Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

Get the most accurate TN Board Solutions for Class 6 Tamil Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள் here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 6 Tamil. Our expert-created answers for Class 6 Tamil are available for free download in PDF format.

Detailed Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள் TN Board Solutions for Class 6 Tamil

For Class 6 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 6 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள் solutions will improve your exam performance.

Class 6 Tamil Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள் TN Board Solutions PDF

கற்பவை கற்றபின்

 

Question 1. ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக.
Answer:

ஞ- வரிசையில்வ- வரிசையில்ய- வரிசையில்
ஞ - ஞமலிவ - வனம்ய - யசனம்
ஞா - ஞாயிறுவா - வானம்யா - யார்
ஞி – ஞிமிறுவி - விலையு - யுத்தம்
ஞெ - ஞெகிழம்வீ - வீக்கம்யூ - யூகம்
வெ - வெற்றியோ - யோகம்
வே - வேலையௌ - யௌதகம்
வை - வைகைறை
In simple words: The table above lists specific words that start with the உயிர்மெய் எழுத்துகள் (Uyirmey letters) ஞ, ய, and வ. These are examples of words found in a dictionary starting with those letters.

🎯 Exam Tip: When asked to list words, organizing them in a clear table or bullet points makes your answer easy to read and shows your understanding.

மதிப்பீடு

 

Question 1. மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
Answer:
(i) க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் மொழி முதலில் வரும்.
(ii) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டும் மொழி முதலில் வரும்.
'ங' வரிசையில் 'ங' என்னும் ஓர் எழுத்து மட்டும் மொழி முதலில் வரும். 'ஙனம்' (nganam) என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
'ஞ' வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகள் மட்டும் மொழி முதலில் வரும்.
'ய' வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகள் மொழி முதலில் வரும்.
'வ' வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகள் மொழி முதலில் வரும்.
In simple words: Certain letters, called உயிர்மெய் எழுத்துகள் (Uyirmey letters), can start a word. Some letter groups can all start a word, while others, like ங, ஞ, ய, வ, only have a few letters in their group that can do so.

🎯 Exam Tip: Remember that not all letters can begin a word. Knowing which specific letters are "மொழி முதல்" (beginning of a word) helps in correct spelling and grammar.

 

Question 2. மொழி இறுதியில் வராத மெய்கள் என்னென்ன?
Answer: க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் ஒரு சொல்லின் இறுதியில் வருவதில்லை. இவை பெரும்பாலும் வார்த்தையின் நடுவில் காணப்படும்.
In simple words: The seven letters க், ங், ச், ட், த், ப், ற் never appear at the very end of a Tamil word. They only come in the middle.

🎯 Exam Tip: Understanding "மொழி இறுதி" (end of a word) letters is important for writing Tamil words correctly and avoiding common errors.

 

Question 3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
Answer: ஆய்த எழுத்து (ஃ) ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனியாகவோ, வார்த்தையின் முதல் அல்லது இறுதியில் வராது.
In simple words: The special ஆய்த எழுத்து (the ஃ symbol) can only ever be found in the middle of a word, never at the beginning or end.

🎯 Exam Tip: The ஆய்த எழுத்து is unique because of its position. Always remember it only appears in the middle of words.

மொழியை ஆள்வோம்

கண்டதும் கேட்டும் மகிழ்க.

 

Question 1. அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலிகளைக் கண்டும், கேட்டும் மகிழ்க.
Answer: மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலி காட்சிகளைத் தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ளச் செய்தல் வேண்டும். இது மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் ஒரு நல்ல வழி.
In simple words: Students should watch and listen to videos about science discoveries on their own. This helps them learn and get excited about science.

🎯 Exam Tip: When asked to describe an activity, focus on the educational benefits and how it encourages self-learning.

பேசி வெளிப்படுத்துக்

 

Question 1. உங்களை ஓர் அறிவியல் அறிஞராகக் கற்பனை செய்து கொண்டு எவ்வகைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவீர்கள் என்பது குறித்துப் பேசுக.
Answer:
(i) நான் அறிவியல் அறிஞரானால் நாட்டு மக்களுக்குப் பயன்தரும் ஆராய்ச்சிகளைச் செய்வேன். அறிவியல் பிரிவில் விலங்கியலைப் பாடமாக எடுத்துப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி செய்வேன்.
(ii) முதலில் மக்களின் மனதில் எழும் கோபம், தீயகுணங்கள் அதாவது எதிர்மறையான எண்ணங்கள், பிறரை அழிக்கும் வஞ்சக எண்ணம். இவற்றையெல்லாம் தூண்டும் உட்சுரப்பு நீர் (Harmone) எதுவெனக் கண்டறிந்து அவற்றைச் செயலிழக்கச் செய்வேன்.
(iii) ஏழை முதல் பணக்காரன் வரை இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் பணம் ஒன்றே முதன்மையானது என்ற எண்ணத்தில் உலா வருகிறார்கள். அவரவர் நிலைக்கேற்றபடி அவர்களின் தேவை வேறுபடுகிறது.
(iv) இவர்களின் தேவையை நிறைவேற்ற மனம் போன போக்கில் பல நேர்மையற்ற செயல்களைச் செய்கின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு என் ஆராய்ச்சி கட்டாயம் பயன்படும்.
(v) இக்கண்டுபிடிப்பால் இளைய தலைமுறையினர் தங்களின் இளம் பருவத்திலிருந்தே பெற்றோரை மதித்தல், ஒழுக்கச் சீலராய் வாழ்தல், தங்கள் மனதை அமைதியான நிலையில் வைத்தல், போட்டி, பொறாமை இன்றி வாழ்தல் ஆகிய நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வர். அவர்களால் ஒரு நல்ல சமுதாயமே உருவாகும் என நான் நம்புகிறேன்.
In simple words: If I were a scientist, I would do research that helps people in our country. My focus would be on animal science. I would try to find out what causes bad feelings like anger and jealousy in people and stop them. I would also work to stop people from doing wrong things for money, helping to build a better society.

🎯 Exam Tip: When answering "imagine if" questions, be creative but also link your ideas to real-world benefits and positive social change.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

அது 1921 ஆம் ஆண்டு. மத்திய தரைக்கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார். ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர் தான் சர்.சி.வி. இராமன்.

 

Question 1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
Answer: இராமன் விளைவைக் கண்டறிந்தவர் சர்.சி.வி. இராமன் ஆவார். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்.
In simple words: Sir C.V. Raman discovered the Raman Effect.

🎯 Exam Tip: For direct questions from a passage, always identify the key information (person, event, date) and state it clearly.

 

Question 2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
(அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
(ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை ?
(இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
(ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
Answer: (இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
In simple words: Sir C.V. Raman won the Nobel Prize for his research into why seawater looks blue.

🎯 Exam Tip: In MCQs from a passage, carefully read each option and compare it to the exact wording in the text to find the correct match.

 

Question 3. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது? ஏன்?
Answer: பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் அன்றுதான் “இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார் சர்.சி.வி. இராமன். இந்த கண்டுபிடிப்பு அறிவியலில் ஒரு மைல்கல்லாகும்.
In simple words: National Science Day is celebrated on February 28th. This is because Sir C.V. Raman announced his discovery, the "Raman Effect," on that date.

🎯 Exam Tip: When a question asks for both "when" and "why," ensure your answer clearly states both the date and the reason for the celebration.

 

Question 4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.
Answer: இப்பத்திக்கு நான் கொடுக்கும் தலைப்பு சர்.சி.வி. இராமன். அவரது வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய இந்த கட்டுரை ஒரு சிறந்த தலைப்பு.
In simple words: A good title for this passage is "Sir C.V. Raman."

🎯 Exam Tip: A good title for a passage should be short, summarize the main topic, and capture the reader's attention.

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக

1. ஈடுபாடு
2. நுண் பொருள்
3. உற்றவன்
4. பெருங்கடல்
5. துருவப் பகுதி
6. குறிக்கோள்
7. தொழில்நுட்பம்
8. நுண்ணுணர்வு
9. போலி
10. இலக்கணங்கள்

🎯 Exam Tip: Practice writing these words from dictation to improve your spelling and listening skills.

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

அறிவியல் ஆக்கங்கள்

முன்னுரை:

மக்களுக்குப் பயன்படும் பொருள்களுள் மிகவும் இன்றியமையாதவை அறிவியல் சாதனங்கள். அறிவியலின் துணைகொண்டு தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, தொழிலில் அறிவியல் என்று பல வளங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர். அறிவியலால் உலகம் மிகவும் முன்னேறி உள்ளது.

அன்றாட வாழ்வில் அறிவியல் :

அறிவியல் என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகமே அடங்கிவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நிறைந்துள்ளது. வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரங்கள், சமையல் செய்யப் பயன்படும் வாயு அடுப்பு, மின்சார அடுப்பு, பல வகையான மின் விளக்குகள், குளிரூட்டும் இயந்திரம், குளிர்காலத்தில் வெம்மையைக் கொடுக்கும் இயந்திரங்கள், தூசு நீக்கி, ஈரம் அகற்றி, ஒட்டடை போக்கி என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன.

பயன்பாடுகள் :

மாணவர்கள் கல்வி கற்கப் பயன்படுகின்ற நூல்கள் அனைத்தும் அறிவியல் சாதனமான அச்சுப் பொறிகளின் உதவியால் கிடைக்கின்றன. தகவல் தொடர்பு சாதனமாகப் பயன்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி ஆகியவை பல வகைகளில் மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. செல்பேசி, தொலைபேசி, கணினி, மடிக்கணினி, மின்னஞ்சல் போன்றவற்றின் பயன்கள் எண்ணிலடங்காதவை. புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.

மருத்துவத்துறை:

நோயறியும் கருவிகளும், வந்த நோயைப் போக்கவும் பல மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிய புதிய நோய்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அவற்றைப் போக்க பலவிதமான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானங்கள் பெருகியுள்ளன. உடல் உறுப்புகள் தேவையானவர்களுக்குச் சரியான நேரத்தில் பொருத்தி நோயாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். இது பல உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது.

தொழில்துறை :

தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் இயந்திரங்கள் உருவாக்குவதற்கும் அறிவியல் மிகவும் பயன்படுகிறது. உற்பத்திப் பொருள்களைப் பெருக்குவதற்கும், நேரத்திற்கு அவற்றை நுகர்வோர்க்கு அனுப்புவதற்கும் பயன்படுகிறது. வேளாண் துறைகளில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. இதனால் உற்பத்தி அதிகரித்து மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

போக்குவரத்து சாதனங்கள் :

மிதிவண்டி, இரு சக்கர வண்டி, மகிழுந்து, பேருந்து, சரக்குந்து என சாலை வழி வாகனங்களும் நீர் வழிப்பயணத்திற்குப் பயணம் செய்ய கப்பல்களும், வான்வழிப் பயணத்திற்குப் பயணம் செய்ய வானூர்திகளும் மிகுந்த அளவில் பயன் தருகின்றன. வானில் ஏவப்படுகின்ற ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் யாவுமே அறிவியலின் கண்டுபிடிப்புகளாகும். இவை பயணங்களை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

முடிவுரை:

இயற்கையின் செயல்பாடுகளை அறிந்து ஆராய்ந்து அதில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே அறிவியல். அறிவியலின் வியத்தகு சாதனைகளைப் போற்றுவோம். அவற்றை நன்மைக்காவே பயன்படுத்துவோம். அறிவியலின் வளர்ச்சி மனித குலத்திற்கு பெரும் பயன் தருகிறது.

🎯 Exam Tip: When writing an essay, use clear headings and paragraphs to organize your thoughts. Provide specific examples to support your points about the benefits of science.

மொழியோடு விளையாடு

சொல்வளம் பெருக்குக.

 

பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின்களைக் கண்டுபிடித்தனர்.
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Answer:
1. (விடை: கணினி)
2. (விடை: அழைப்பு மணி)
3. (விடை: எந்திரங்கள்)
4. (விடை: தானியங்கி)
In simple words: Replace the underlined English words with their correct Tamil equivalents. This helps to improve your Tamil vocabulary.

🎯 Exam Tip: Always practice finding accurate Tamil equivalents for commonly used English words to enrich your vocabulary.

பகிர்க

 

Question 1. தானியங்கியின் பயன்பாடுகள், ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க.
Answer:
பூங்குழலி : தேவி! தானியங்கி என்று அழைக்கப்படும் ரோபோவைப் பற்றித் தெரியுமா?
தேவி : எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். தானியங்கி என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் செக் எழுத்தாளரான காரல் கேபெக் என்பவர்தான். அவர் 1920 ஆம் ஆண்டு ஆர்.யு.ஆர். நாடகத்தில் தானியங்கிகளை அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் ரோபோக்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடனும் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் விரும்பி பணிபுரியும் எண்ணம் கொண்டவர்களாகவும் வடிவமைத்திருந்தார்.
பூங்குழலி : 1920-இல் தொடங்கிய ரோபோவின் பயணம் 2020-இல் உச்சக் கட்டத்தை எட்டிவிடும் என்றால் மிகையாகாது. நாளுக்கு நாள் இதன் வளர்ச்சி பெருகிக் கொண்டேதான் உள்ளது. மனிதர்கள் செய்ய இயலாத பணியைச் செய்கிறது. வீடு, அலுவலகம், மருத்துவமனை, தொழிற்சாலை என்று பல இடங்களிலும் தானியங்கிகள் பணியாற்றுகின்றன.
தேவி : ஆமாம். தொழிற்சாலையில் உதிரிப்பாகங்களை இணைக்கவும், பொருட்களைப் பொட்டலம் செய்வதற்கும், உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்வதற்கும் பயன்படுகிறது.
பூங்குழலி : இதையெல்லாம் விட மருத்துவத்துறையில் இதன் பங்கு அளப்பிடற் கரியது. நோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் பயன்படுகிறது.
தேவி : நான்கூட செய்தித்தாளில் படித்தேன். இது மனிதர்களைக் காட்டிலும் துல்லியமாகவும் நுட்பகமாகவும் வேலை செய்கிறது. பரவலாக பொருள் உற்பத்தி, ஒருங்கு திரட்டுதல், கட்டி வைத்தல், போக்குவரத்து, நிலம் அகழ்வது மற்றும் விண்வெளியை ஆய்ந்து அறிதல் அறுவை உபகரணங்கள், ஆயுதங்கள் செய்தல், ஆய்வுக்கூட ஆராய்ச்சி மற்றும் நுகர்வோர் தொழிற்சாலையின் பொருள்கள் செய்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பூங்குழலி : பிப்ரவரி 2018-ல் தென்னிந்தியாவில் மதுரையில் முதன்முறையாக முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
தேவி : இது மட்டுமா! நான் செய்தித்தாளில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஈரோட்டில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் நுகர்வோர்கள் பணமாகவோ, காசோலையாகவோ, வங்கி வரையோலையாகவோ செலுத்தலாம்.
பூங்குழலி : அப்பப்பா! இந்த தானியங்கியினால் தான் எவ்வளவு புதுமைகள் ஏற்பட்டுள்ளது? கூகுள் பல வருடங்களின் முயற்சியில் விளைந்தது தானியங்கி கார். இதற்கு முதலில் எக்ஸ்லேப் எனப் பெயரிட்டு தற்போது 'வேமோ' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. கண் தெரியாதவர்கள் கூட தனியாக இதில் எளிதாகப் பயணம் செய்ய முடியும். இத்தானியங்கி கார் மூலம் களைப்பு, கவனச்சிதறல்கள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
தேவி : இத்தானியங்கி கார் விபத்தில் சிக்கியதாக செய்தித்தாளில் பார்த்த நினைவிருக்கிறது.
பூங்குழலி : ஆமாம். நான்கூட படித்திருக்கிறேன். போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நேர்ந்ததால் அதை அப்படியே ஒதுக்க முடியுமா? வேறு வகையில் முயற்சி செய்ய வேண்டியது ஆராய்ச்சியாளர்களின் பொறுப்பாகும்.
விபத்தைத் தவிர்க்கும் வகையில் தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரைச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம். நான்கு சக்கரம் கொண்டதாக உள்ளது. பயணம் செய்யும்போது இடையூறுகள் ஏற்பட்டால் கண்டறிய இதில் நுண்ணுணர் (Sensors) பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவி : இதுமட்டுமல்ல. இரயில் பயணிகள் தங்களுடைய செல்லிடப் பேசியில் UTS என்னும் செயலியை நிறுவி தானியங்கி பயணச்சீட்டுகளைப் பெறலாம். மேலும் நிறுவப்பட்டுள்ள இரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவு அல்லாத பயணச்சீட்டுகளைத் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பூங்குழலி : தேவி தானியங்கியைப் பற்றி நாம் இவ்வளவு செய்திகளை அறிந்து வைத்துள்ளோம். மேலும் தானியங்கிகளின் செயல்பாடுகள் பற்றி நீ அறிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்.
In simple words: This is a discussion between Poonguzhali and Devi about robots (தானியங்கி). They talk about who first coined the term 'robot', how robots are used in homes, offices, factories, and even in medicine for surgeries. They also discuss smart libraries, automatic payment machines, self-driving cars, and how robots help in travel ticketing. They agree that robots are very useful and will continue to develop.

🎯 Exam Tip: For dialogue-based answers, make sure to capture the key points of each speaker and summarize the overall topic discussed clearly.

கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக

 

1. விகண்லம்
Answer: விண் க ல ம் (விண்கலம்)
In simple words: The scrambled letters form the word 'விண்கலம்' (spacecraft).

🎯 Exam Tip: Look for common letter combinations and try to form words you know. Thinking about related words can help too.

 

2. மத்ருதும்வ
Answer: ம ரு த து வ ம் (மருத்துவம்)
In simple words: The scrambled letters form the word 'மருத்துவம்' (medicine).

🎯 Exam Tip: Practice unscrambling words to improve your vocabulary and spelling skills in Tamil.

 

3. அவிறில்ய
Answer: அ றி வி ய ல் (அறிவியல்)
In simple words: The scrambled letters form the word 'அறிவியல்' (science).

🎯 Exam Tip: Pay attention to the number of letters in the scrambled word to help you guess the correct one.

 

4. ணினி க
Answer: க ணி னி (கணினி)
In simple words: The scrambled letters form the word 'கணினி' (computer).

🎯 Exam Tip: Start by identifying the first and last letters if they seem obvious, then fill in the middle.

 

5. எ லா ல் ம்
Answer: எ ல் லா ம் (எல்லாம்)
In simple words: The scrambled letters form the word 'எல்லாம்' (all).

🎯 Exam Tip: Simple, frequently used words are often part of unscrambling puzzles; think of them first.

 

6. அப்ழை பு
Answer: அ ழை ப் பு (அழைப்பு)
In simple words: The scrambled letters form the word 'அழைப்பு' (call/invitation).

🎯 Exam Tip: If stuck, try writing the letters out and rearranging them in different orders until a meaningful word appears.

வட்டத்தில் சிக்கிய எழுத்துக்களை எடுத்து எழுதுக

 

எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டறியவும்.
Answer: விடை : அப்துல்கலாம்.
In simple words: By arranging the letters from the circle, you can find the name of the Tamil scientist, A.P.J. Abdul Kalam.

🎯 Exam Tip: When given a letter puzzle to identify a famous person, think of prominent figures who fit the context of the lesson (e.g., science, Tamil Nadu).

வாக்கியத்தை நீட்டி எழுதுக

 

(எ.கா) நான் படிப்பேன். (அறிவியல், பாடம், நன்றாக)
Answer:
நான் பாடம் படிப்பேன்.
நான் அறிவியல் பாடம் படிப்பேன்.
நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.
In simple words: Start with a simple sentence and add more details (like 'science,' 'lesson,' and 'well') to make it longer and more descriptive.

🎯 Exam Tip: To expand a sentence, add details about 'what,' 'how,' 'where,' or 'when,' ensuring the new words logically fit the original sentence.

 

Question 1. அறிந்து கொள்ள விரும்பு. (எதையும், காரணத்துடன், தெளிவாக)
Answer:
எதையும் அறிந்து கொள்ள விரும்பு.
எதையும் காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு.
எதையும் காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு.
In simple words: Expand the base sentence by adding words like 'everything', 'with reason', and 'clearly' to make it more complete.

🎯 Exam Tip: When expanding sentences, add one detail at a time to ensure the sentence remains grammatically correct and meaningful.

 

Question 2. நான் சென்றேன். (ஊருக்கு, நேற்று, பேருந்தில்)
Answer:
நான் ஊருக்குச் சென்றேன்.
நான் நேற்று ஊருக்குச் சென்றேன்.
நான் பேருந்தில் நேற்று ஊருக்குச் சென்றேன்.
In simple words: Add details like 'to the village', 'yesterday', and 'by bus' to the simple sentence "I went" to make it more detailed.

🎯 Exam Tip: Think about the different aspects of the action (who, what, where, when, how) to add descriptive phrases to your sentence.

அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக

 

(எ.கா) அறி - அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு
Answer:

எண்கேள்விவிடைகள்
1பார்பார்வை, பார்க்கின்ற, பார்க்க, பார்ப்போம், பார்த்தோம்.
2செய்செய்தி, செய்வினை, செய்தித்தாள், செய்தான், செய்வான், செய்யப்போகிறான்.
3தெளிதெளிவு, தெளிவான, தெளிவுரை, தெளிந்த
4படிபடிக்க, படிக்கட்டு, படிப்பினை, படிப்பு
In simple words: From a root word, like 'பார்' (see) or 'செய்' (do), you can create many new words by adding different letters or endings. This shows how flexible Tamil words are.

🎯 Exam Tip: Understanding root words and common suffixes helps in generating new words and expanding your vocabulary efficiently.

மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்கு

 

(எ.கா) கம்பு
Answer:
கம்பு, வம்பு, நம்பு, நம்பி, கம்பி, தம்பி
In simple words: Create words where the letter 'ம்' (m) is in the middle. The example shows words like 'கம்பு' (comb), 'வம்பு' (quarrel), etc.

🎯 Exam Tip: Focus on words where a specific letter appears in the middle. This helps in understanding letter positions in Tamil words.

குறுக்கெழுத்துப்புதிர்

 

இடமிருந்து வலம்:
1. அப்துல்கலாமின் சுயசரிதை
3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி
10. எந்திர மனிதனுக்குக் குடியுரிமை
மேலிருந்து கீழ்:
1. 'ரோபோ' என்னும் சொல்லின் பொருள்
2. அகர வரிசையில் அமையும் இலக்கியம்
7. 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் வழங்கிய முதல் நாடு பட்டம் பெற்ற ரோபோ.
வலமிருந்து இடம்:
2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல்
6. சதுரங்கப் ____யில் டீப்புளூ
8. மருந்து என்னும் பொருள் தரும் சொல்.
கீழிருந்து மேல்:
4. இந்தியா செலுத்திய ஏவுகணை.
5. தானாகச் செயல்படும் எந்திரம். வெற்றி பெற்றது
9. அப்துல்கலாம் வகித்த .... குடியரசுத் தலைவர்.
Answer:
இடமிருந்து வலம்:
1. அக்னிச் சிறகுகள்
3. எந்திர மனிதன்
10. சவுதி அரேபியா
மேலிருந்து கீழ்:
1. அடிமை
2. ஆத்திசூடி
7. சோபியா
வலமிருந்து இடம்:
2. ஆய்வு
6. போட்டி
8. ஔடதம்
கீழிருந்து மேல்:
4. அக்னி
5. தானியங்கி
9. பதவி
In simple words: This is a crossword puzzle. The clues are given for words that go left-to-right, top-to-bottom, right-to-left, and bottom-to-top. The answers complete the puzzle.

🎯 Exam Tip: For crosswords, read all clues first. Start with the easiest ones, then use the filled-in letters to solve the more difficult ones.

 

கீழ்க்காணும் குறுக்கெழுத்துக்கான குறிப்புகள்:

மேலிருந்து கீழ்:

  • 1. 'ரோபோ' என்னும் சொல்லின் பொருள்
  • 2. அகர வரிசையில் அமையும் இலக்கியம்
  • 7. 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் வழங்கிய முதல் நாடு பட்டம் பெற்ற ரோபோ.

வலமிருந்து இடம்:

  • 2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல்
  • 6. சதுரங்கப் _______ யில் டீப்புளூ
  • 8. மருந்து என்னும் பொருள் தரும் சொல்.

கீழிருந்து மேல்:

  • 4. இந்தியா செலுத்திய ஏவுகணை.
  • 5. தானாகச் செயல்படும் எந்திரம். வெற்றி பெற்றது
  • 9. அப்துல்கலாம் வகித்த .... குடியரசுத் தலைவர்.

குறுக்கெழுத்துக்கான விடைகள்:

இடமிருந்து வலம்:

  • 1. அக்னிச் சிறகுகள்
  • 3. எந்திர மனிதன்
  • 10. சவுதி அரேவியா

மேலிருந்து கீழ்:

  • 1. அடிமை
  • 2. ஆத்திசூடி
  • 7. சோபியா

வலமிருந்து இடம்:

  • 2. ஆய்வு
  • 6. போட்டி
  • 8. ஔடதம்

கீழிருந்து மேல்:

  • 4. அக்னி
  • 5. தானியங்கி
  • 9. பதவி

 

சூழலைக் கையாள்க
மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றுவிடுகிறது. இந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு வேறு பேருந்து இல்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
(i) அழ ஆரம்பித்துவிடுவேன்.
(ii) யாரிடமாவது உதவி கேட்பேன்.
(iii) அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.
(iv) ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன்.
Answer: அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன். பேருந்து பழுதடைந்தால், பாதுகாப்பான முறையில் வீட்டிற்குத் தகவல் தெரிவிப்பது மிக முக்கியம். இதன் மூலம் உங்கள் குடும்பத்தினர் உங்களின் இருப்பிடத்தை அறிந்து உங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யலாம்.
In simple words: பேருந்து பழுதாகி வேறு பேருந்து இல்லாதபோது, அருகில் இருப்பவரிடம் தொலைபேசி வாங்கி வீட்டிற்குத் தகவல் கொடுப்பது பாதுகாப்பானது.

🎯 Exam Tip: எதிர்பாராத சூழ்நிலைகளில் பாதுகாப்பிற்கும், பொறுப்பான தகவல்தொடர்பிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

கலைச்சொல் அறிவோம்

  • 1. செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence
  • 2. மீத்திறன் கணினி - Super Computer
  • 3. செயற்கைக் கோள் - Satellite
  • 4. நுண்ணறிவு - Intelligence

TN Board Solutions Class 6 Tamil Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள்

Students can now access the TN Board Solutions for Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள் prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 6 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.

Detailed Explanations for Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள்

Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 6 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 6 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.

Benefits of using Tamil Class 6 Solved Papers

Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 6 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 03.5 மொழிமுதல் இறுதி எழுத்துகள் to get a complete preparation experience.

FAQs

Where can I find the latest Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் for the 2026-27 session?

The complete and updated Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் is available for free on StudiesToday.com. These solutions for Class 6 Tamil are as per latest TN Board curriculum.

Are the Tamil TN Board solutions for Class 6 updated for the new 50% competency-based exam pattern?

Yes, our experts have revised the Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.

How do these Class 6 TN Board solutions help in scoring 90% plus marks?

Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் will help students to get full marks in the theory paper.

Do you offer Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் in multiple languages like Hindi and English?

Yes, we provide bilingual support for Class 6 Tamil. You can access Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் in both English and Hindi medium.

Is it possible to download the Tamil TN Board solutions for Class 6 as a PDF?

Yes, you can download the entire Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் in printable PDF format for offline study on any device.