Download TN Board Solutions for Class 7 Tamil Chapter 01.4 சொலவடைகள்
Review structured textbook solutions for Class 7 Tamil Chapter 01.4 சொலவடைகள். Built according to TN Board guidelines for the 2026-27 academic year, these downloadable answers support daily revision and problem-solving accuracy.
Access TN Board Solutions and Answers
View or download the dedicated Chapter 01.4 சொலவடைகள் solution resource below. Engaging with these textbook answers under focused study conditions ensures continuous academic progress and mastery of the 2026-27 curriculum for Tamil.
கற்பவை கற்றபின்
Question 1. உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
Answer:
1. வீட்டுக்கு வீடு வாசற் படி.
2. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்.
3. அடிச்சு வளக்காத புள்ளயும் ஒடிச்சு வளக்காத முருங்கையும் உருப்படாது.
4. எறச்ச கிணறு ஊறும்.
5. நாய் வித்த காசு கொலக்கவா செய்யும்.
6. ஊராரு புள்ளய ஊட்டி வளத்தா தன்புள்ள தன்னால் வளரும்.
7. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
8. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
9. காணி சோம்பல், கோடி கேடு.
10. மானேண்ணா புள்ளி கொறயுமா? மயிலேண்ணா எறகு உதிறுமா?
In simple words: உங்கள் வட்டாரத்தில் உள்ள பழமொழிகளைச் சேகரித்து இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பழமொழியும் ஒரு வாழ்க்கை உண்மையைச் சொல்லும்.
🎯 Exam Tip: பழமொழிகளைச் சேகரிக்கும்போது, உங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சொலவடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுங்கள். இது உங்கள் புரிதலைக் காட்டும்.
Question 2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக (எ.கா) குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் வாழ்ந்து வந்தான்.
Answer:
1. எறும்பு ஊரக் கல்லும் தேயும் :
மாணவர்களிடம் ஆசிரியர் "எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்பது போல தீய பழக்கங்களின் கொடுமையினைக் கூறி மனமாற்றம் அடையச் செய்வார். தொடர் முயற்சி கடினமான விஷயங்களையும் சாதிக்கும் என்பதைக் குறிக்கிறது.
2. சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
கற்பனையில் மிதந்து இருப்பவர்கள், "சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?" என்பதை உணர வேண்டும். வெறும் கனவுகள் மட்டும் போதாது, செயல்பட வேண்டும்.
3. அதிர அடிச்சா உதிர விளையும்:
"அதிர அடிச்சா உதிர விளையும்" என்பது போல வாழ்வில் முன்னேற தொடர்ந்து முயற்சி செய்தால் போதும். கடின உழைப்பு நல்ல பலனைத் தரும்.
4. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் :
"காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும்" என்பது போல உழைப்பவருக்குத் தான் பணத்தின் அருமை தெரியும். ஒருவரின் கஷ்டத்தை அனுபவித்தவருக்கே அதன் மதிப்பு தெரியும்.
5. பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா?
"தீயவன் கோடி ரூபாயைக் கோவில் உண்டியலில் போடுவது பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா?" என்பது போலப் புண்ணியம் கிடைக்குமா? தவறான வழியில் கிடைத்த செல்வம் ஒருபோதும் நல்ல பலனைத் தராது.
In simple words: பாடப்புத்தகத்தில் உள்ள சொலவடைகளில் இருந்து ஐந்து பழமொழிகளை எடுத்து, ஒவ்வொன்றையும் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பழமொழியும் ஒரு கருத்தை எளிதாக விளக்க உதவுகிறது.
🎯 Exam Tip: பழமொழிகளை வாக்கியத்தில் பயன்படுத்தும் போது, அதன் சரியான பொருளை வாக்கியம் வெளிப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டில் உள்ள வாக்கியத்தைப் போலவே நீங்கள் சுயமாக எழுதலாம்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
Question. பாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
Answer:
'ஆளுக்கு ஒரு வேலை'
முன்னுரை
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் 'ஆளுக்கு ஒரு வேலை' என்ற கதை இங்கு சிறுகதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
பையனின் பிடிவாதமும் பெற்றோர் அறிவுரையும்
ஒரு சிறிய குடும்பத்தில் அம்மா, அப்பா, ஒரு பையன் இருந்தனர். அந்தக் குடும்பத்தில் உள்ள பையன் சரியாகப் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றித் திரிவான். யார் அறிவுரை கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன். அவனுடைய பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியவில்லை. ஒருநாள் அவனுடைய அப்பா பையனிடம், "நீ இப்போது படிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது, பள்ளிக்கூடம் போய் படி" என்றார். அம்மாவும், படிக்கவில்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்கள்' என்றார். அவன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
விளையாட அழைத்தல்
வழக்கம் போலவே பள்ளிக் கூடத்தை விட்டு அவன் ஓட்டம் பிடித்தான். விளையாட யாராவது வருவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கே ஒரு எறும்பு வந்தது. அதனை விளையாட அழைத்தான். ஆனால் அந்த எறும்பு, தன்னுடைய குழந்தைகளுக்குத் தீனி கொடுக்க வேண்டும், அரிசி, தவிடு சேகரிக்க வேண்டும் என்று சொல்லி, "உனக்குத் தான் வேலை இல்லை" என்றது. பிறகு தேனீ, பொதிமாடு, ஆமை, முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாட அழைத்தான். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி விளையாட மறுத்துவிட்டன. அவனுக்குப் புத்தி புகட்டும் வண்ணம் அவை வேலை செய்வதை அவன் கண்டான்.
மனமாற்றம்
ஈரமான ஒரு சுவரின் மீது அவன் அமர்ந்தான். சுவர் இடிந்து, அதிலிருந்த பூச்சி, எறும்பு, வண்டு ஆகியன "உனக்குத் தான் வேலை இல்லை, நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!" என்றுச் சொல்லி அவனைக் கடித்தன. மனம் மாறிய அந்தப் பையன் தன் அம்மாவிடம், "உலகத்தில் எறும்பு, பூச்சி கூட சும்மா இல்லாமல் வேலை செய்கின்றன. படிப்பது தான் என் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்கின்றேன்" என்றான்.
முடிவுரை
"ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை உண்டு. மாணவர்களுக்குப் படிப்பது மட்டும் தான் நம் வேலை" என்பதை இக்கதையின் மூலம் நாம் அறியமுடிகின்றது. கதை உணர்த்தும் நீதி: படி! முதற்படி! அதுவே வாழ்க்கைப் படி!
In simple words: இந்தச் சிறுகதை, ஒரு மாணவன் கல்வி மற்றும் வேலையின் முக்கியத்துவத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறான் என்பதைக் கூறுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு கடமை உண்டு என்பதையும், படிப்பதன் அவசியம் குறித்தும் விளக்குகிறது.
🎯 Exam Tip: சிறுகதை எழுதும் போது, தெளிவான முன்னுரை, மையக்கருத்து, சம்பவங்களின் வரிசை மற்றும் ஒரு நல்ல முடிவுடன் கதையை எழுதுங்கள். நீதி வெளிப்படையாகத் தெரியும்படி கதை அமைய வேண்டும்.
Free study material for Tamil
Free TN Board Textbook Explanations: Class 7 Tamil Chapter 01.4 சொலவடைகள்
Accessing Chapter 01.4 சொலவடைகள் Solutions
Explore reliable textbook solutions for Chapter 01.4 சொலவடைகள் tailored for Class 7 learners. Utilizing these complete exercise answers ensures your preparation aligns exactly with official TN Board standards for Tamil.
Concept-Driven Answers for Class 7 Tamil
Beyond providing final answers, these guides offer step-by-step breakdowns for complex queries in the Class 7 Tamil module. This approach helps students balance theoretical depth with practical problem-solving skills required for TN Board exams.
Maximizing Study Efficiency
Consistent practice with these solution guides cultivates faster problem-solving habits and clearer logical structuring. For a complete preparation experience, pair these textbook answers with our dedicated revision notes and sample papers for Class 7 Tamil.
FAQs
The complete and updated Samacheer Kalvi Class 7 Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள் is available for free on StudiesToday.com. These solutions for Class 7 Tamil are as per latest TN Board curriculum.
Yes, our experts have revised the Samacheer Kalvi Class 7 Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.
Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 7 Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள் will help students to get full marks in the theory paper.
Yes, we provide bilingual support for Class 7 Tamil. You can access Samacheer Kalvi Class 7 Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள் in both English and Hindi medium.
Yes, you can download the entire Samacheer Kalvi Class 7 Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள் in printable PDF format for offline study on any device.