனிதனை அடிமையாக்கியன.
In simple words: மனிதன் விலங்குகளைப் பழக்கித் தன் வேலைகளைச் செய்ய வைத்தான். ஆனால், தொழில்நுட்பக் கருவிகள் வந்த பிறகு, மனிதனே அந்தக் கருவிகளுக்கு அடிமையாகிவிட்டான் என்பதை இந்த படம் காட்டுகிறது.
🎯 Exam Tip: படத்தைக் கவனித்து, அது உணர்த்தும் கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு உங்கள் சொந்த நடையில் விவரிக்கவும்.
Question 5. மின்சார சேமிப்பு விழிப்புணர்வு முழக்கத்தொடர்களை எழுதி வகுப்பறையிலும் பள்ளியிலும் காட்சிப்படுத்துக.
Answer:
மின்சார சேமிப்புப் பற்றிய முழக்கத் தொடர்கள்:
1. மின் இயந்திரங்களைத் தவிர்ப்போம்.
2. மின்சாரம் சேமிப்போம் - நம் ஆரோக்கியத்தையும் காப்போம்.
3. மின்சார சேமிப்பு மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
4. நீராதாரம் பெருக்குவோம் மின் உற்பத்தியையும் பெருக்குவோம்.
5. மின்சார சிக்கனம் தேவை இக்கணம்.
6. குழல் விளக்கையும் குண்டு விளக்கையும் தவிர்ப்போம், மின்சாரம் சேமிப்போம்.
In simple words: மின்சாரத்தை எப்படிச் சேமிப்பது என்பதைப் பற்றிய முழக்கங்களை எழுதி, எல்லோரும் பார்க்கும் இடங்களில் வைப்பதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மின்சாரம் அத்தியாவசியமானது, அதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
🎯 Exam Tip: முழக்கங்கள் சுருக்கமாகவும், எளிதாகவும், எல்லோருக்கும் புரியும் வகையிலும் இருக்க வேண்டும். இதுதான் ஒரு நல்ல முழக்கத்தின் சிறப்பு.
நிற்க அதற்குத்தக....
Question 6. என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது
Answer:
1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து முடிப்பது.
5. என் தங்கையோடு போட்டிபோடாமல் ஆண், பெண் வேறுபாடின்றி உரிமையைச் சமமாகப் பெற செய்வேன்.
6. நான் குடியிருக்கும் தெருவில் குப்பைக் கூளங்கள் தேங்காதவாறு பார்த்துக் கொண்டு பிறர்க்கு முன்மாதிரியாக நடந்து கொள்வேன்.
In simple words: பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குவது, செல்போன் பயன்பாட்டைக் குறைப்பது, தொலைக்காட்சி பார்ப்பதற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது, நம் வேலையை நாமே செய்வது போன்ற நல்ல பழக்கங்களை கடைபிடிக்கலாம்.
🎯 Exam Tip: பெற்றோரை மகிழ்விப்பது என்பது மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமல்ல, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் ஒரு வழி.
கலைச்சொல் அறிவோம்
- ஏவு ஊர்தி - Launch Vehicle
- பதிவிறக்கம் - Download
- ஏவுகணை - Missile
- பயணியர் பெயர்ப் பதிவு - PNR (Passenger Name Record)
- கடல் மைல் - Nautical Mile
- மின்னணு இயந்திரங்கள் - Electronic devices
- காணொலிக் கூட்டம் - Video Conference
பாடநூல் வினாக்கள்
சிறுவினா
Question 1. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை விளக்குக.
Answer:
செடிகொடி என்பதற்கும் செடிக் கொடி என்பதற்கும் வேறுபாடு உண்டு. செடிகொடி என்னும் தொடருக்குச் 'செடியும் கொடியும்' என்பது பொருள். செடிக் கொடி என்னும் தொடரானது 'செடியில் ஏறியுள்ள கொடி' என்றே பொருள். செடி கொடி என்று எழுதும்போது 'செடி + உம் கொடி + உம்' எனப் பிரித்து எழுதுவது 'உம்' என்ற சொல் தொக்கி வருவதால் உம்மைத்தொகை எனப்படும். உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவது பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாதது.
In simple words: தமிழில் வல்லினம் சேர்த்தோ அல்லது நீக்கியோ எழுதுவது மிகவும் முக்கியம். இது சொற்களின் பொருளை மாற்றும். சரியான ஒலிப்புக்கும், சரியான பொருளைப் புரிந்துகொள்வதற்கும் வல்லினம் பயன்பாடு அவசியம்.
🎯 Exam Tip: வல்லின மிகா இடங்கள் மற்றும் மிகும் இடங்களை சரியாகப் புரிந்து கொள்வது தமிழ் இலக்கணத்தில் மிகவும் அவசியம். இது எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க உதவும்.
Question 2. எழுத்துகள் - எழுத்துக்கள் - இவற்றில் எது சரி?
Answer:
'எழுத்துகள்' என்பது சரி. இதே போல கருத்துக்கள், வாக்குக்கள், வாழ்த்துக்கள் போன்றவற்றில் வரும் வல்லினம் மிகாது. விகுதிப் புணர்ச்சியில் (கருத்து + கள்), வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு இலக்கணத்தில் எந்த விதியும் இல்லை.
In simple words: தமிழில் 'கள்' விகுதி சேரும்போது, அதற்கு முன் உள்ள எழுத்துடன் வல்லினம் சேராது. எனவே 'எழுத்துகள்' என்பதே சரியானது.
🎯 Exam Tip: 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகாது என்ற பொதுவான விதியை நினைவில் கொள்ளுங்கள். இது பல வார்த்தைகளுக்குப் பொருந்தும்.
Question 3. வல்லெழுத்து (க், ச், த், ப்) ஏன் மிக வேண்டும்?
Answer:
வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக வேண்டும். பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இது இன்றியமையாதது. வல்லின எழுத்துகள் சரியாகப் பயன்படுத்தப்படும்போது வாக்கியங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருக்கும்.
In simple words: க், ச், த், ப் போன்ற எழுத்துகளைச் சரியாகப் பயன்படுத்துவது, தமிழ் மொழியில் ஒரு வாக்கியத்தின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், கேட்பதற்கு அழகாகவும் இருக்கவும் உதவுகிறது.
🎯 Exam Tip: வல்லெழுத்துகள் மிகும் இடங்களை அறிந்து பயன்படுத்துவது தமிழ் வாக்கியங்களின் தெளிவையும் அழகையும் அதிகரிக்கும். இவை முக்கிய இலக்கண விதிகளாகும்.
Free study material for Tamil
TN Board Solutions Class 9 Tamil Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள்
Students can now access the TN Board Solutions for Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள் prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 9 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.
Detailed Explanations for Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள்
Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 9 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 9 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.
Benefits of using Tamil Class 9 Solved Papers
Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 9 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 04.5 வல்லினம் மிகா இடங்கள் to get a complete preparation experience.
FAQs
The complete and updated Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் is available for free on StudiesToday.com. These solutions for Class 9 Tamil are as per latest TN Board curriculum.
Yes, our experts have revised the Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.
Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் will help students to get full marks in the theory paper.
Yes, we provide bilingual support for Class 9 Tamil. You can access Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் in both English and Hindi medium.
Yes, you can download the entire Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் in printable PDF format for offline study on any device.