Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்

NCERT Solutions for Class 9 Tamil: Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம்

Access comprehensive textbook solutions for Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம் using the official curriculum guides for Class 9 Tamil. Designed to align with the 2026-27 TN Board standards, these detailed answers help students reinforce core academic concepts.

Practice Class 9 Tamil Solutions: Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம்

View or download the dedicated Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம் solution resource below. Engaging with these textbook answers under focused study conditions ensures continuous academic progress and mastery of the 2026-27 curriculum for Tamil.

கற்பவை கற்றபின்

 

Question 1. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தைப் போல நீங்கள் யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்களோ அப்படியொரு ஒரு கடிதம் எழுது.
Answer:
தங்கைக்கு,
அன்புள்ள தங்கைக்கு அண்ணா எழுதுவது,

நலம். நீ பதின்பருவத்தில் இருப்பதால், இந்தப் கடிதத்தின் மூலம் உனக்கு சில கருத்துகளைச் சொல்லவும், சிலவற்றை உன்னுடன் பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

நாம் சிறு வயதில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம். துன்பத்திலும், வறுமையிலும், மனம் தளராமல் நம் தந்தை நல்ல கல்வியை எனக்குத் தடையின்றி கொடுத்தார். நீயும் இப்போது படித்துக்கொண்டிருக்கிறாய். நானும் வேலையில் சேர்ந்துவிட்டேன். நான் ஓய்வெடுக்கச் சொன்னால் கூட நம் தந்தை கேட்பதில்லை.

நம் பெற்றோரின் உழைப்பால் கிடைத்த நல்ல வாழ்க்கையை நாம் இப்போது அனுபவிக்கிறோம். அன்புத் தங்கையே, நீ பத்திரமாகவும், பக்குவமாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. கல்வியிலும் நம் குடும்ப நிலையிலும் மட்டுமே உன் கவனம் இருக்க வேண்டும்.

கவனம் சிதறாமல் இருக்க நல்ல புத்தகங்களைப் படி, பெற்றோரை நேசி, இறைவனை மறக்காமல் வழிபடு. நல்ல குணங்களை வளர்த்துக்கொள். 'பெண்ணிற்கு எதற்குப் பணி?' என்று வீட்டிலேயே இருந்துவிடாதே. அடுத்த ஆண்டு உன் பட்டப்படிப்பு முடிந்துவிடும் அல்லவா! உனக்குப் பிடித்தமான வேலையைச் செய்ய இப்போதே தயாராகு. பொருளாதார சுதந்திரமும், சமூக பாதுகாப்பும் கல்வி மற்றும் வேலை மூலமாகத்தான் கிடைக்கும். உன்னுடைய பிறந்தநாள் வரப்போகிறது அல்லவா? அன்புத் தங்கையே, வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
அண்ணன்
இரகு. இரா
In simple words: என் அன்பான தங்கைக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீ பதின்பருவத்தில் இருப்பதால், நன்றாகப் படித்து, நல்ல குணங்களை வளர்த்து, பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்று அண்ணனாக நான் அறிவுரை கூறுகிறேன்.

🎯 Exam Tip: When writing a letter, always use clear, simple language and structure it with a greeting, main body, and a closing, addressing the specific points requested in the question.

 

Question 2. வகுப்பில் நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பனின் சிறந்த பண்பைப் பாராட்டியும், அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பையும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக.
Answer:
அன்புள்ள நண்பா,

உன் நல்ல குணங்களைப் பாராட்டவும், நீ மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு பண்பைப் பற்றியும் நீயே புரிந்துகொள்ளும் வகையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நண்பா, உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கும். ஆம், நீ எல்லோருக்கும் உதவி செய்யும் நல்ல குணம் கொண்டவன் அல்லவா! அதை நினைத்துத்தான் நான் பெருமைப்படுகிறேன்.

பிறருக்குத் தானாகவே ஓடிச் சென்று உதவும் குணம் எல்லோரிடமும் இருப்பதில்லை. ஆனால் நீ இந்தக் குணத்தை இயல்பாகவே பெற்றிருப்பதால், நல்ல நண்பர்கள் உனக்குக் கிடைப்பதோடு, பலருடைய பாராட்டையும் நல்ல மதிப்பையும் பெற்றிருக்கிறாய், பாராட்டுகள்.

அதே நேரத்தில், நீ திருத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக உன்னிடம் உள்ள ஒரு சிறு குறையைச் சுட்டிக்காட்டுவது ஒரு நல்ல நண்பனாகிய என் கடமை என்று நினைக்கிறேன்.

சந்தோஷமாக உணவருந்திக் கொண்டிருக்கும்போது மாட்டிக்கொண்டு எரிச்சல் தரும் மிளகாயைப் போல, உன்னிடம் முன்கோபமான குணம் உள்ளது. நாம் எத்தனை நல்ல விஷயங்களைச் செய்தாலும், நம்மிடம் உள்ள சினம் (கோபம்) என்ற குணம் எல்லா நல்ல பண்புகளையும் அழித்துவிடும்.

உலகத்தாருக்கு நாம் செய்த நல்ல விஷயங்களைக்கூட, நம் கோபம் மறைத்துவிடும். நல்ல பண்புகள் வெளியே தெரியாமல் நம் எதிர்மறையான குணம் மட்டுமே பேசப்படும். எனவே, அன்பு நண்பா, "சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி" என்ற பழமொழி சொல்வது போல், இந்த கோபக் குணத்தை நீ மாற்றிக்கொண்டால், நீ ஒரு சிறந்த மனிதனாகப் பெயரும் புகழும் பெறுவாய்.
வாழ்த்துகள்.
அன்புடன்,
ஆருயிர் நண்பன்.
In simple words: என் அன்பு நண்பனுக்கு, நீ எல்லோருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவன் என்று பாராட்டுகிறேன். அதேசமயம், உனக்கு இருக்கும் கோபமான குணத்தை மாற்றிக்கொண்டால், வாழ்வில் இன்னும் சிறப்பாக இருப்பாய் என்று அறிவுரை கூறுகிறேன்.

🎯 Exam Tip: When describing qualities, provide examples or explain the impact of those qualities. For constructive criticism, offer it gently and explain the benefits of change, framing it as a well-wisher's advice.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

 

Question 1. மொழியின் விரல் பிடித்து நடக்க பழகிக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
கடிதம் என்பது ஒரு உயிருள்ள மொழி. செய்தி அனுப்புபவருக்கும், பெறுபவருக்கும் இடையில் ஒரு உறவுப் பாலத்தை இது ஏற்படுத்துகிறது. மகனுக்குக் கடிதம் எழுதிய தாயுமானவர் போன்ற நா. முத்துக்குமார், தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் உள்ள செய்திகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

குழந்தைப் பருவமும் - உலக வாழ்வும்:
என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாக இருந்தபோது அழுதாய், சிரித்தாய், குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்தாய், சாகசங்கள் செய்தாய். தரையெல்லாம் உன்னுடையது போல தவழ்ந்தாய், விழுந்தாய், நடந்தாய், ஓடினாய்.
இந்த உலக வாழ்வும் அப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்து, தலைநிமிர்ந்து சாகசங்கள் செய்ய வேண்டும். தவழ வேண்டும், எழ வேண்டும், விழ வேண்டும், மீண்டும் எழ வேண்டும். இந்த நாடகத்தை நீ பல வழிகளில் உலக வாழ்வில் நடிக்க வேண்டும்.

அனுபவமே கல்வி:
கல்வியில் நன்றாகத் தேற வேண்டும், அதே நேரத்தில் அனுபவங்களிலிருந்து அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். நெருப்பைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வதை விட, அதனைத் தொட்டு காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இந்த உலகில் வெற்றி பெறப் பயன்படும் சூத்திரம் ஆகும்.

அன்பாக இரு:
எங்கும், எதிலும் எப்போதும் அன்பாக இரு. அன்பை விட உயர்ந்தது இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்த உலகத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட உயர்ந்தது நட்பு மட்டுமே. உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை அன்பாலும், நட்பாலும் சீராகும்.

உனக்கான காற்றை நீயே உருவாக்கு:
என் மகனே, நகரத்தில் நீ வாழ்க்கை முழுவதும் கோடைகாலங்களையும், பல வழிகளில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் உன் தந்தை உன் அருகில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க முடியாது. எனவே, உனக்கான காற்றை நீயே உருவாக்க வேண்டும்.

புத்தகங்களை நேசி:
புத்தகங்களை வெறுக்காதே. ஒரு புத்தகத்தைத் தொடும்போது, நீ ஒரு அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள்; உன் ரத்தத்தில் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

முடிவுரை:
இந்தக் கருத்துகள் அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல. இதனைப் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும், உயர்வதற்கும் ஏற்ற கருத்துகள் ஆகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
In simple words: நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கை ஒரு நாடகம் போல என்றும், அனுபவமே சிறந்த கல்வி என்றும், எப்போதும் அன்பாக இருக்க வேண்டும் என்றும், சுயசார்புடன் செயல்பட வேண்டும் என்றும், புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்றும் முக்கியமான வாழ்க்கை போதனைகளைச் சொல்கிறார்.

🎯 Exam Tip: When summarizing a letter or message, break down the content into logical sub-sections and use clear headings. Ensure you cover all the main points and themes presented in the original message.

Free TN Board Textbook Explanations: Class 9 Tamil Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம்

Chapter Exercise Answers for Class 9 Tamil

Access structured TN Board textbook solutions for Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம். Designed in alignment with the latest academic curriculum for Class 9 Tamil, these answers cover all end-of-chapter exercises to support daily learning and homework completion.

Detailed Answer Guides for Chapter 08.5 மகனுக்கு எழுதிய கடிதம்

Clear, methodical explanations accompany every challenging problem within the Class 9 Tamil text. Engaging with these detailed answers lays a solid foundation for advanced learning and improves foundational clarity for upcoming assessments.

Complete Preparation Kit for Class 9 Exams

Frequent review of these structured answers builds strong analytical capabilities and response efficiency. Maximize your academic readiness by combining these textbook solutions with our curated study materials and mock evaluations for Class 9 Tamil.

FAQs

Where can I find the latest Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் for the 2026-27 session?

The complete and updated Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் is available for free on StudiesToday.com. These solutions for Class 9 Tamil are as per latest TN Board curriculum.

Are the Tamil TN Board solutions for Class 9 updated for the new 50% competency-based exam pattern?

Yes, our experts have revised the Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.

How do these Class 9 TN Board solutions help in scoring 90% plus marks?

Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் will help students to get full marks in the theory paper.

Do you offer Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் in multiple languages like Hindi and English?

Yes, we provide bilingual support for Class 9 Tamil. You can access Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் in both English and Hindi medium.

Is it possible to download the Tamil TN Board solutions for Class 9 as a PDF?

Yes, you can download the entire Samacheer Kalvi Class 9 Tamil Solutions Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் in printable PDF format for offline study on any device.