Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர்

NCERT Solutions for Class 6 Tamil: Chapter 08.2 நீங்கள் நல்லவர்

Access comprehensive textbook solutions for Chapter 08.2 நீங்கள் நல்லவர் using the official curriculum guides for Class 6 Tamil. Designed to align with the 2026-27 TN Board standards, these detailed answers help students reinforce core academic concepts.

Practice Class 6 Tamil Solutions: Chapter 08.2 நீங்கள் நல்லவர்

Navigate directly to the solved Tamil textbook exercises using the digital viewer below. Each solution includes detailed step-by-step explanations, allowing students to instantly cross-check their work and identify areas requiring further revision.

கற்பவை கற்றபின்

 

Question 1. உங்களது நிறை குறைகளைப் பட்டியலிடுக.
Answer:
நிறைகள்:
(i) பிடிக்காதவர்கள் வீட்டிற்கு வந்தாலும் புன்சிரிப்புடன் வரவேற்பேன்.
(ii) என் பெற்றோர் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பேன்.
(iii) என் வீட்டுப் பாடங்களை மற்றவர்கள் செய்வதற்கு முன் நானே செய்து முடிப்பேன்.
(iv) என் காலுறைகளையும் சீருடையையும் நானே துவைப்பேன்.
(v) என் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன். இது தனிநபரின் நல்ல பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
குறைகள்:
(i) மற்றவர்களின் நிறைகளைக் கவனிக்காமல், அவர்களிடம் உள்ள குறையை மட்டும் சொல்வது.
(ii) சில நேரங்களில் சுயநலமாகச் சிந்திப்பது.
(iii) பிறருக்கு உதவி செய்யக் கொஞ்சம் தயங்குவது.
(iv) மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் இருப்பது.
In simple words: உங்களது நல்ல குணங்களையும், சில குறைபாடுகளையும் பட்டியலிட வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வது, பெற்றோருக்குக் கட்டுப்படுவது போன்றவை நிறைகளாகும். சுயநலம், மற்றவர் கருத்தை மதிக்காமை போன்றவை குறைகளாகும்.

🎯 Exam Tip: தனிப்பட்ட குணங்களை விவரிக்கும்போது, நேர்மறை மற்றும் எதிர்மறைப் பண்புகள் இரண்டையும் குறிப்பிடவும்.

 

Question 2. உங்கள் நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள்:
(i) நண்பன் தேர்வில் தோல்வியுற்று வருந்தினால், 'தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி' என்று கூறி அவனைச் சமாதானப்படுத்துவேன். அடுத்தத் தேர்விற்கு எப்படிப் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவேன்.
(ii) முக்கியமான வினாக்கள் எவை என்று கேட்டுப் படிப்பதற்கும், தினமும் படிக்கும் முறையையும் அவனுக்குச் சொல்லித் தேற்றுவேன். பெற்றோரின் உதவியுடன் படிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பேன்.
(iii) வீட்டில் சகோதரர்களுடன் சண்டையிட்டு மனம் சோர்ந்து இருந்தால், பிறரிடம் விட்டுக் கொடுத்து வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுவேன். விட்டுக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை என்பதை விளக்குவேன்.
(iv) நம்மை விடச் சிறியவராக இருந்தாலும் அவர்களிடம் பணிவாகப் பேசினால், நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். அன்பாகப் பேசினால் அனைவரும் நம்மிடம் பழகுவார்கள்.
(v) வருந்துவதற்கான சூழலே வராது என்பதை நண்பனுக்கு உணர்த்துவேன். பெற்றோர்கள் நம்மைக் கடிந்து கொண்டால் அது நம் நன்மைக்காகத்தான் என்பதைப் புரியவைத்து அவனைத் தேற்றுவேன். இது நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
In simple words: உங்கள் நண்பர் சோகமாக இருக்கும்போது, அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வீர்கள் என்பதை விவரிக்க வேண்டும். தோல்வி வந்தால் எப்படி எதிர்கொள்வது, படிப்பில் எப்படி முன்னேறுவது, குடும்பத்தில் எப்படி நடந்துகொள்வது போன்றவற்றைச் சொல்லித் தேற்றுவீர்கள்.

🎯 Exam Tip: ஒருவரைத் தேற்றும் வழிகளை எழுதும்போது, படிப்பு, உறவுகள், பொது அறிவுரைகள் எனப் பல்வேறு கோணங்களில் எழுதுவது முழு மதிப்பெண் பெற உதவும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

Question 1. பரிசு பெறும்போது நம் மனநிலை ............ ஆக இருக்கும்.
(a) கவலை
(b) துன்பம்
(c) மகிழ்ச்சி
(d) சோர்வு
Answer: (c) மகிழ்ச்சி
In simple words: பரிசு வாங்கும்போது நாம் மகிழ்ச்சியாக உணர்வோம்.

🎯 Exam Tip: இத்தகைய கேள்விகளுக்கு சரியான உணர்ச்சி அல்லது நிலையைத் தேர்வு செய்ய சூழலை சிந்திக்கவும்.

 

Question 2. வாழ்வில் உயர் கடினமாக ............ வேண்டும்.
(a) பேச
(b) சிரிக்க
(c) நடக்க
(d) உழைக்க
Answer: (d) உழைக்க
In simple words: வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

🎯 Exam Tip: கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து பொருத்தமான மற்றும் ஊக்கமளிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

குறுவினா

 

Question 1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
Answer: பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது. பழம், தனது இனிப்பைக் கொடுத்துப் பலருக்கும் பயனளிக்கும். வேர், மண்ணிலிருந்து நீரை உறிஞ்சி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும்.
In simple words: பழம் பிறருக்குத் தரும், வேர் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

🎯 Exam Tip: இந்த வினாவிற்கு பழம் மற்றும் வேரின் தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகளைச் சரியாகக் குறிப்பிடவும்.

 

Question 2. உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?
Answer: உழைக்கும் போது நாம் புல்லாங்குழலாகிறோம். புல்லாங்குழல் ஒலி எழுப்பும்போது, அது தனது காற்று முழுவதையும் கொடுத்து இனிமையான இசையை உருவாக்குவதைப் போல, நாமும் நம் உழைப்பைக் கொடுத்து நல்ல பலன்களைப் பெறுவோம்.
In simple words: நாம் கடினமாக உழைக்கும்போது, புல்லாங்குழல் போல் நமக்குள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி நல்ல விளைவுகளை உருவாக்குகிறோம்.

🎯 Exam Tip: உழைப்பையும் புல்லாங்குழலையும் இணைத்து, உழைப்பின் பயனை அழகாக விவரிக்கவும்.

சிறுவினா

 

Question 1. நீங்கள் நல்லவர் என்னும் இப்பாடல் விளக்கும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer: நீங்கள் நல்லவர் என்னும் பாடல் விளக்கும் கருத்துகள்:
(i) காலம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். முதிர்ந்த வயதுடையவர்கள் தங்கள் இளமைக்காலத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாது. நேற்று நடந்தவை இன்று நடப்பதில்லை. பறவைகளின் சிறகுகள் காற்றின் வேகத்திற்கு இணையாக உயருவது போல, நாமும் செயல்பட வேண்டும்.
(ii) நீங்கள் உழைக்கும்போது புல்லாங்குழலைப் போன்று மாறிவிடுகிறீர்கள். புல்லாங்குழல் காலத்திற்கு ஏற்ற இசையை இனிமையாக மாற்றுகிறது. உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச முடியும். தீய விஷயங்களைப் பற்றிப் பேசக்கூடாது.
(iii) நீங்கள் சுயசிந்தனையுடன் ஒன்றிணைந்து செயல்படும்போது நல்லவராக இருக்கின்றீர்கள். 'என்னைப்போல் இரு. உன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமையாகக் கொடு' என்று பழம், வேரைப் பார்த்து ஒருபோதும் சொல்லாது. பயனை முழுமையாகக் கொடுக்கும் இயல்பு பழத்திற்கு உண்டு. மண்ணிலிருந்து பெற்றுக்கொள்ளும் இயல்பு வேருக்கு உண்டு.
(iv) நீங்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் இலட்சியப் பாதையில் செல்லும்போது, செய்யும் செயலை உறுதியுடன் செய்து வெற்றி பெற்றால் 'நீங்கள் நல்லவர்' என்று பாடல் கூறுகிறது. இப்பாடல் இயற்கையின் நியதிகளையும் மனிதர்களின் பொறுப்புகளையும் இணைத்துப் பேசுகிறது.
In simple words: 'நீங்கள் நல்லவர்' என்ற பாடல் காலம் மாறும் என்பதைச் சொல்கிறது. உழைத்தால் புல்லாங்குழல் போல் நன்மை கிடைக்கும். சுயசிந்தனையுடன் நல்லவராயிருங்கள். இலட்சியப் பாதையில் உறுதியுடன் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்கிறது.

🎯 Exam Tip: பாடலின் முக்கிய கருத்துகளைப் பிரித்துப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றையும் சுருக்கமாக விளக்குவது சிறந்தது.

சிந்தனை வினா

 

Question 1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?
Answer: நல்லவர் என்னும் பெயர் பெற நாம் செய்ய வேண்டுவன:
வீட்டில்:
(i) பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல்.
(ii) பெரியோரை மதித்தல்.
(iii) வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மரியாதையுடன் பேசுதல், அவர்கள் கூறுவதைக் கேட்டல், அவர்களுடன் அன்புடன் பழகுதல்.
(iv) வீட்டில் அப்பா அம்மாவிற்குச் சிறுசிறு வேலைகள் செய்தல்.
பள்ளியில்:
(i) ஆசிரியர்கள் கூறும் வீட்டுப் பாடங்களை முடித்து வருதல்.
(ii) வகுப்பில் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனித்தல்.
(iii) மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தல்.
(iv) சக மாணவர்களுடன் சண்டையிடாமல் அன்புடன் பழகுதல்.
(v) பிறர் குறைகளைக் கூறாமல் நிறைகளை மட்டும் கூறுதல்.
பொது இடங்களில்:
(i) நாம் செல்கின்ற வழியில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவி செய்தல் (சாலையைக் கடப்பது, அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி கூறுதல் போன்றவை).
(ii) விபத்து நேரிட்டால் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றைச் செய்கின்றவர்கள் நல்லவர் என்ற பெயர் பெறுவார்கள். இந்த செயல்கள் அனைத்தும் நம்மைச் சிறந்த மனிதர்களாக உருவாக்கும்.
In simple words: நல்லவர் எனப் பெயர் பெற வீட்டில் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், பெரியோரை மதிக்க வேண்டும். பள்ளியில் நன்றாகப் படித்து, சக மாணவர்களுக்கு உதவ வேண்டும். பொது இடங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

🎯 Exam Tip: இந்த வினாவிற்கு மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு இடத்திலும் எப்படி நல்லவராகச் செயல்படலாம் எனப் பல உதாரணங்களுடன் எழுதுவது அவசியம்.

 

Question 2. உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.
Answer: என்னுடைய குறிக்கோள் - சிறந்த மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஆதல்:
(i) எனக்குள் பல விருப்பங்களும், இலட்சியங்களும் இருந்துகொண்டே இருக்கும். என் மனமும் அவற்றை அசைபோட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றுள் மட்டைப்பந்து விளையாட்டில் மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில் என முதலிடம் பெற்று இந்த உலகையே என்னைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
(ii) என் விருப்பமே என்னுடைய குறிக்கோளாக மாறிவிட்டது. இந்த இலட்சியப் பாதையைக் கடப்பதற்கு நான் செய்ய வேண்டியது, பல ஆசைகள் இருந்தாலும் ஒன்றை மட்டும் தேர்வு செய்வேன்.
(iii) இவ்விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு முடியுமா? முடியாதா? சரியா? தவறா? என்று யோசித்துத் தீர்மானம் செய்துகொள்வேன்.
(iv) 'திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்' என்பதால் திட்டமிடுவேன். பள்ளிக்குச் செல்லும் நேரம், பாடங்களைப் படிப்பதற்கான நேரம், காலை, மாலை விளையாடுவதற்கான நேரம் இவற்றைத் திட்டமிடுவேன்.
(v) திட்டமிட்டபடி தினமும் விளையாடுவேன். என்னுடைய முயற்சியும் தினமும் செய்யும் பயிற்சியும் என்னை வெற்றி பெறச் செய்யும். இவ்வாறு என் குறிக்கோளை அடைவேன். இந்த முறையான திட்டமிடல் மற்றும் பயிற்சி ஒரு விளையாட்டில் வெற்றி பெற இன்றியமையாதது.
In simple words: உங்கள் குறிக்கோளை அடைய என்னென்ன முயற்சி செய்வீர்கள் என்பதை விவரிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்றால், தினமும் பயிற்சி செய்வது, திட்டமிடுவது, கடுமையாக உழைப்பது போன்றவற்றை எழுதலாம்.

🎯 Exam Tip: உங்கள் குறிக்கோளையும், அதை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளையும் தெளிவாகவும், படிப்படியாகவும், தன்னம்பிக்கையுடனும் விவரிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

 

Question 1. கலீல் கிப்ரான் நாட்டைச் சேர்ந்தவர்.
Question 2. 'நீங்கள் நல்லவர்' என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
Question 3. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர்
Answer:
1. லெபனான்
2. தீர்க்கதரிசி
3. புவியரசு
In simple words: கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். 'நீங்கள் நல்லவர்' பாடல் 'தீர்க்கதரிசி' நூலில் உள்ளது. புவியரசு அந்த நூலை மொழிபெயர்த்தார்.

🎯 Exam Tip: ஆசிரியர், நூல் மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற தகவல்களைச் சரியாக நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Tamil Class 6 Curriculum Solutions: Chapter 08.2 நீங்கள் நல்லவர்

Chapter Exercise Answers for Class 6 Tamil

Review comprehensive exercise answers for Class 6 Tamil Chapter 08.2 நீங்கள் நல்லவர். Fully updated to match current TN Board syllabus guidelines, these textbook solutions help students verify their work and maintain accurate study notes.

Detailed Answer Guides for Chapter 08.2 நீங்கள் நல்லவர்

Clear, methodical explanations accompany every challenging problem within the Class 6 Tamil text. Engaging with these detailed answers lays a solid foundation for advanced learning and improves foundational clarity for upcoming assessments.

Complete Preparation Kit for Class 6 Exams

Frequent review of these structured answers builds strong analytical capabilities and response efficiency. Maximize your academic readiness by combining these textbook solutions with our curated study materials and mock evaluations for Class 6 Tamil.

FAQs

Where can I find the latest Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் for the 2026-27 session?

The complete and updated Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் is available for free on StudiesToday.com. These solutions for Class 6 Tamil are as per latest TN Board curriculum.

Are the Tamil TN Board solutions for Class 6 updated for the new 50% competency-based exam pattern?

Yes, our experts have revised the Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.

How do these Class 6 TN Board solutions help in scoring 90% plus marks?

Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் will help students to get full marks in the theory paper.

Do you offer Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் in multiple languages like Hindi and English?

Yes, we provide bilingual support for Class 6 Tamil. You can access Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் in both English and Hindi medium.

Is it possible to download the Tamil TN Board solutions for Class 6 as a PDF?

Yes, you can download the entire Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர் in printable PDF format for offline study on any device.