Get the most accurate TN Board Solutions for Class 8 Tamil Chapter 03.5 எச்சம் here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 8 Tamil. Our expert-created answers for Class 8 Tamil are available for free download in PDF format.
Detailed Chapter 03.5 எச்சம் TN Board Solutions for Class 8 Tamil
For Class 8 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 8 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 03.5 எச்சம் solutions will improve your exam performance.
Class 8 Tamil Chapter 03.5 எச்சம் TN Board Solutions PDF
கற்பவை கற்றபின்
Question 1. 'வந்த' என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
Answer:
(i) வந்த குழந்தை
(ii) வந்த சிறுவன்
(iii) வந்த தாத்தா
(iv) வந்த மாணவர்கள்
(v) வந்த மழை
(vi) வந்த திரைப்படம்
(vii) வந்த அம்மா.
In simple words: We can use the word 'வந்த' (came/arrived) to describe different nouns, showing who or what came. Each example adds a different person or thing to the word 'வந்த'.
🎯 Exam Tip: When asked to use a word in sentences, create distinct and simple phrases that clearly show the word's meaning and usage with various subjects.
Question 2. 'வரைந்து' என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
Answer:
(i) வரைந்து பார்த்தான்.
(ii) வரைந்து வைத்தான்.
(iii) வரைந்து கொடுத்தான்.
(iv) வரைந்து வியந்தான்.
(v) வரைந்து மகிழ்ந்தான்.
(vi) வரைந்து கற்றான்.
(vii) வரைந்து தெளிந்தான்.
In simple words: The word 'வரைந்து' (having drawn/sketched) can be combined with other action words to show different things someone did after drawing. For instance, 'வரைந்து பார்த்தான்' means 'drew and saw'.
🎯 Exam Tip: Focus on linking the given word ('வரைந்து') to a subsequent action, creating a logical flow in each phrase.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் __________ எனப்படும்.
(அ) முற்று
(ஆ) எச்சம்
(இ) முற்றெச்சம்
(ஈ) வினையெச்சம்
Answer: (ஆ) எச்சம்
In simple words: A word that does not fully complete its meaning and still leaves something unsaid is called எச்சம் (echaam).
🎯 Exam Tip: Remember that எச்சம் literally means 'leftover' or 'incomplete', which directly relates to its grammatical definition.
Question 2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் __________
(அ) படித்து
(ஆ) எழுதி
(இ) வந்து
(ஈ) பார்த்த
Answer: (ஈ) பார்த்த
In simple words: Among the given words, 'பார்த்த' (paartha) is the one that acts as a பெயரெச்சம் (peyar-echaam), meaning it can describe a noun, like 'பார்த்த படம்' (the movie watched).
🎯 Exam Tip: பெயரெச்சம் typically ends in 'அ' and can directly precede a noun to describe it, while வினையெச்சம் usually ends in 'உ' or 'இ' and precedes a verb.
Question 3. குறிப்பு வினையெச்சம் வெளிப்படையாகக் காட்டாது.
(அ) காலத்தை
(ஆ) வினையை
(இ) பண்பினை
(ஈ) பெயரை
Answer: (அ) காலத்தை
In simple words: A குறிப்பு வினையெச்சம் (kurippu vinai-echaam) does not clearly show the time (காலத்தை) of the action. It mainly focuses on the quality or nature of the action.
🎯 Exam Tip: Understand that குறிப்பு வினையெச்சம் focuses on the quality of an action rather than explicitly indicating past, present, or future tense.
பொருத்துக
1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
4. பெரிய - குறிப்புப் வினையெச்சம்
Answer:
1. நடந்து - வினையெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
4. பெரிய - குறிப்புப் பெயரெச்சம்
In simple words: This exercise matches different types of incomplete words (எச்சம்) with their correct grammatical categories. Each word, like 'நடந்து' or 'பெரிய', fits into a specific type of எச்சம் based on how it functions in a sentence.
🎯 Exam Tip: Pay close attention to the ending of the word and what kind of word it modifies (noun or verb) to correctly classify it as பெயரெச்சம், வினையெச்சம், முற்றெச்சம், or குறிப்பெச்சம்.
பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம் வினையெச்சம் என வகைப்படுத்துக
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
Answer:
| பெயரெச்சம் | வினையெச்சம் |
|---|---|
| நல்ல | படுத்து |
| எறிந்த | பாய்ந்து |
| வீழ்ந்த | கடந்து |
| மாட்டிய | பிடித்து |
| அழைத்த | பார்த்து |
In simple words: We sort these words into two groups: பெயரெச்சம் (peyar-echaam) which describes nouns, and வினையெச்சம் (vinai-echaam) which describes verbs. This helps us understand how each word completes or modifies another word in a sentence.
🎯 Exam Tip: Remember that பெயரெச்சம் usually ends with 'அ' (e.g., 'நல்ல' - good, 'எறிந்த' - thrown) and modifies a noun, while வினையெச்சம் often ends with 'உ' or 'இ' (e.g., 'படுத்து' - having lain down, 'பாய்ந்து' - having jumped) and modifies a verb.
சிறுவினா
Question 1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
(i) ஒரு சொல் பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்பது எச்சம் எனப்படும். அதாவது, ஒரு வாக்கியத்தில் முழுமையான கருத்தைத் தராத, ஆனால் மற்றொரு சொல்லை எதிர்பார்த்திருக்கும் சொல் எச்சம் ஆகும்.
(ii) எச்சம் இரண்டு வகைப்படும்: பெயரெச்சம் மற்றும் வினையெச்சம்.
(எ.கா.) படித்த மாணவன். (இங்கு 'படித்த' என்பது பெயரெச்சம்)
படித்த பள்ளி. (இங்கு 'படித்த' என்பது பெயரெச்சம்)
In simple words: An 'echaam' is a word that does not finish its meaning on its own. It needs another word to complete the thought. There are two main types: 'peyar-echaam' (which describes a noun) and 'vinai-echaam' (which describes a verb).
🎯 Exam Tip: Clearly define 'எச்சம்' as an incomplete word and state its two main categories with simple, relevant examples.
Question 2. 'அழகிய மரம்' - எச்ச வகையை விளக்குக.
Answer:
(i) 'அழகிய மரம்' என்பது பெயரெச்சத் தொடருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
(ii) பெயரெச்சம் என்பது ஒரு பெயரைக்கொண்டு முடியும் எச்சம் ஆகும். அதாவது, ஒரு சொல்லை விவரித்து, அதற்குப் பின் வரும் பெயர்ச்சொல்லைக்கொண்டு அதன் பொருள் முழுமையடையும்.
(iii) இத்தொடரில் 'அழகிய' என்ற சொல், 'மரம்' என்ற பெயர்ச்சொல்லை விவரிக்கிறது. 'அழகிய' என்பது தனியாக நின்று முழுமையான பொருளைத் தராமல், 'மரம்' என்ற பெயர்ச்சொல்லை எதிர்பார்த்து நிற்கிறது. எனவே, இது ஒரு பெயரெச்சமாகும்.
In simple words: In 'அழகிய மரம்' (beautiful tree), the word 'அழகிய' (beautiful) is an 'echaam' because it doesn't make full sense alone. It needs 'மரம்' (tree) to complete its meaning and describe what is beautiful. This makes 'அழகிய' a பெயரெச்சம் (peyar-echaam), which is a type of incomplete word that describes a noun.
🎯 Exam Tip: When explaining 'பெயரெச்சம்', always clarify that it's an incomplete verb form that modifies a noun, and use the given example to show how it functions.
Question 3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு வினைமுற்று, எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். அதாவது, ஒரு முற்றுப்பெற்ற வினைச்சொல், தனக்குரிய முற்றுப்பொருளைத் தராமல், ஒரு எச்சச்சொல் போல செயல்பட்டு, மற்றொரு வினைச்சொல்லை ஏற்று தன் பொருளை நிறைவு செய்யும்.
(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் 'படித்தனள்' என்னும் வினைமுற்றுச் சொல், 'படித்து' என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. அதாவது, வள்ளி படித்து முடித்த பிறகு மகிழ்ந்தாள் என்ற பொருளை இது குறிக்கிறது. எனவே இது முற்றெச்சம் ஆகும்.
In simple words: 'முற்றெச்சம்' (mutr-echaam) happens when a verb that should finish a sentence actually acts like an incomplete word (echaam) and needs another verb to finish the thought. For example, in 'வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்' (Valli read and rejoiced), 'படித்தனள்' (read) feels complete, but here it acts as 'having read', needing 'மகிழ்ந்தாள்' (rejoiced) to fully express the combined action.
🎯 Exam Tip: Highlight that முற்றெச்சம் is unique because a complete verb (முற்று) behaves like an incomplete one (எச்சம்) by modifying another complete verb.
Question 4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
Answer:
வினையெச்சத்தின் வகைகள்: வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் மற்றும் குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.
(i) தெரிநிலை வினையெச்சம்: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். இது ஒரு செயலை எப்போது நடந்தது என்பதையும் என்ன செயல் நடந்தது என்பதையும் தெளிவாகக் காட்டும்.
(எ.கா.) எழுதி வந்தான். இத்தொடரில் 'எழுதி' என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது, எழுதுதல் என்ற செயல் முடிந்து, அதன் பிறகு வந்தான் என்ற பொருள் தெளிவாகிறது.
(ii) குறிப்பு வினையெச்சம்: காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும். இது ஒரு செயலின் தன்மையை அல்லது பண்பை மட்டும் விவரிக்கும்.
(எ.கா.) மெல்ல வந்தான். இத்தொடரில் 'மெல்ல' என்னும் சொல், 'மெதுவாக' என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. அதாவது, எப்படி வந்தான் என்று விவரிக்கிறதே தவிர, எப்போது வந்தான் என்று தெளிவாகக் காட்டுவதில்லை.
In simple words: 'Vinai-echaam' (incomplete verbs that describe other verbs) has two kinds. First, 'Therinilai Vinai-echaam' shows both the action and the time clearly, like 'எழுதி வந்தான்' (wrote and came). Second, 'Kurippu Vinai-echaam' only shows the quality or manner of the action, not the time, like 'மெல்ல வந்தான்' (came slowly).
🎯 Exam Tip: Clearly differentiate between தெரிநிலை (explicit) and குறிப்பு (implicit) வினையெச்சம் by focusing on whether they explicitly state the time and action or only hint at the quality of the action.
மொழியை ஆள்வோம்
கேட்க :
Question 1. உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
In simple words: This is an activity for students to listen to health awareness talks. The answer means students should do this activity on their own.
🎯 Exam Tip: When faced with an activity-based question, acknowledge it as a self-learning task for students.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக
உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம்! மக்கள் அனைவரும் நெடுநாள் வாழவே விரும்புவர். நெடுநாள் வாழ நல்ல உடல் வேண்டும். எனவேதான் திருமூலர், 'உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று பாடியுள்ளார். உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, உடலைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.
உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கின்றது. மூளை, இதயம், நுரையீரல் முதலான உடல் உறுப்புகள் தத்தம் தொழிலைத் தவறாது செய்து வர நமக்குப் பல்வேறு சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நாம் உணவின் வழியாகத்தான் பெற வேண்டும்.
எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியாக நம் உணவு அமைய வேண்டும். ஆனால் நாம் நாகரிகம் என்னும் பெயரால் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறைகள் பெருமளவு கொழுப்புச் சத்தையே கொண்டவையாகும். மேற்கத்திய உணவு வகைகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்துகளும் நீர்ச்சத்துகளும் கிடைக்காது.
மேற்கத்திய உணவுகளை உண்ணுவதால் நோய்கள் நம்மிடம் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும். விரைவு உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, பொட்டலப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது தவறு. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தும் சுவையூட்டச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களும் உடலுக்கு ஊறு செய்பவையாகும். இவற்றை உண்பது காசைக் கொடுத்து நோயை வாங்குவதற்கு இணையாகும்.
நம் ஊரில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளையும் பழ வகைகளையும் வாங்கிக் சாப்பிடுவதுதான் சிறந்தது. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச்சத்துகள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற நமக்குத் தேவையான சத்துகளைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும்.
நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.
உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.
தண்ணீரும் மருந்தே. 'நீரின்றியமையாது உலகு' என்பது வள்ளுவம். இயற்கை உணவுப் பொருள்களில் நீரில்லாத உணவுப் பொருள்களே இல்லை. எல்லா வகையான உணவுப் பொருள்களும் விளைவதற்கு நீர் காரணமாக அமைகிறது.
வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம், முலாப்பழம் முதலானவற்றைச் சாப்பிடலாம். இளநீர் பருகலாம். நீர்மோர் அருந்தலாம். இவை கோடைக்காலத்தில் நம் உடலுக்கு நீரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மருத்துவக் குணமும் இருப்பதால் உணவே மருந்து என்று கூறுவது பொருத்தமாகிறதல்லவா?
'பசித்துப் புசி' என்பதனை மனதில் வைத்து பசித்தப் பின் உண்ணுவதனையும் அளவோடு உண்ணுதலையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.
சொல்லக்கேட்டு எழுதுக
நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை பேருண்டியும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.
அறிந்து பயன்படுத்துவோம்
உவமைத் தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.
(எ.கா.) 1. மடை திறந்த வெள்ளம் போல - தடையின்றி மிகுதியாக. திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத் தன்மை. பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.
பொருத்துக:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல - பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல - எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல - எளிதில் மனத்தில் பதிதல்
Answer:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல - எதிர்பாரா நிகழ்வு
3. பசு மரத்து ஆணி போல - எளிதில் மனத்தில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல - ஒற்றுமையின்மை
In simple words: This exercise matches common idioms with their correct meanings. Each idiom uses a picture or situation to explain a deeper idea, like how 'காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல' means something happened by chance.
🎯 Exam Tip: Understand the literal meaning of each idiom's components to logically deduce its metaphorical meaning, and practice associating idioms with their common interpretations.
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
Question 1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
Answer: காந்தியடிகளின் புகழ், குன்றின் மேலிட்ட விளக்குப் போல் உலகெங்கும் ஒளிவீசுகின்றது.
In simple words: We can use the phrase 'like a lamp on a hill' to describe how Mahatma Gandhi's fame shines brightly all over the world, just like a lamp on a hilltop is visible everywhere.
🎯 Exam Tip: When forming a sentence using an idiom, ensure the context clearly reflects the idiom's meaning (e.g., 'easily visible' for 'lamp on a hill').
Question 2. வேலியே பயிரை மேய்ந்தது போல
Answer: வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே தவறு செய்கிறார்கள்.
In simple words: We use 'like the fence eating the crop' to talk about situations where the very people meant to protect something end up harming it, such as leaders doing wrong things instead of protecting the public.
🎯 Exam Tip: This idiom signifies betrayal by a protector; ensure your sentence illustrates this specific meaning, not just any wrongdoing.
Question 3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
Answer: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.
In simple words: The phrase 'like a fruit slipping into milk' means something good happened easily and unexpectedly. Here, it describes getting new clothes and a bicycle for a birthday without even asking, making it a very happy surprise.
🎯 Exam Tip: This idiom expresses unexpected good fortune or ease; construct your sentence to show a happy, effortless outcome.
Question 4. உடலும் உயிரும் போல
Answer: கந்தனும் குமரனும் உடலும் உயிரும் போல எப்போதும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருப்பார்கள்.
In simple words: The idiom 'like body and soul' means two things are always together and cannot be separated, like how Kandan and Kumaran are always with each other, just like a body and its soul.
🎯 Exam Tip: Use this idiom to describe an inseparable bond, highlighting closeness and mutual dependence.
Question 5. கிணற்றுத் தவளை போல
Answer: கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான்.
In simple words: The phrase 'like a frog in a well' describes someone who knows very little about the outside world. Here, Kandan didn't know much about what was happening in his country, just like a frog stuck in a well knows only its small world.
🎯 Exam Tip: This idiom denotes ignorance or lack of worldly knowledge; use it to describe someone who is unaware of broader happenings.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை - நோய் வரக் காரணங்கள் - நோய் தீர்க்கும் வழிமுறைகள் - வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை - முடிவுரை
முன்னுரை :
நம்மிடம் எவ்வளவு கல்வி, செல்வம் இருந்தாலும், உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு, பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நோய் வரக் காரணங்கள் :
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.
மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அண்டகுவதற்கு நாமே காரணமாகிறோம்.
நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வருமுன் காத்தல் :
பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.
சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். "நோய்நாடி நோய்முதல் நாடி" என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.
உணவும் மருந்தும் :
நலத்திற்கு உணவுதான் அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.
மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
உடற்பயிற்சியின் தேவை :
நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. 'ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும்.
கவிமணி, "காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவனே!" என்கிறார். அதாவது, தினமும் காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு புதிய காற்றைச் சுவாசித்தால், நோய்கள் நம்மை நெருங்காது, மரண பயம் இருக்காது.
முடிவுரை :
நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற ஔவையின் வாக்குப்படி மனிதராகப் பிறப்பது மிக அரிது. அப்படிப் பிறந்த நம் உடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.
1. பட்டை
2. வசம்பு
3. இலவங்கம்
4. அன்னாசிப்பூ
5. மிளகு
6. ஓமம்
7. சீரகம்
8. கருஞ்சீரகம்
9. சோம்பு
10. பெருங்காயம்
11. சித்தரத்தை
Answer: கொடுக்கப்பட்ட படத்தில், பட்டை, வசம்பு, இலவங்கம், அன்னாசிப்பூ, மிளகு, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், சோம்பு, பெருங்காயம், சித்தரத்தை போன்ற பல்வேறு மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் காட்டப்பட்டுள்ளன. இவை உணவுக்கு சுவையையும் மருத்துவப் பயன்களையும் தருகின்றன.
In simple words: இந்த படத்தில் உள்ள மசாலாப் பொருட்களின் பெயர்களை வரிசையாக எழுத வேண்டும். இவை உணவில் சேர்க்கப்படும் பொருட்கள்.
🎯 Exam Tip: படத்திலுள்ள பொருட்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களைப் பிழையின்றி எழுதவும்.
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக
Answer:
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
4. சுத்தம் சோறு போடும்.
5. வருமுன் காப்போம்.
6. அறிவே ஆற்றல்
7. பருவத்தே பயிர்செய்.
8. பசித்துப் புசி.
9. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
In simple words: படத்திற்குள் மறைந்திருக்கும் பத்து பழமொழிகளை கண்டுபிடித்து எழுத வேண்டும். இந்த பழமொழிகள் வாழ்க்கைக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும்.
🎯 Exam Tip: வட்டத்திற்குள் உள்ள வார்த்தைகளை சரியாக இணைத்து பழமொழிகளை கண்டுபிடிக்கும் போது, பொருள் மாறாமல் இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்...
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.
Answer: ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுவது ஒரு நல்ல பழக்கமாகும். இது உடலை ஆரோக்கியமாகவும் மனதை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். சரியான தூக்கம் உடல் நலத்திற்கு மிக அவசியம்.
In simple words: நாம் சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழ வேண்டும். இது உடலுக்கு நல்லது.
🎯 Exam Tip: இந்த மாதிரியான கேள்விகளுக்கு உங்கள் சொந்த கருத்துக்களுடன் சேர்த்து பொதுவான நல்ல பழக்கவழக்கங்களையும் எழுதலாம்.
கலைச்சொல் அறிவோம்
1. நோய் – Disease
2. மூலிகை - Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் - Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு - Gene
8. ஒவ்வாமை – Allergy
Answer: இந்த பட்டியல் சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களைக் காட்டுகிறது. ஒவ்வொரு கலைச்சொல்லும் அதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் தெளிவாக விளக்குகிறது. இது மொழி அறிவை வளர்க்க உதவுகிறது.
In simple words: தமிழ்ச் சொற்களுக்கு சரியான ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது மொழியைப் புரிந்துகொள்ள உதவும்.
🎯 Exam Tip: கலைச்சொற்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றின் பயன்பாட்டைப் புரிந்து கொண்டால் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
Question 1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ............ எனப்படும்.
Answer: பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். ஒரு வாக்கியத்தில் பொருள் முழுமை அடையாமல் நிற்கும் சொல் எச்சம் என்று அழைக்கப்படுகிறது.
In simple words: ஒரு சொல் முழுமையான அர்த்தத்தைத் தரவில்லை என்றால், அது எச்சம் எனப்படும்.
🎯 Exam Tip: எச்சம் என்பது ஒரு வாக்கியத்தின் முக்கிய பகுதியாகும், அதன் பொருள் மற்ற சொற்களால் நிறைவு செய்யப்பட வேண்டும்.
Question 2. எச்சம் ............ வகைப்படும்.
Answer: எச்சம் இரண்டு வகைப்படும். எச்சம் என்பது பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
In simple words: எச்சம் இரண்டு விதமாகப் பிரிக்கப்படும்.
🎯 Exam Tip: எச்சத்தின் இரண்டு வகைகளையும் அவற்றின் உதாரணங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
Question 3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ............
Answer: பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் ஒரு பெயர்ச்சொல்லை அடுத்து வந்து அதை முடிக்கும்.
In simple words: பெயரை முடிக்கும் சொல் பெயரெச்சம்.
🎯 Exam Tip: பெயரெச்சம் எப்பொழுதும் ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து முழுமையான பொருளைத் தரும்.
Question 4. பெயரெச்சம் ............ காலத்திலும் வரும்.
Answer: பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும். அதாவது, பெயரெச்சம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
In simple words: பெயரெச்சம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திலும் வரும்.
🎯 Exam Tip: பெயரெச்சங்கள் முக்காலத்தையும் குறிக்கும் என்பதை உதாரணங்களுடன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Question 5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ............ பெயரெச்சம்.
Answer: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம். இது ஒரு செயலும் அது நடக்கும் காலமும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்திருக்கும்.
In simple words: ஒரு செயல் எந்தக் காலத்தில் நடந்தது என்று தெளிவாகக் காட்டினால், அது தெரிநிலை பெயரெச்சம்.
🎯 Exam Tip: தெரிநிலை பெயரெச்சத்தில் செயல் (வினை) மற்றும் காலம் தெளிவாகத் தெரியும்.
Question 6. பெயரெச்சம் ............ வகைப்படும்.
Answer: பெயரெச்சம் இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை பெயரெச்சம் மற்றும் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
In simple words: பெயரெச்சம் இரண்டு வகைப்படும்.
🎯 Exam Tip: பெயரெச்சத்தின் இரண்டு வகைகளையும் (தெரிநிலை, குறிப்பு) அவற்றின் தன்மைகளையும் புரிந்துகொள்வது அவசியம்.
Question 7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகத் காட்டும் பெயரெச்சம் ............
Answer: செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகத் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம். இது ஒரு பொருளின் தன்மையை மட்டும் உணர்த்தும், செயல் அல்லது காலத்தைக் குறிப்பிடாது.
In simple words: ஒரு பெயரின் தன்மையை மட்டும் சொன்னால், அது குறிப்புப் பெயரெச்சம்.
🎯 Exam Tip: குறிப்புப் பெயரெச்சத்தில் செயல் மற்றும் காலம் மறைந்திருக்கும், பண்பு மட்டுமே வெளிப்படையாக இருக்கும்.
Question 8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ............
Answer: வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம். இந்த எச்சச் சொல் ஒரு வினைச்சொல்லை அடுத்து வந்து அதை முடிக்கும்.
In simple words: ஒரு வினையை முடிக்கும் சொல் வினையெச்சம்.
🎯 Exam Tip: வினையெச்சம் எப்பொழுதும் ஒரு வினைச்சொல்லுடன் இணைந்து முழுமையான பொருளைத் தரும்.
Question 9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ............ வினையெச்சம்.
Answer: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம். இது ஒரு செயலும் அது நடக்கும் காலமும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்திருக்கும்.
In simple words: ஒரு செயல் எந்தக் காலத்தில் நடந்தது என்று தெளிவாகக் காட்டினால், அது தெரிநிலை வினையெச்சம்.
🎯 Exam Tip: தெரிநிலை வினையெச்சத்தில் செயல் (வினை) மற்றும் காலம் தெளிவாகத் தெரியும்.
Question 10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் ............
Answer: காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம். இது ஒரு செயலின் தன்மையை மட்டும் உணர்த்தும், காலம் அல்லது செயலைக் குறிப்பிடாது.
In simple words: ஒரு வினையின் தன்மையை மட்டும் சொன்னால், அது குறிப்பு வினையெச்சம்.
🎯 Exam Tip: குறிப்பு வினையெச்சத்தில் செயல் மற்றும் காலம் மறைந்திருக்கும், பண்பு மட்டுமே வெளிப்படையாக இருக்கும்.
விடையளி :
Question 1. எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer: எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம். இந்த இரண்டு வகை எச்சங்களும் வாக்கியத்தின் பொருளை நிறைவு செய்யப் பயன்படுகின்றன.
In simple words: எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம் மற்றும் வினையெச்சம்.
🎯 Exam Tip: எச்சத்தின் வகைகளையும் அவற்றின் அடிப்படைப் பண்புகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Question 2. பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
Answer: பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். அதாவது, ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முழுமையடையும் எச்சச் சொல் பெயரெச்சம் எனப்படும். இது முக்காலத்திலும் வரும்.
(எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
In simple words: ஒரு பெயரை முடிக்கும் சொல் பெயரெச்சம். இது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திலும் வரும்.
🎯 Exam Tip: பெயரெச்சம் எப்பொழுதும் ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்து, அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தருகிறது.
Question 3. தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும். இதில் ஒரு செயல் என்ன, அது எந்தக் காலத்தில் நடந்தது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
(எ.கா) எழுதிய கடிதம்.
In simple words: ஒரு செயல் மற்றும் காலம் தெளிவாகத் தெரியும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம். 'எழுதிய கடிதம்' என்பதில், 'எழுதிய' என்ற செயல் இறந்த காலத்தில் நடந்தது என தெளிவாகத் தெரிகிறது.
🎯 Exam Tip: தெரிநிலை பெயரெச்சத்தில் வினை மற்றும் காலம் ஆகிய இரண்டும் தெளிவாகத் தெரியும்.
Question 4. குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer: செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும். இந்த வகை எச்சத்தில் செயல் அல்லது காலம் மறைந்திருக்கும், ஆனால் பொருளின் பண்பு வெளிப்படையாகத் தெரியும்.
(எ.கா) சிறிய பந்து.
In simple words: ஒரு செயல் மற்றும் காலம் தெரியாமல், பண்பை மட்டும் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம். 'சிறிய பந்து' என்பதில், பந்தின் 'சிறிய' என்ற பண்பு மட்டும் தெரிகிறது, எந்தச் செயலும் காலமும் இல்லை.
🎯 Exam Tip: குறிப்புப் பெயரெச்சம் எப்பொழுதும் ஒரு பண்புப் பெயர்ச்சொல்லைக் குறிக்கும்.
Question 5. வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer: வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். இந்த எச்சச் சொல் ஒரு வினைச்சொல்லை அடுத்து வந்து, அந்த வினையை முடிக்கும். இது முற்றுப் பெறாத வினையாகும்.
(எ.கா) படித்து முடித்தான்.
In simple words: ஒரு வினையை முடிக்கும் சொல் வினையெச்சம். 'படித்து முடித்தான்' என்பதில், 'படித்து' என்ற சொல் 'முடித்தான்' என்ற வினையை முடிக்கிறது.
🎯 Exam Tip: வினையெச்சம் எப்பொழுதும் ஒரு வினைச்சொல்லுடன் இணைந்து முழுமையான பொருளைத் தரும்.
Question 6. தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
Answer: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். இந்த வகையில், ஒரு செயல் என்ன, அது எந்தக் காலத்தில் நடந்தது என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
(எ.கா) எழுதி வந்தான்.
In simple words: ஒரு செயல் மற்றும் காலம் தெளிவாகத் தெரியும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம். 'எழுதி வந்தான்' என்பதில், 'எழுதி' என்ற செயல் இறந்த காலத்தில் நடந்தது எனத் தெரிகிறது.
🎯 Exam Tip: தெரிநிலை வினையெச்சத்தில் வினை மற்றும் காலம் ஆகிய இரண்டும் தெளிவாகத் தெரியும்.
Question 7. குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer: காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும். இந்த வகையில், செயலின் பண்பு மட்டுமே வெளிப்படையாகத் தெரியும், காலம் அல்லது செயல் மறைந்திருக்கும்.
(எ.கா) மெல்ல வந்தான்.
In simple words: ஒரு செயல் மற்றும் காலம் தெரியாமல், அதன் பண்பை மட்டும் காட்டும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம். 'மெல்ல வந்தான்' என்பதில், 'மெல்ல' என்ற பண்பு மட்டும் தெரிகிறது, எந்தக் காலமும் இல்லை.
🎯 Exam Tip: குறிப்பு வினையெச்சத்தில் செயல் மற்றும் காலம் மறைந்திருக்கும், பண்பு மட்டுமே வெளிப்படையாக இருக்கும்.
Free study material for Tamil
TN Board Solutions Class 8 Tamil Chapter 03.5 எச்சம்
Students can now access the TN Board Solutions for Chapter 03.5 எச்சம் prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 8 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.
Detailed Explanations for Chapter 03.5 எச்சம்
Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 8 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 8 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.
Benefits of using Tamil Class 8 Solved Papers
Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 8 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 03.5 எச்சம் to get a complete preparation experience.
FAQs
The complete and updated Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 3.5 எச்சம் is available for free on StudiesToday.com. These solutions for Class 8 Tamil are as per latest TN Board curriculum.
Yes, our experts have revised the Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 3.5 எச்சம் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.
Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 3.5 எச்சம் will help students to get full marks in the theory paper.
Yes, we provide bilingual support for Class 8 Tamil. You can access Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 3.5 எச்சம் in both English and Hindi medium.
Yes, you can download the entire Samacheer Kalvi Class 8 Tamil Solutions Chapter 3.5 எச்சம் in printable PDF format for offline study on any device.