Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம்

Official TN Board Solutions for Class 8 Tamil: Chapter 09.5 அணி இலக்கணம்

Review structured textbook solutions for Class 8 Tamil Chapter 09.5 அணி இலக்கணம். Built according to TN Board guidelines for the 2026-27 academic year, these downloadable answers support daily revision and problem-solving accuracy.

Chapter-wise Solutions for Tamil: Chapter 09.5 அணி இலக்கணம்

Access the complete solution PDF for Class 8 Tamil below. Regular practice with these targeted textbook answers builds familiarity with standard question patterns and helps secure higher marks in final school evaluations.

கற்பவை கற்றபின்

 

Question 1. திருக்குறளில் அணிகள் இடம்பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்து அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக.
Answer:
(i) பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.
அணி : எடுத்துக்காட்டு உவமையணி
(ii) தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்
அணி : வஞ்சப்புகழ்ச்சி அணி
(iii) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
அணி : சொற்பொருள் பின்வருநிலை அணி
(iv) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந்து அற்று.
அணி : உவமையணி.
(v) கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
அணி : பிறிதுமொழிதல் அணி
In simple words: திருக்குறளில் உள்ள பல்வேறு அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை எழுதுவதன் மூலம் அணியிலக்கணத்தைப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு குறளும் ஒரு குறிப்பிட்ட அணியின் சிறப்பைக் கொண்டுள்ளது.

🎯 Exam Tip: திருக்குறளில் உள்ள அணிகளை அடையாளம் காண, முதலில் குறளின் நேரடிப் பொருளையும், அதிலிருந்து பெறப்படும் மறைமுகப் பொருளையும் புரிந்துகொள்ள வேண்டும். இது அணி வகையை எளிதாகக் கண்டறிய உதவும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

Question 1. பிறிதுமொழிதல் அணியில் ............ மட்டும் இடம்பெறும்.
(அ) உவமை
(ஆ) உவமேயம்
(இ) தொடை
(ஈ) சந்தம்
Answer: (அ) உவமை
In simple words: பிறிதுமொழிதல் அணியில் உவமையை மட்டும் கூறி, உவமேயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மறைமுகமான ஒப்பீட்டு முறையாகும்.

🎯 Exam Tip: பிறிதுமொழிதல் அணியில் உவமை மட்டுமே வெளிப்படையாகக் கூறப்படும்; உவமேயம் மறைந்திருக்கும். இதை நினைவில் கொள்வது சரியான விடையைத் தேர்ந்தெடுக்க உதவும்.

 

Question 2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ............ அணி.
(அ) ஒற்றுமை
(ஆ) வேற்றுமை
(இ) சிலேடை
(ஈ) இரட்டுற மொழிதல்
Answer: (ஆ) வேற்றுமை
In simple words: வேற்றுமை அணி என்பது, இரண்டு பொருட்களுக்குள் இருக்கும் ஒரே மாதிரியான அம்சங்களையும், பிறகு அவற்றின் வேறுபாடுகளையும் எடுத்துக் காட்டுவதாகும். இது பொருட்களை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

🎯 Exam Tip: வேற்றுமை அணியில், முதலில் ஒப்புமை கூறி, பின்னர் வேற்றுமையைப் பேசுவது அடிப்படை. இது இரண்டு கருத்துக்களின் தனித்துவத்தை வலியுறுத்துகிறது.

 

Question 3. ஒரே செய்யுளை இருபொருள் படும்படி ............ அணி.
(அ) பிறிதுமொழிதல்
(ஆ) இரட்டுறமொழிதல்
(இ) இயல்பு
(ஈ) உயர்வுநவிற்சி
Answer: (ஆ) இரட்டுறமொழிதல்
In simple words: இரட்டுறமொழிதல் அணி என்பது, ஒரு பாடலை ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட அர்த்தங்களில் புரிந்துகொள்ளும்படி எழுதுவதாகும். இது கவிதைக்கு சுவாரஸ்யத்தைச் சேர்க்கும்.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் அணியில் ஒரு பாடலின் சொற்கள் இரண்டு வெவ்வேறு பொருட்களைத் தருமாறு பயன்படுத்தப்படும். இது சிலேடை அணி என்றும் அழைக்கப்படுகிறது.

 

Question 4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ............ அணி.
(அ) பிறிதுமொழிதல்
(ஆ) வேற்றுமை
(இ) உவமை
(ஈ) சிலேடை
Answer: (ஈ) சிலேடை
In simple words: இரட்டுறமொழிதல் அணிக்கு இன்னொரு பெயர் சிலேடை அணி ஆகும். இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும்.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் மற்றும் சிலேடை ஆகிய இரண்டும் ஒரே அணியைக் குறிக்கும் இரண்டு பெயர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள்கள் இருக்கும் கலை.

சிறுவினா

 

Question 1. பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
அணி விளக்கம் : உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும். அதாவது, ஒன்றைச் சொல்லி மற்றொன்றை உவமை மூலம் உணர வைப்பதாகும்.
எ.கா. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.
இந்தக் குறள், நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது; கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது. இதன் மறைமுகமான கருத்து என்னவென்றால், ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும். பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்பதை இது விளக்குகிறது. எனவே, இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி உள்ளது.
In simple words: பிறிதுமொழிதல் அணி என்பது ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், அதை ஒப்பிட்டுச் சொல்லும். ஒரு குதிரை வண்டி கடலில் ஓட முடியாது, ஒரு கப்பல் தரையில் ஓட முடியாது என்பது போல. அதாவது, ஒவ்வொருவரும் சரியான இடத்தில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே இதன் பொருள்.

🎯 Exam Tip: பிறிதுமொழிதல் அணியில், உவமை தெளிவாகக் கூறப்பட்டு, அதன் மூலம் நாம் உணர வேண்டிய உண்மை அல்லது நீதி மறைமுகமாக உணர்த்தப்படும். நேரடிப் பொருளையும், மறைமுகப் பொருளையும் தெளிவாக விளக்க வேண்டும்.

 

Question 2. வேற்றுமை அணி என்றால் என்ன?
Answer: வேற்றுமை அணி என்பது இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி, பின்னர் அந்த இரண்டு பொருள்களுக்குள் இருக்கும் ஒரு வேறுபாட்டையும் எடுத்துக் காட்டுவதாகும். இந்த வேறுபாடு அந்தப் பொருளின் தனித்தன்மையைக் காட்டும்.
In simple words: இரண்டு பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றுக்கு இடையே உள்ள ஒரு முக்கிய வித்தியாசத்தைச் சொல்லும் அணிதான் வேற்றுமை அணி.

🎯 Exam Tip: வேற்றுமை அணியில், ஒற்றுமையையும் வேற்றுமையையும் ஒரே நேரத்தில் எடுத்துரைப்பது முக்கியம். இது இரண்டு அம்சங்களையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, ஒரு கருத்தை ஆழமாகப் பதிய வைக்கும்.

 

Question 3. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?
Answer: இரட்டுறமொழிதல் அணியில், ஒரு சொல் அல்லது ஒரு தொடர் இரண்டு வெவ்வேறு பொருள்களைத் தருமாறு அமையும். ஒரே பாடலை இரண்டு விதமான அர்த்தங்களில் புரிந்துகொள்ள முடியும். இது கவிதையில் சுவாரஸ்யத்தையும் ஆழத்தையும் சேர்க்கிறது.
In simple words: இரட்டுறமொழிதல் அணி என்றால், ஒரு சொல் அல்லது வாக்கியம் ஒரே நேரத்தில் இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கும்.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் அணியில், ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருப்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு விளக்க வேண்டும். இந்த இரட்டை அர்த்தம் சூழலுக்கு ஏற்ப மாறும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

 

Question 1. தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியவர்களிடம் கேட்டு மகிழ்க.
Answer: மாணவர்கள் தாங்களாகவே தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ வேண்டும். பெரியவர்களின் அனுபவங்கள் இளம் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும் சிறந்த வழியாகும்.
In simple words: பெரியவர்களிடம் தன்னம்பிக்கை கதைகளைக் கேட்டு சந்தோஷப்பட வேண்டும்.

🎯 Exam Tip: தன்னம்பிக்கை வளர்க்கும் கதைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது, அதன் மையக்கருத்து மறக்காமல் புரியும்படி விளக்க வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

 

Question 1. நம்பிக்கையே உயர்வு
Answer: அவையோர்க்கு வணக்கம்! இன்று நான் 'நம்பிக்கையே உயர்வு' என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.
நம்மைப் பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. ஆனால், நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் மிகவும் அவசியம். நாம் எந்த ஒரு செயலையும் அச்சமின்றி நம்பிக்கையுடன் செய்யும்போது மட்டுமே வெற்றி கிடைக்கும். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்ற இப்பாடல் வரிகள் ஒவ்வொருவர் காதிலும் ஒலிக்க வேண்டும். அது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டும்.
மண்ணில் ஒரு விதையை விதைத்தால், அது கட்டாயமாகப் பூமியைப் பிளந்து கொண்டு வானத்தைப் பார்த்து "நான் இருக்கிறேன்" என்று காட்டுகிறது. அதேபோல்தான் நாமும் இவ்வுலகில் பிறந்து விட்டோம். நம்மால் எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரையும் ஒரு லட்சிய மனிதனாகவும் சாதனை மனிதனாகவும் காட்டும்.
நம் வெற்றிக்கு முதலில் நம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் முன் வைக்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். 'நம்மால் முடியும்' என்று தினசரி மனதிற்குச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
நான் எண்ணிய காரியம் எளிதில் முடியும் என்றும், என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைப் பாராட்டுவார்கள் என்றும் நம் கண்முன் இவை நடப்பது போன்ற ஒரு காட்சியை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை நம்மை வெற்றியடையச் செய்யும்.
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் நம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் நமக்கு பக்கபலமாய் இருக்கும். சிலந்தி வலை பின்னும் நிகழ்வையும், ராபர்ட் புரூஸ் மீண்டும் போர் செய்து வெற்றியாளனாகிய கதையையும் நாம் யாரும் மறந்து விடக்கூடாது.
மனிதன் தன்மீதும் தன்னுடைய செயல்மீதும் நம்பிக்கை வைக்காதிருந்தால் அவனால் எதுவும் செய்து முடிக்க முடியாது. 'முயற்சி திருவினை ஆக்கும்', 'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்' என்னும் தொடர்கள் எல்லாம் நம்பிக்கையின் அடித்தளமாகும். முயன்றால் முடியும் என்ற நம்பிக்கையே ஒருவனை வெற்றியாளனாக்குகிறது.
நாம் எதைப் பற்றி எந்த வகையில் சிந்திக்கிறோமோ, அதை அதே வகையில் அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம். 'நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்', 'நம்பிக்கையே இனிமையான எதிர்காலங்களை அமைக்கும்' இவற்றை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
முடிவுரை : 'கையும் காலும் தான் உதவி - கொண்ட கடமைதான் நமக்குப் பதவி' என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல் வரிகளை நினைவில் வைத்து உழைப்போம்; உயர்வோம்.
In simple words: நம்பிக்கைதான் வெற்றிக்கு வழி. நம்மை நாமே நம்பினால் எதையும் சாதிக்கலாம். பெரியவர்கள் போல முயற்சி செய்து, நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.

🎯 Exam Tip: தன்னம்பிக்கை பற்றி எழுதும்போது, முக்கியமாக ஒரு தொடக்கத்தையும், ராபர்ட் புரூஸ் போன்ற ஒரு உவமையையும், ஒரு நிறைவையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவது சிறந்தது.

 

Question 2. நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள்
Answer: அவையோர்க்கு வணக்கம்! நான் இப்போது நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள் பற்றிப் பேச வந்துள்ளேன்.
நற்பண்புகளுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம். ஒழுக்கப் பண்புகளால் தொகுக்கப்பட்ட நூலான ஆசாரக்கோவை, நல்லொழுக்கங்கட்கு விதையாக, காரணமாக விளங்குவன எவை என்று வரையறை செய்து எட்டு நற்குணங்களைக் கூறுகிறது. அவை நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும் இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களுக்குக் காரணம் ஆகும் என்கிறது ஆசாரக்கோவை.
நம்மை விடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறுவயதிலிருந்தே அதைப் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்தல், நேர்மையாக நடந்து கொள்ளுதல், ஐம்புலன்களை அடக்குதல், நம்மைவிடச் சிறியவர் என்றாலும் அவர்களுடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளுதல். வறுமை நம்மைச் சூழ்ந்தாலும் தீய செயல்களைச் செய்யாதிருத்தல் இவற்றை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தல் வேண்டும்.
நற்பண்புகளின் ஒட்டுமொத்த சாராம்சமே ஒழுக்கம்தான். முதலிடம் பெறுவது வாய்மை. நாம் பொய் பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு பொய் பேசினால் அதனை மறைக்க மீண்டும் மீண்டும் பல பொய்களைப் பேச வேண்டியிருக்கும். அவ்வாறு பொய் பேசும்போது பல அவமானங்களைச் சந்திக்க நேரும். பொய் பேசி வெல்வதைவிட மெய் பேசி தோற்பது சிறந்தது. உண்மை எப்போதும் நிலைத்து நிற்கும்.
அடுத்தது, 'காலமறிதல்'. காலத்தை அறிந்து செயல்பட வேண்டும். காலந்தவறாமல் நேரத்திற்குச் செயல்களைச் செய்ய வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. காலம் நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் காலத்திற்காகக் காத்திருந்து செயல்பட வேண்டும். மழையில் உப்பு விற்பதும், காற்றில் மாவு விற்பதும் முட்டாள்தனம். அதனால், வள்ளுவர், காலமறிதல் பற்றிக் கூறியதை நாம் பின்பற்ற வேண்டும்.
அடுத்தது சேவை மனப்பான்மை. நாம் இருக்கும் இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், நம் வீடு, நம் வீட்டு வாசல், நம் தெரு இவற்றை சுத்தம் செய்தல். இதனை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் வீடும் நாடும் சுத்தமாகும்.
மருத்துவ உதவி பெறுவதற்கு வழிகாட்டுதல், விழாக்காலங்களில் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அங்குள்ள கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவைக் கற்றுக் கொடுத்தல், செய்தித்தாள்களை வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் இவற்றையெல்லாம் நாம் நம் வாழ்வில் செயல்படுத்தினால் நாமே நற்பண்புகளில் சிறந்தவர் என்ற பெயர் பெற்று அனைவராலும் பாராட்டப்படுவோம்.
In simple words: ஒரு நல்ல வாழ்க்கைக்கு ஒழுக்கம், பெரியோரை மதித்தல், உண்மை பேசுதல், காலம் அறிந்து செயல்படுதல், சேவை செய்தல் போன்ற நல்ல குணங்கள் தேவை. இவை ஒருவரை சிறந்த மனிதனாக்கும்.

🎯 Exam Tip: நற்பண்புகள் பற்றி எழுதும்போது, முக்கியப் பண்புகளைத் தெளிவாகப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றையும் உதாரணங்களுடன் விளக்குவது அவசியம். ஆசாரக்கோவை போன்ற இலக்கிய மேற்கோள்களைப் பயன்படுத்துவது கூடுதல் மதிப்பெண் பெறும்.

சொல்லக் கேட்டு எழுதுக

அம்பேத்கர் தமது வாழ்க்கையில் புதிய திருப்பம் ஒன்றைக் கண்டறிந்தார். அது 'படிப்பு, படிப்பு, படிப்பே' ஆகும். அதை அடையும் முயற்சியில் அயராது உழைக்கத் தொடங்கினார். எப்போதும் புத்தகமும் கையுமாகவே திகழ்ந்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டும் கடன்பட்டும்கூட புத்தகங்களை வாங்கித் தந்தார்.
புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அம்பேத்கர் கடைசிவரை கடைப்பிடித்தார். வட்டமேசை மாநாட்டிற்காக அம்பேத்கர் இங்கிலாந்து சென்றார். மாநாடு முடிந்த பிறகு அமெரிக்கா சென்று அவர் தம் பழைய நண்பர்களையும் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தார். தாய்நாடு திரும்பிய போது பதினான்கு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்தார்.

அறிந்து பயன்படுத்துவோம்

தான், தாம் என்னும் சொற்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும். இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்.)
(எ.கா.) மாடுகள் தமது தலையை ஆட்டின.
கன்று தனது தலையை ஆட்டியது.

இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

 

Question 1. சிறுமி ............ (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
Answer: சிறுமி தனது கையில் மலர்களை வைத்திருந்தாள்.
In simple words: 'தான்' ஒருமைக்கு வரும், 'தாம்' பன்மைக்கு வரும். சிறுமி ஒருமை என்பதால் 'தனது' வரும்.

🎯 Exam Tip: ஒருமைப் பெயர்களுக்கு 'தனது' போன்ற ஒருமைச் சொற்களையும், பன்மைப் பெயர்களுக்கு 'தமது' போன்ற பன்மைச் சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.

 

Question 2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ............ (தனது/தமது) உழைப்பை நல்கினார்.
Answer: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தமது உழைப்பை நல்கினார்.
In simple words: அம்பேத்கர் ஒருவரை குறிப்பவராக இருந்தாலும், மரியாதை நிமித்தமாக பன்மைச் சொல்லான 'தமது' பயன்படுத்தப்படுகிறது.

🎯 Exam Tip: மரியாதைக்குரிய ஒருமைப் பெயர்களுக்கு 'தாம்' அல்லது 'தமது' போன்ற பன்மைச் சொற்களைப் பயன்படுத்துவது மரபு. இது தமிழில் காணப்படும் ஒரு சிறப்புப் பயன்பாடு.

 

Question 3. உயர்ந்தோர் ............ (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
Answer: உயர்ந்தோர் தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
In simple words: உயர்ந்தோர் என்பது பலரைக் குறிக்கும் என்பதால் 'தம்மைத்தாமே' வரும்.

🎯 Exam Tip: 'உயர்ந்தோர்' என்பது பன்மையைக் குறிப்பதால், அதற்குப் பொருத்தமான பன்மைச் சொல்லான 'தம்மைத்தாமே' பயன்படுத்தப்பட வேண்டும்.

 

Question 4. இவை ............ (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
Answer: இவை தாம் எனக்குப் பிடித்த நூல்கள்.
In simple words: 'இவை' என்பது பல நூல்களைக் குறிப்பதால், பன்மைச் சொல்லான 'தாம்' வரும்.

🎯 Exam Tip: 'இவை' போன்ற சுட்டுச்சொற்கள் பன்மையைக் குறிக்கும்போது, அவற்றோடு வரும் சொற்களும் பன்மையில் இருக்க வேண்டும்.

 

Question 5. குழந்தைகள். ............ (தன்னால் தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
Answer: குழந்தைகள் தம்மால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
In simple words: குழந்தைகள் என்பது பலரைக் குறிக்கும் என்பதால், பன்மைச் சொல்லான 'தம்மால்' வரும்.

🎯 Exam Tip: வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொல் ஒருமையா பன்மையா என்பதைப் பார்த்து, அதற்கேற்ப 'தன்னால்' அல்லது 'தம்மால்' போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

 

Question 1. முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
Answer: முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
In simple words: வாக்கியத்தில் வரும் 'தம்முடைய' என்ற சொல்லை 'தன்னுடைய' என்று மாற்றினால் வாக்கியம் சரியாகிவிடும்.

🎯 Exam Tip: தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தும்போது, ஒருமை-பன்மை மற்றும் வேற்றுமை உருபுகளின் சரியான பயன்பாடு ஆகியவற்றை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.

கட்டுரை எழுதுக

உழைப்பே உயர்வு

Question 1. 'உழைப்பே உயர்வு' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
உழைப்பு என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சீரும் சிறப்புடன் செய்வதாகும். நாம் மேற்கொண்ட செயலில் வெற்றி பெற உழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அத்தகைய உழைப்பின் சிறப்பை இக்கட்டுரையில் காண்போம்.

மாணவர்களின் உழைப்பு:
'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பது சான்றோர் வாக்கு. இது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். ஒரு தேர்வில் மட்டும் முதல் மாணவனாக இருந்தால் போதாது. எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாகத் திகழ முயற்சியும் பயிற்சியும் தேவை. இம்முயற்சியும் பயிற்சியுமே உழைப்பு. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த குறிக்கோளை மனதில் நிறுத்தி, அக்குறிக்கோளில் வெற்றி பெற உழைக்க வேண்டும். விடாமுயற்சி இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை.

ஊக்கமில்லா உழைப்பு:
சோம்பல், விரைந்து செய்ய வேண்டியவற்றைத் தாமதித்துச் செய்யும் இயல்பு, மறதி, தூக்கம் ஆகியன ஊக்கத்தை அறவே ஒழிக்கும் திறனுடையவை. ஊக்கமில்லாதவர் மக்களாகார்; மரங்களாவர்' என்பது வள்ளுவர் மொழி. காட்டில் நிற்கும் மரங்கள் காய்கனிகளைத் தரும். இறைவன் உறையும் திருக்கோயில், இல்லம், தேர், மரக்கலம் ஆகியன செய்வதற்கு மரம் பயன்படுகிறது. ஆனால், ஊக்கமற்ற மக்களாகிய மரங்களோ எதற்கும் பயன்படுவதில்லை. ஊக்கமில்லா உழைப்பு வீணானது.

உழைப்பின் பயன்:
நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிதல்ல. அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். அவ்வாறு ஓயாமல் உழைப்பவர்கள் விதியைக்கூடத் தூர விரட்டிவிடுவார்கள். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. பொறுமையாகவும் இடைவிடாமலும் உழைத்தால் வெற்றி நிச்சயம். வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப்பெரிய மூலதனம். கடின உழைப்பு ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முடிவுரை:
'கையும் காலும் தான் உதவி - கொண்ட கடமைதான் நமக்குப் பதவி' என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல் வரிகளை நினைவில் வைத்து உழைப்போம்; உயர்வோம்.
In simple words: உழைப்பு என்பது நாம் செய்யும் வேலையை சரியாகச் செய்வது. மாணவர்கள் நன்கு படித்து வெற்றி பெற வேண்டும். சோம்பேறித்தனம் இல்லாமல் உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உழைப்புதான் நம் வாழ்வை உயர்த்தும்.

🎯 Exam Tip: கட்டுரை எழுதும்போது முன்னுரை, மூன்று முதல் ஐந்து பத்திகள், மற்றும் முடிவுரை என ஒரு குறிப்பிட்ட அமைப்பைப் பின்பற்றவும். ஒவ்வொரு பத்தியும் ஒரு புதிய கருத்தை விளக்க வேண்டும். பழமொழிகள் மற்றும் கவிதை வரிகளைப் பயன்படுத்துவது கட்டுரையை மேலும் மெருகேற்றும்.

மொழியோடு விளையாடு

பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.

(எ.கா.) குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்? குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்? பெருங்காயத்தால்

 

Question 1. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?
Answer: நூலால்
In simple words: ஆடை நூலால் நெய்யப்படும். அறிவும் நூல்கள் (புத்தகங்கள்) படிப்பதால் கிடைக்கும்.

🎯 Exam Tip: இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, ஒரு சொல் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பொருளைத் தர வேண்டும். 'நூல்' என்பது நூல் இழை மற்றும் நூல் புத்தகம் என இருபொருள் தரும்.

 

Question 2. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?
Answer: போரில்
In simple words: மாடுகள் போரில் (வைக்கோல் போர்) வைக்கோல் உண்ணும். மன்னர்கள் போரில் இறப்பர்.

🎯 Exam Tip: இந்த வகை வினாக்களுக்கு விடையளிக்கும்போது, பொதுவான சொற்களின் பல பொருள்களைப் புரிந்துகொள்வது அவசியம். 'போர்' என்பது வைக்கோல் குவியல் மற்றும் சண்டை என இருபொருள் தரும்.

 

Question 3. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?
Answer: மாலை
In simple words: கதிரவன் மறையும் நேரம் மாலை. கழுத்தில் அணியும் மாலை.

🎯 Exam Tip: ஒரு சொல் காலத்தையும் ஒரு பொருளையும் குறிக்கும் சந்தர்ப்பங்களில், இருபொருள் தரும் சொல்லைக் கண்டறிவது முக்கியம். 'மாலை' என்பது நேரம் மற்றும் பூமாலை என இருபொருள் தரும்.

 

Question 4. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?
Answer: திங்கள்
In simple words: வானில் தேய்ந்து வளர்வது திங்கள் (சந்திரன்). வாரம் நான்கு கொண்டது திங்கள் (மாதம்).

🎯 Exam Tip: 'திங்கள்' என்பது சந்திரன் மற்றும் மாதத்தைக் குறிக்கும் ஒரு சொல். இரு கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் பதிலளிக்கும் ஒரு சொல்லைக் கண்டறிவது அவசியம்.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்...

  • வாழ்வுக்கு வெற்றிதரும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன்.
  • சமுதாய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

  • குறிக்கோள் – Objective
  • நம்பிக்கை – Confidence
  • முனைவர் பட்டம் – Doctorate
  • வட்ட மேசை மாநாடு - Round Table Conference
  • இரட்டை வாக்குரிமை - Double voting
  • பல்கலைக்கழகம் – University
  • ஒப்பந்தம் – Agreement
  • அரசியலமைப்பு – Constitution

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

 

Question 1. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது ............ அணி.
Answer: உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி.
In simple words: நேரடியாகச் சொல்லாமல், ஒரு விஷயத்தை ஒப்பிட்டுப் புரிய வைப்பது பிறிதுமொழிதல் அணி.

🎯 Exam Tip: பிறிதுமொழிதல் அணியில் உவமை மட்டுமே வெளிப்படையாக இருக்கும். மற்றொன்று மறைமுகமாக உணர்த்தப்படும்.

 

Question 2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது ............ அணி.
Answer: இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி.
In simple words: இரண்டு பொருள்களில் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் சொல்லும் அணி வேற்றுமையணி.

🎯 Exam Tip: வேற்றுமையணியில், முதலில் ஒற்றுமையையும் பின்னர் வேற்றுமையையும் எடுத்துரைப்பது மிகவும் முக்கியம்.

 

Question 3. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது ............ அணி.
Answer: ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி.
In simple words: ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருப்பதை இரட்டுறமொழிதல் அணி என்று சொல்வோம்.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் அணியில் ஒரே சொல் அல்லது தொடர் இரண்டு வெவ்வேறு பொருட்களைக் குறிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Question 4. இரட்டுறமொழிதல் அணியைச் ............ என்றும் கூறுவர்.
Answer: இரட்டுறமொழிதல் அணியைச் சிலேடை என்றும் கூறுவர்.
In simple words: இரட்டுறமொழிதல் அணிக்கு வேறு பெயர் சிலேடை அணி.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் மற்றும் சிலேடை ஆகிய இரண்டும் ஒரே அணியைக் குறிக்கும் இரண்டு சொற்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

விடையளி

 

Question 1. இரட்டுறமொழிதல் அணி சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு சொல் அல்லது ஒரு தொடர் இரண்டு வெவ்வேறு பொருள்களைத் தருமாறு அமையும் அணியே இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர். ஒரே பாடலை இரண்டு விதமான அர்த்தங்களில் புரிந்துகொள்ள முடியும். இது கவிதையில் சுவாரஸ்யத்தையும் ஆழத்தையும் சேர்க்கிறது.
எ.கா. ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயும் நேர் செப்பு.
விளக்கம் : இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.
நாய் சில சமயம் ஓடிக் கொண்டிருக்கும்; சில சமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது.
இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.
In simple words: இரட்டுறமொழிதல் அணி என்பது ஒரு பாடலை ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட அர்த்தங்களில் புரிந்துகொள்ளும்படி எழுதுவதாகும். இது ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கும். தேங்காய் மற்றும் நாயின் பண்புகளை விளக்கும் பாடல் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் அணியை விளக்கும்போது, முதலில் விளக்கத்தைக் கூறி, பின்னர் எடுத்துக்காட்டுக் குறளை எழுதி, அதன் இரண்டு பொருள்களையும் தனித்தனியாக விளக்குவது முழு மதிப்பெண் பெற உதவும்.

 

Question 1. இரட்டுறமொழிதல் அணி சான்றுடன் விளக்குக.
Answer: இரட்டுறமொழிதல் அணி என்பது ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியம் இரண்டு வெவ்வேறு பொருள்களைத் தரும்படி அமைவதாகும். இதை சிலேடை அணி என்றும் கூறுவார்கள். இந்த அணி தமிழ் இலக்கியத்தில் சொற்களின் வித்தையை வெளிப்படுத்தும் ஒரு அழகான முறையாகும்.
எடுத்துக்காட்டு:
ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு.
விளக்கம்:
இந்த பாடல் ஒரு தேங்காய் மற்றும் ஒரு நாயின் பண்புகளை விளக்குகிறது.
* தேங்காய்க்கு: அதற்கு ஒரு ஓடு உண்டு. அதன் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும். அது வளைவு இல்லாமல் குலையாகத் தொங்கும்.
* நாய்க்கு: அது சில சமயம் ஓடும், சில சமயம் ஒரே இடத்தில் படுத்து இருக்கும். அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும். அது குரைப்பதற்கு வெட்கப்படாது.
இவ்வாறு ஒரே பாடல் வரிகள் இரண்டு பொருள்களைத் தரும்படி அமைந்திருப்பதால், இது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.
In simple words: ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியம் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுத்தால், அது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். அதாவது, ஒரு விஷயத்தைப் பேசும்போது, அதே வார்த்தைகளில் இன்னொரு விஷயத்தையும் சொல்லுவது.

🎯 Exam Tip: இரட்டுறமொழிதல் அணி பற்றி எழுதும்போது, முதலில் அதன் வரையறையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பின்னர் ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டுப் பாடலை எழுதி, அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிக்கும் உள்ள இரண்டு பொருள்களையும் விரிவாக விளக்குவது அவசியம்.

TN Board Solutions for Class 8 Tamil Chapter 09.5 அணி இலக்கணம்

Accessing Chapter 09.5 அணி இலக்கணம் Solutions

Review comprehensive exercise answers for Class 8 Tamil Chapter 09.5 அணி இலக்கணம். Fully updated to match current TN Board syllabus guidelines, these textbook solutions help students verify their work and maintain accurate study notes.

Concept-Driven Answers for Class 8 Tamil

Clear, methodical explanations accompany every challenging problem within the Class 8 Tamil text. Engaging with these detailed answers lays a solid foundation for advanced learning and improves foundational clarity for upcoming assessments.

Maximizing Study Efficiency

These resources act as an effective roadmap for daily homework tasks and independent study. Supplement your review of Chapter 09.5 அணி இலக்கணம் with official sample papers and interactive practice tests available on our platform free of charge.

FAQs

Where can I find the latest Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் for the 2026-27 session?

The complete and updated Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் is available for free on StudiesToday.com. These solutions for Class 8 Tamil are as per latest TN Board curriculum.

Are the Tamil TN Board solutions for Class 8 updated for the new 50% competency-based exam pattern?

Yes, our experts have revised the Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.

How do these Class 8 TN Board solutions help in scoring 90% plus marks?

Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் will help students to get full marks in the theory paper.

Do you offer Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் in multiple languages like Hindi and English?

Yes, we provide bilingual support for Class 8 Tamil. You can access Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் in both English and Hindi medium.

Is it possible to download the Tamil TN Board solutions for Class 8 as a PDF?

Yes, you can download the entire Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் in printable PDF format for offline study on any device.