Get the most accurate TN Board Solutions for Class 6 Tamil Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 6 Tamil. Our expert-created answers for Class 6 Tamil are available for free download in PDF format.
Detailed Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் TN Board Solutions for Class 6 Tamil
For Class 6 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 6 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் solutions will improve your exam performance.
Class 6 Tamil Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் TN Board Solutions PDF
Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்
கற்பவை கற்றபின்
Question 1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.
Answer: மாணவர்கள் பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை தங்கள் சொந்த இசையில் பாடி மகிழலாம். இப்பாடல் இந்தியாவின் பெருமைகளையும் கலாச்சாரத்தையும் சிறப்பிக்கிறது.
In simple words: Students can sing the poem "Bharatham Andraya Naatrangal" in their own tunes and enjoy it.
🎯 Exam Tip: When asked to present a creative or performance-based answer, explain how a student would typically engage with the task.
Question 2. நாட்டு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
(i) இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்கள் இருப்பது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக விளங்குபவர்கள் மாணவர்கள்தான். நாம் நமது ஆற்றலை சரியான வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்பட வேண்டும். கல்வி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தூணாகும்.
(ii) நம்மைப் போன்ற மாணவர்களால் எதிர்கால வரலாற்றைச் சிறப்பாக மாற்ற முடியும். மாணவர்கள் இள வயதிலேயே சமூகத் தொண்டு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி இயக்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தொண்டு எந்தப் பிரதிபலனும் எதிர்பாராத தொண்டாக இருக்க வேண்டும்.
(iii) சமூகத் தொண்டு செய்ய முன்வரும் மாணவர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாமல், அடக்கமாக வாழ வேண்டும். ஏமாற்றங்கள் ஏற்பட்டால் பொறுமையுடன் அதனைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும். அளவில்லாத பொறுமையும், கீழ்ப்படியும் குணமும் அவர்களுக்கு மிக அவசியம்.
(iv) அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல் 'வானம்தான் எல்லை, நான் பறந்து கொண்டே இருப்பேன்' என்பது போல, நம்முடைய வாழ்க்கையில் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்கி, நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கனவுகளை நனவாக்க இடைவிடாத முயற்சி அவசியம்.
(v) ஆபத்து காலங்களில் மட்டும் அல்லாமல், எந்த நிலையிலும் பிறரது துயரத்தைப் போக்க நாம் உதவ வேண்டும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளைச் செய்யலாம். பிறருக்கு உதவும் எண்ணம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வளர வேண்டும்.
(vi) சுத்தமான குடிநீர், நல்ல உணவு போன்றவை ஏழை, எளியவர்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் வராமல் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
(vii) குளம், குட்டைகளை ஆழப்படுத்துதல், மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல், புதியதாக மரக்கன்றுகள் நடுதல், அனைத்து வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் போன்றவை தற்போதைய தேவைகளாக உள்ளன. இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் செய்ய வேண்டும்.
(viii) விழா காலங்களில் பொது இடங்களில் மக்கள் வரிசையில் செல்ல ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளையும் செய்யலாம். சமூகத்தில் ஒழுங்கையும் பாதுகாப்பையும் பேணுவது முக்கியம்.
(ix) சுவாமி விவேகானந்தர் "துறவும் தொண்டும்தான் இந்தியாவின் லட்சியங்கள்; அந்த இருவழிகளில் நாட்டைச் செலுத்தினால் மற்றவை தாமாக சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார். இந்த இரு வழிகளில் மாணவர்கள் தொண்டு செய்து நாடு வளம் பெற வழி செய்ய வேண்டும்.
In simple words: Students are key for the nation's progress. They should use their energy for development, listen to elders, and help others. Taking part in social service, being humble, and working hard are important. They should spread awareness about health, protect the environment, and help during festivals. Following Swami Vivekananda's words, service and sacrifice will make the nation rich.
🎯 Exam Tip: When discussing national development, focus on practical contributions students can make, highlighting both academic and social responsibilities.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1. தேசம் உடுத்திய நூலாட எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
(அ) திருவாசகம்
(ஆ) திருக்குறள்
(இ) திரிகடுகம்
(ஈ) திருப்பாவை
Answer: (ஆ) திருக்குறள்
In simple words: The poet refers to Thirukkural as the garment worn by the nation.
🎯 Exam Tip: Pay attention to poetic descriptions of famous Tamil literature, as these often appear in multiple-choice questions.
Question 2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
(அ) காவிரிக்கரை
(ஆ) வைகைக்கரை
(இ) கங்கைக்கரை
(ஈ) யமுனைக்கரை
Answer: (அ) காவிரிக்கரை
In simple words: The sweet songs of Kalidas echo along the banks of the Kaveri river.
🎯 Exam Tip: Remember specific geographical references associated with poets or literary works mentioned in the text.
Question 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது
(அ) சிற்பக்கூடம்
(ஆ) ஓவியக்கூடம்
(இ) பள்ளிக்கூடம்
(ஈ) சிறைக்கூடம்
Answer: (அ) சிற்பக்கூடம்
In simple words: A sculpture gallery appears like an art gallery.
🎯 Exam Tip: Understand the meaning of terms and their associations, especially when describing cultural or artistic places.
Question 4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) நூல் + ஆடை
(ஆ) நூலா + டை
(இ) நூல் + லாடை
(ஈ) நூலா + ஆட
Answer: (அ) நூல் + ஆடை
In simple words: When split, the word "Noolda" becomes "Nool" (book/thread) + "Aadai" (garment).
🎯 Exam Tip: Practice compound word splitting (பிரித்து எழுதுக) in Tamil, as it's a common grammar question type.
Question 5. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(அ) எதிரலிக்க
(ஆ) எதிர்ஒலிக்க
(இ) எதிரொலிக்க
(ஈ) எதிர்ரொலிக்க
Answer: (இ) எதிரொலிக்க
In simple words: When "Ethir" (against) and "Olikka" (to sound) are combined, they form "Ethirolikka" (to echo).
🎯 Exam Tip: Focus on the rules of combining words (சேர்த்து எழுதுக) in Tamil, especially when vowels meet consonants or other vowels.
நயம் அறிக
Question 1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
எதுகை :
மெய்களை - மெய்யுணர்வு
அன்னை – அன்னிய
மோனை :
புதுமை – பூமி
தெய்வ - தேசம்
மெய்களை - மெய்யுணர்வு
காளி - காவிரி
கம்பனின் - தங்கை
கன்னி - காஷ்மீர்
புல்வெளி - புன்னகை
கல்லை – கட்டி
அன்னை – அண்ணல் - அறத்தின்
In simple words: Identify words that start with the same sound (மோனை) or have the same second letter (எதுகை) in the poem. These poetic devices add beauty to the poem.
🎯 Exam Tip: Understanding எதுகை (rhyme scheme where the second letter of words in a line or stanza rhymes) and மோனை (alliteration, where the first letter/sound of words in a line or stanza is the same) is crucial for Tamil literary analysis.
Question 1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer: தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்கள்:
(i) திருவள்ளுவர்
(ii) காளிதாசர்
(iii) கம்பர்.
இவர்கள் அனைவரும் இந்திய இலக்கியத்தின் மிக முக்கியமான தூண்கள்.
In simple words: The poets mentioned in Tharabarathi's poem are Thiruvalluvar, Kalidasa, and Kambar.
🎯 Exam Tip: Memorize the names of poets and authors mentioned in the text, as questions often test recall of these figures.
Question 2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
Answer: இந்தியாவின் மேற்குத் திசையில் தோன்றும் நதிகள் அனைத்தும் கிழக்கு எல்லை வரை பாய்ந்து மக்களுக்கு நன்மைகளை விளைவிக்கின்றன. இது நாட்டின் வளத்திற்கும், மக்களின் வாழ்வுக்கும் அத்தியாவசியமாகும்.
In simple words: The poet shows how rivers starting in the west flow to the eastern borders, bringing goodness and prosperity to the people.
🎯 Exam Tip: When describing poetic imagery, ensure you capture the essence of the description and its symbolic meaning, like unity or prosperity.
சிறுவினா
Question 1. தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக.
Answer: தாராபாரதி பாடலின் பொருள்:
(i) பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்திய நாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஓர் ஆடையாக விளங்குகிறது. திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது.
(ii) உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகிறது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன.
(iii) கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. கவிதைகள் நம் மனதை அமைதிப்படுத்தும்.
(iv) குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
(v) புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சித் தருகின்றன.
(vi) அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகள் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.
In simple words: Tharabarathi's poem praises India as a land of innovations, where Thirukkural is its garment and truth is its crown. It talks about Kalidas's songs echoing by Kaveri, Kambar's poems flowing with the Ganga, and Kashmir's flowers adorning Kanyakumari. It describes India as a never-ending source of giving, feeding other nations, and where Gandhi's ahimsa is the staff of righteousness.
🎯 Exam Tip: When summarizing a poem's theme, make sure to cover all the main points and imagery used by the poet in a concise manner.
சிந்தனைவினா
Question 1. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer: நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை:
(i) இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் மன்னர்கள் என்றும் நாட்டைத் தாங்கும் தூண்கள் என்றும் கூறிக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? போதாது. அதனை மெய்ப்படுத்த மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் உள்ளது.
(ii) ஆம், இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான் உள்ளது. மாண் + அவன் = மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஊக்கத்தில் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது.
(iii) மண்ணைக் குழைத்தால்தான் நாம் விரும்பிய வண்ணம் மட்பாண்டங்கள் செய்யவியலும். கல்லை உளியால் செதுக்கினால்தான் அழகான சிலை உருவாகும். அவற்றை போல மாணவர்களைச் செம்மைப்படுத்தினால்தான் நம் நாடு வளரும். மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல் அவசியம்.
(iv) பூகோளப் பாடத்தில் இந்திய வரைபடம் வரையும் போது எந்த மாநிலங்களில் எந்தெந்த நதிகள் பாய்கின்றன? அவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் யாவை? அவற்றால் பயனடையும் நிலப்பரப்பு அளவு யாது? நம் நாட்டில் விளையும் பயிர்கள் யாவை? போன்ற விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவப் பருவத்தில் இவற்றையெல்லாம் அறிந்தால்தான் எதிர்காலத்தில் நாட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவனிடத்தில் தோன்றும்.
(v) ஒவ்வொரு மாணவனும், படித்த ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட வேண்டும். நாட்டை நல்வழிப்படுத்தவும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தவும் மாணவர்களின் மகத்தான பொறுப்பே முதலிடத்தில் உள்ளது. தனது குடும்பம் வளர்ச்சி அடைந்தால் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.
(vi) படித்துவிட்டு வேலைக்குப் போகிறோம், வருவாயைப் பெற்றோரிடம் கொடுத்தோம் என்று இல்லாமல் பெற்றோருக்கு உதவுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், கிராமப்புற இளைஞர்கள் காலை, மாலை வேளைகளில் வயலுக்குச் சென்று தந்தைக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். ஒவ்வொரு மாணவனும் இதைக் கடைப்பிடித்தால் நாடு கண்டிப்பாக முன்னேறும்.
(vii) மனிதநேயம் வளர மாணவர்கள் பாடுபடுதல் அவசியம். சமூகத் தொண்டுகளில் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மனிதநேயம் என்பது நாட்டின் மிக உயர்ந்த பண்பு.
In simple words: For national progress, students must actively work, not just talk. They are the pillars of the future, responsible for India's growth. Just as clay is molded or stone is sculpted, students must be shaped for the nation to prosper. They should learn about India's geography, rivers, and crops to be aware citizens. Students should first help their families rise, then elevate the nation. They can assist parents with chores or farm work. Finally, they must cultivate humanity and volunteer selflessly, especially for the poor.
🎯 Exam Tip: Structure your answer with clear points, starting with the importance of students, then listing specific actions they can take for personal, family, and national development.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
Question 1. இந்தியத் தாய்க்கு ......... நூலாடை.
Answer: இந்தியத் தாய்க்கு திருக்குறள் நூலாடை.
In simple words: Thirukkural is the literary garment of Mother India.
🎯 Exam Tip: Fill-in-the-blank questions often test direct recall of key facts or poetic descriptions from the lesson.
Question 2. இந்தியத் தாய்க்கு ......... என்பது மேலாடை.
Answer: இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்பது மேலாடை.
In simple words: Truth and wisdom are the upper garment of Mother India.
🎯 Exam Tip: Understand the metaphorical meanings in poems, such as what represents a "garment" or "upper garment" for the nation.
Question 3. கன்னிக்குமரியின் கூந்தலுக்குப் பூத்தொடுப்பது ......... தோட்டம்.
Answer: கன்னிக்குமரியின் கூந்தலுக்குப் பூத்தொடுப்பது காஷ்மீர் தோட்டம்.
In simple words: Kashmir's garden provides flowers to adorn the hair of Kanyakumari.
🎯 Exam Tip: Note the symbolic connections between different regions of India as presented in the poem, emphasizing unity.
Question 4. அள்ள அள்ளக் குறையாதது .........
Answer: அள்ள அள்ளக் குறையாதது அமுத சுரபி.
In simple words: That which never diminishes, no matter how much is taken, is the divine pot of abundance.
🎯 Exam Tip: This refers to a mythological vessel that provides endless food. Understand such cultural references.
Question 5. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது .........
Answer: பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது இந்தியா.
In simple words: India is considered the eastern gateway of the Earth.
🎯 Exam Tip: Pay attention to unique descriptions or titles given to India within the poem.
Question 6. தாராபாரதியின் இயற்பெயர் .........
Answer: தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
In simple words: Tharabarathi's real name is Radhakrishnan.
🎯 Exam Tip: Always remember the real names and pen names of poets and authors.
Question 7. தாராபாரதி பெற்ற அடைமொழி .........
Answer: தாராபாரதி பெற்ற அடைமொழி கவிஞாயிறு.
In simple words: The title given to Tharabarathi is "Kavinayiru" (Sun of Poets).
🎯 Exam Tip: Knowing the honorary titles or epithets given to poets is important for biographical questions.
Question 8. புதுமைகளைச் செய்த நாடு .........
Answer: புதுமைகளைச் செய்த நாடு இந்தியத் திருநாடு.
In simple words: The holy land of India is the nation that has created many innovations.
🎯 Exam Tip: Understand the key characteristics attributed to India in the poem.
Question 9. அண்ணல் காந்தியின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி அறத்தின் ............. ஆக விளங்கும்.
Answer: அண்ணல் காந்தியின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி அறத்தின் ஊன்றுகோல் ஆக விளங்கும்.
In simple words: Mahatma Gandhi's small staff of non-violence serves as the support for righteousness.
🎯 Exam Tip: Connect historical figures and their core principles (like Gandhi's ahimsa) with the symbolic representations in the poem.
விடையளி
Question 1. இந்திய நாட்டின் ஆடைகளாக விளங்குபவை எவை?
Answer: இந்திய நாட்டின் ஆடைகளாக விளங்குபவை:
(i) திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது. திருக்குறள் காலம் கடந்தும் நீடித்து நிலைக்கும் ஒரு சிறந்த இலக்கியம்.
(ii) உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகிறது. உண்மை அறிவே நாட்டின் அணிகலன்.
In simple words: Thirukkural is the garment, and true knowledge is the upper garment for Mother India.
🎯 Exam Tip: Identify the two main metaphorical garments mentioned in the poem and explain their significance.
Question 2. காளிதாசர், கம்பர் பற்றி தாராபாரதியின் கவிதைகள் கூறுவது யாது?
Answer: தாராபாரதியின் கவிதைகள் காளிதாசர், கம்பர் பற்றி கூறுவது:
(i) காளிதாசரின் இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. அவரது கவிதைகள் இயற்கையோடு இணைந்தவை.
(ii) கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. கம்பராமாயணம் ஒரு மகத்தான காவியமாகும்.
In simple words: Tharabarathi's poems say that Kalidas's sweet songs echo by the Kaveri river, and the waves of the Ganga river provide music to Kambar's nectar-like poetry.
🎯 Exam Tip: Clearly state the specific contributions or descriptions of each poet as mentioned in the poem.
Question 3. பொற்காலம், கலைக்கூடம் எனக் குறிப்பிடப்படுபவை எவை?
Answer: பொற்காலம், கலைக்கூடம் எனக் குறிப்பிடப்படுபவை:
(i) புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. இது நாட்டின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.
(ii) கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சியளிக்கின்றன. சிற்பக்கலை இந்தியாவின் ஒரு சிறந்த அடையாளம்.
In simple words: Green fields filled with blooming flowers are described as a golden age, and carved stone sculptures are referred to as an art gallery.
🎯 Exam Tip: Differentiate between the "golden age" (nature's beauty) and the "art gallery" (man-made sculptures) in your answer.
Question 4. பாரதநாடு எவ்வாறு திகழ்கிறது?
Answer: அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. இந்தியா ஒரு வளமான மற்றும் ஈகை குணம் கொண்ட நாடு.
In simple words: Mother India is like a never-ending pot of nectar, constantly providing and alleviating the hunger of people from other nations.
🎯 Exam Tip: Emphasize India's generosity and abundance in your description, using the simile of "Amudhasurabhi."
Question 5. அறத்தின் ஊன்றுகோல் எது?
Answer: காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி அறத்தின் ஊன்றுகோலாக விளங்குகின்றது. அகிம்சை என்பது அறத்தின் அடிப்படையாகும்.
In simple words: Mahatma Gandhi's small staff of non-violence is the support for righteousness.
🎯 Exam Tip: Clearly state that Gandhi's non-violence symbolizes the foundation or support of righteousness.
Question 6. தாராபாரதி – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். அவரது பாடல்கள் தமிழ் மொழியின் செழுமையைப் பறைசாற்றுகின்றன.
(ii) இவரது அடைமொழி கவிஞாயிறு. இந்த அடைமொழி அவரது கவித்திறனைப் புகழ்கிறது.
(iii) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் ஆகியவை இவர் இயற்றிய நூல்கள். அவரது படைப்புகள் சமூக சிந்தனைகளைத் தூண்டுகின்றன.
In simple words: Tharabarathi's real name is Radhakrishnan, and he is known by the title "Kavinayiru." Some of his works include "Pudhiya Vidiyalkal," "Idhu Engal Kilakku," and "Viralnuni Velichangal."
🎯 Exam Tip: For author profiles, always include their real name, any titles/epithets, and a few of their major works.
நூல் வெளி
Question. தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
Answer: தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். அவர் 'கவிஞாயிறு' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர். 'புதிய விடியல்கள்', 'இது எங்கள் கிழக்கு', 'விரல் நுனி வெளிச்சங்கள்' ஆகியவை அவர் எழுதிய முக்கியமான புத்தகங்கள். இந்த பாடம் 'தாராபாரதியின் கவிதைகள்' என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவரது கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சிறந்த பங்களிப்பாகும்.
In simple words: Tharabarathi's real name is Radhakrishnan, and he earned the title 'Kavinayiru'. His works include 'Pudhiya Vidiyalkal', 'Idhu Engal Kilakku', and 'Viral Nuni Velichangal'. This poem is part of his collection 'Tharabarathi's Kavithaigal'.
🎯 Exam Tip: When providing details about a poet, ensure you include their real name, pen name (if any), and the titles of their notable works, especially the one from which the current lesson is derived.
பாடலின் பொருள்
Question. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகிறது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.
Answer: நமது இந்தியா, உலகின் கிழக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பெரிய வாசல் போன்றது. பல புதிய கண்டுபிடிப்புகளையும் சிறந்த விஷயங்களையும் செய்த நாடு இது. திருக்குறள் என்ற நூல், நம் நாட்டிற்கு ஒரு அழகான உடை போல இருக்கிறது. உண்மை அறிவைப் போற்றும் இந்தியத் தாய்க்கு, மெய்யுணர்வு ஒரு மேலான உடை போன்றது. காளிதாசர் எழுதிய இனிமையான பாடல்கள் காவிரி ஆற்றின் கரையோரம் எதிரொலிக்கின்றன. கம்பர் எழுதிய தேன் போன்ற கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. காஷ்மீரில் உள்ள பூக்கள், கன்னிமுனையில் உள்ள தேவியின் கூந்தலை அலங்கரிக்க மாலையாகக் கட்டப்படுகின்றன. மேற்கே ஆரம்பிக்கும் ஆறுகள் அனைத்தும் இந்தியாவின் கிழக்கு எல்லை வரை ஓடி, மக்களுக்கு பல நன்மைகளைச் செய்கின்றன. பூக்கள் பூத்துக் குலுங்கும் புல்வெளிகள், பொற்காலம் போல புன்னகைக்கின்றன. பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் அழகான கலைக் கூடங்கள் போல காட்சியளிக்கின்றன. நம் தாய் நாடான இந்தியா, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்றது. இது நம் நாட்டு மக்களின் பசியை மட்டும் அல்லாமல், மற்ற நாடுகளின் மக்களின் பசியையும் போக்குகிறது. மகாத்மா காந்தியின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி, நல்லறத்திற்கு ஒரு பெரிய துணையாக இருக்கிறது. இந்தியாவின் இந்த பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாக தொடரும்.
In simple words: India is like the eastern gateway of the world, a land of many innovations. Thirukkural is its garment, and true spiritual knowledge is its crown. Kalidas's sweet songs echo by the Kaveri, and Kambar's nectar-like poems are set to the music of Ganga's waves. Flowers from Kashmir adorn Kanyakumari's hair. Rivers from the west flow east, bringing prosperity. Flower-filled meadows smile like a golden age, and carved sculptures look like art galleries. Mother India is like a never-ending vessel of abundance, feeding its own people and others. Gandhi's non-violence is the staff of righteousness.
🎯 Exam Tip: When asked to explain the meaning of a poem, break it down stanza by stanza or idea by idea, explaining all metaphors and allusions clearly. Ensure the essence of each part is conveyed accurately.
Free study material for Tamil
TN Board Solutions Class 6 Tamil Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்
Students can now access the TN Board Solutions for Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 6 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.
Detailed Explanations for Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்
Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 6 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 6 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.
Benefits of using Tamil Class 6 Solved Papers
Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 6 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 07.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் to get a complete preparation experience.
FAQs
The complete and updated Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் is available for free on StudiesToday.com. These solutions for Class 6 Tamil are as per latest TN Board curriculum.
Yes, our experts have revised the Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.
Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் will help students to get full marks in the theory paper.
Yes, we provide bilingual support for Class 6 Tamil. You can access Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் in both English and Hindi medium.
Yes, you can download the entire Samacheer Kalvi Class 6 Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் in printable PDF format for offline study on any device.